புதன், 31 அக்டோபர், 2018

வடசென்னை


Medusa க்கான பட முடிவு
https://www.google.co.in/search?q=Medusa&tbm=isch&source=iu&ictx=1&fir=GdibAzWZRn7wPM%253A%252CnJgvdOUHUSsGwM%252C_&usg=AI4_-kS3xfPneXk1wntO9C7S_AA2_cXZAQ&sa=X&ved=2ahUKEwjxtouk2bDeAhUV5LwKHRtwAi8Q_h0wFXoECAQQCg&biw=736&bih=435&dpr=1.56#imgrc=GdibAzWZRn7wPM:

நன்றி  மேலே சுட்டிய படத்திற்கு.





வடசென்னை
===================================================ருத்ரா

வெற்றிமாறன்
திரைப்பட நிழற்காட்டில்
இது வரை பறித்ததெல்லாம்
"வெற்றி"க்கனியே.
இதுவும் அப்படியொரு
அருங்கனி.
வெறி துரோகம் கொலை
ரத்தவர்ணம்
இவற்றையும் மீறிய‌
சமுதாயத்தின்
ஒரு உள் நிறம்
மனிதம் மீது தூரிகையாய்
ஒரு அற்புதம் படைத்திருக்கிறது.
இது இயக்குனரின் முழுவெற்றி.
ஒரு தனுஷ் அல்ல‌
ஒன்று ப்ளஸ் நாலைந்து
தனுஷ்கள்
பரிமாணங்கள் காட்டியிருக்கிறார்கள்.
அந்த நாலைந்து தனுஷ்கள்
அமீர்லிருந்து ஆரம்பிக்கிறார்கள்.
"ராஜன்"அமீர்
நடிப்பில் "ராஜ ராஜன்"அமீர்!
பருத்திவீரனில்
அமீரின் இயக்கம்
கலைஞரைக்கூட
கண்ணீர் கசிய வைத்திருந்ததை
நாம் அறிவோம்.
அமீரிடமிருந்து
ஒரு நடிப்புப்புதையலை
தோண்டியெடுத்துக்கொடுத்த‌
வெற்றியும் கூட அந்த "மாறனுக்கே".
சமுத்திரக்கனி,கிஷோர்,டேனியல் பாலாஜி,பவன்
அத்தனை பேரும்
நடிப்பின் பிழம்பாய் வெற்றிமாறனின்
வார்ப்புகளில் பிதுங்கி வழிகிறார்கள்.

கதையின்
திடீர் திடீர் திருப்பம் தான்
இந்தப்படத்தின் கதாநாயகன்.
சமுதாயம் எப்போதும்
புன்னகைத்துக்கொண்டிருக்கும்
"மோனாலிஸா" ஓவியம் அல்ல.
அதை அப்படியே
சுவரில் திருப்பி மாட்டிவைத்து
காட்டியிருக்கிறார் வெற்றிமாறன்.
கிரேக்க இதிகாசத்தில்
தலைமயிர் ஒவ்வொன்றும்
நாகப்பாம்பாய் சீறும்
அரக்க அழகியான‌
"மெடுஸா"வின் ஓவியமும் அதுதான்.
சமுதாய நரம்புக்குள்
ஓடுவது எப்போதும்
புனிதநதியின் புஷ்கரணி அல்ல.
பழி வாங்குவதும்
பழி தீர்ப்பதும்
ரத்தச்சுழிகள் நிறைந்ததுமான‌
காட்டாறும் அது தான்.
சமுதாயமுரண்களின்
வர்ணங்களைத்தான்
வெற்றிமாறன் வெற்றிகரமாக‌
தீட்டியிருக்கிறார்.

===================================================ருத்ரா


ஆகாயத்தை நோக்கியே

                      சான்ஓசே  ..கலிஃபோர்னியா..யுஎஸ்ஏ 

துரும்பு
=======================================ருத்ரா

வாழ்க்கை என்றால் என்ன‌
என்று கேட்டால்
கடவுளைக்காட்டுகிறீர்கள்.
கடவுளைக்காட்டுங்கள்
என்றால்
வாழ்ந்து பார் என்கிறீர்கள்.
முட்டி மோதி
கடைசி மைல்கல்லில்
ரத்தம் வழிந்த போது
சத்தம் வந்தது
உள்ளேயிருந்து.
இதயத்துடிப்பின் ஒலியில்
கேட்டது தானே
முதல் மொழி.
அதன் சொல் ஜனனம் என்றால்
அதன் அர்த்தம் மரணம் என்றார்கள்.
மனிதனா?இறைவனா?
அது
"மெய் பொய்"த்துகளின்
குவாண்டம் மீனிங்.
அன்னிஹிலேஷனும்
அது தான்.
கிரியேஷனும்
அது தான்.
அழித்து அழித்து ஆக்குவதே
அணு உலைக்கூடம்.
ஃபீல்டு எனும்
வெறுமைப்புலத்தில்
எது
முதலில்
நுழைந்தது?
ஆற்றலா?
நிறையா?
"ஹிக்ஸ்போஸன்"
புதிர் அவிழ்த்தது!
கடவுள் எனும்
கற்பனையை முதலில்
படைத்தான்.
அக்கற்பனையைப்படைத்த‌
மனிதனை
அப்புறம் படைத்தான்
என்பதில்
லாஜிக் இல்லையே!
லாஜிக் இல்லாத கடவுளுக்கு
லாஜிக் தருவதே
மனிதன் தான்.
பிரம்ம சூத்ரமும் பாஷ்யங்களும்
உடைந்து போகிற‌
சோப்புக்குமிழிகளைத்தான்
ஊதித்தள்ளியிருக்கிறது.
எத்தனை வயதுகள் வேண்டும்
உனக்கு?
இந்த பிரபஞ்சத்தின்
வயதையும் சேர்த்தே
எடுத்துக்கொள்.
அது யார்?
அது எது?
இந்த கேள்வி
அந்த வயதுகளையும் விட நீளம்.
ப்ளாங்க் கான்ஸ்டன்ட்
என்று
இரண்டு சொல்லில் தான்
அந்த சாவியும் பூட்டும்.
அது என்ன?
பல்கலைக்கழகங்களின்
அடுக்குப்பாறைகளின் அடியில்
அந்த கீற்று
கிசு கிசுக்கிறது.
புரிந்தால்
புரிந்துகொள்.
இல்லையென்றால்
குடமுழக்கு நீராட்டில்
நனைந்து கொண்டே இரு.
அஞ்ஞானங்களின் பிரளயத்தில்
அமிழ்ந்து போ.
விஞ்ஞானத்துரும்பு
விடியல் காட்டும் வரை...
மூளையின்
அந்த‌இருட்டுமூலைக்குள்
ஒரு நூல் படிக்க கிடைக்கும்வரை....
நூலாம்படையாய்
படர்ந்திரு.
அந்த "பாம் ட்ரீ"யின்
ஆயிரம் நாவுகளும்
ஆகாயத்தை நோக்கியே
கேள்விகள் கேட்கின்றனவே !


==================================================
13.06.2016




செவ்வாய், 30 அக்டோபர், 2018

தீபாவளி வருகிறது.


தீபாவளி வருகிறது.
=============================================ருத்ரா

தீபாவளி வருகிறது.
நரகாசுரனுக்காக‌
பட்டாசுகள் வருகின்றன.
சந்தோஷம் வெடிக்கிறது.
புத்தாடை இனிப்புகளில்
எங்கும்
சந்தோஷம் சந்தோஷம்.
மக்கள் தொகையின் அடர்த்தி
அந்த வியாபாரங்களில்
தெரிகிறது.
யார் அந்த நரகாசுரன்?
நம்மை எதிர்ப்பவனா?
நம்மில் ஒருவனா?
கடவுள்
சர்வ வல்லமை பொருந்தியவர்.
நரன் எனும் சாதாரண மனிதன்
எப்படி
கடவுளை எதிர்க்கும் அசுரன் ஆனான்?
விஷ்ணுவின் அம்சமே நரகாசுரன்.
விஷ்ணு தன்னைத்தானே
சக்கரம் விட்டு பிளந்து கொள்வதன்
ரகசியம் என்ன?
.................
....................
எதிரே "டொய்ங்..டொய்ங்க்.."என்று
துந்தணாவை
நிமிண்டிக்கொண்டு
நாரதர் வந்தார்.
"பிரபுவே ரகசியம் என்ன?
அவன் பயங்கர உருவம் எடுத்து
மக்களை வதைத்ததால் தானே
அந்த வதம்"
என்று கேட்டேன்.

"ஓய் ..கிட்ட வாரும் சொல்றேன்"
அவர் என் காதைக்கடித்தார்.
"அதெல்லாம் இல்லை.
நீரும் நானும் ஒண்ணுதானே
ரெண்டு பேருக்கும் ஒரே பிரம்மம் தானே
அப்படீன்னா நீர் என ஒஸ்தி?
நான் என்ன தாழ்ச்சி?
அப்படீன்னு கேட்டான் பாருங்கோ"

"அற்ப பதரே !
கம்யூனிசமா பேசுறே ..கம்யூனிசம்?
தொலைச்சுப்போடுவேன் படவா,"ன்னு
விஷ்ணு சக்கரத்தை அவன் மேலே
விட்டுட்டார்"
..........
"ஐயா இத வெளியில சொல்லிப்புடாதீங்க
அப்புறம் இவா எம்மேலேயே
சக்கரத்தை ஏவி விட்டுருவா."
"நாராயணா".....ன்னுட்டு
நாரதர் தப்பிச்சோம் பிழைச்சோம்னு
ஓடியே போய்ட்டார்.

கடவுளை நம்பாதவனே அசுரன்
எனும் நச்சுக்கருத்துக்கு
இந்த மாபெரும் கொண்டாட்டம்
அடையாளமாக ஆக்கப்படவேண்டும்
என்பதே
உள்ளுறைந்து இருக்கும் சூட்சுமம்.
இந்த சூத்திரர்களின் மேல்
சூத்திரர்களைக்கொண்டே
வெடி கொளுத்திப்போடும்
சூத்திரதாரிகளின் புராணதேசத்தில்
"நாலு வர்ண" மத்தாப்புகளே
இன்னும்
கொளுத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

====================================================
(கற்பனையை  நகைச்சுவையாய் எழுதியது)





லா.ச.ரா.

லா.ச.ரா.
========================================ருத்ரா இ.பரமசிவன்

பேனாவை
அப்படித்தான் சொன்னார்கள்.
அடுத்த பக்கம்
கண்டுபிடிக்க முடியாத‌
குகைவழிப்பாதை என்று.

நீண்ட புழுக்கூடு.
சிங்குலாரியின் முதல் மைல் கல்
கண்ணில் பட்டதும்
அப்படித்தான்
படக்கென்று
அடுத்த பிரபஞ்ச வீட்டுவாசலில்
கால் வைத்து விடலாமாம்.

ஐன்ஸ்ட்டின், வீலர், கிப்ஸ் தார்னே,
ஸ்டீஃப‌ன்ஹாக்கிங்...பட்டியல் நீளும்.
அதிலும்
மேக்ஸ் ப்ளாங்க்
அந்த‌ "மாறிலி" எனும்
சோழியை குலுக்கி
தூர‌ உய‌ரே எறிந்து விட்டார்.

முத‌ல் வெடிப்பின்
மூக்குமுனையைக்கூட‌
உடைத்துக்கொண்டு
உள்ளே
போய்க்கொண்டிருக்க‌வேண்டிய‌து தான்.

க‌ணித‌ ச‌ம‌ன்பாடுக‌ளின் சுர‌ங்க‌ம்
வ‌ர்க்க‌மும் வ‌ர்க்க‌மூல‌மும்
டெல்டாவும் லேம்ப்டாவும்
வ‌ழி நெடுக‌ நிர‌டும்.

க‌ருந்துளைக்கும்
உண்டு
தொப்பூள் கொடித்துளை.

அந்த‌ புழுத்துளைக்குள்
போனால்
அதி ந‌வீன‌ க‌ணித‌ப்பேராசிரிய‌ர்
எட்வ‌ர்டு மிட்ட‌னும்
அங்கு தான்
ப‌க‌ ப‌க‌ வென‌ சிரிக்கிறார்.

போக‌ட்டும்
விஞ்ஞானிக‌ளின் மூச்சுக‌ளின்
விழுதுக‌ளின் ஊஞ்ச‌ல்பிடியை
விட்டுவிட்டால்...
"தொபுக் க‌டீர்" தான்.

இந்த பிரபஞ்ச விஞ்ஞானத்தையும் கூட‌
பாய் விரித்து
இவர் எழுத்துக்களில்
பஞ்சடைத்து தலையணையாக்கி
படுக்கிடக்கலாம் சுகமாக!

வெர்ம் ஹோலை வெர்டு ஹோல்
ஆக்கிய விஞ்ஞானி
லா.ச.ரா...

இப்படியொரு
குழல்வழியை
எழுத்துக்குள் அமைத்து
பயணம் போவோம்.

அப்போது நாம்
பார்ப்பது
அறிவது
உணர்வது
உள் கசிவது
எல்லாமே

லா.ச.ரா
லா.ச.ரா
லா.ச.ரா...தான்



உயிரெழுத்தைப்பிய்த்து
உயிர் தேடும்
இன்னொரு எழுத்து.
காட்சி விவ‌ரிப்புக‌ள்
வெற்றிலை எச்சில் துப்பிய‌து போல்
காகித‌ம் எல்லாம்
சிவ‌க்கவைத்து க‌றையாக்கும்.

இத‌ய‌ நாள‌ங்க‌ளையே
பூணூல் போட்டுக்கொண்ட‌
பிர‌ம்ம‌ எழுத்துக்க‌ள்
பிண்ட‌ம் பிடித்துப்போடும்.

காத‌லும் இருக்கும்.
க‌ருமாதியும் இருக்கும்.
நேர‌ப்பிஞ்சுக‌ளை
வெள்ள‌ரிப்பிஞ்சுக‌ள் போல்
ந‌றுக் மொறுக் என்று
தின்கிற‌
உள்ள‌த்தின்
உள்ளொலி
எல்லா எழுத்திலும்
சுவை கூட்டிப்போகும்.

அம்மாவின் முலைப்பாலில்
அட‌ர்த்தியான‌ நெருப்பு எரியும்.
வீட்டுக்கு வீடு
கோட‌ரி தூக்கிக்கொண்டிருக்கும்
ப‌ர‌சுராம‌ ந‌மைச்ச‌ல்க‌ள்
பாஷ்ய‌ங்க‌ளாக‌ போய்விட்ட‌
ப‌டிம‌ங்க‌ளின்
அடிவ‌யிற்றையே கிள்ளி வ‌ருடும்
கூரிய‌ எழுத்துக்க‌ள்
ரோஜாக்களின்"மீமாம்ச‌ங்க‌ளில்"
புதைத்து வைத்திருக்கும்
க‌ழும‌ர‌ங்க‌ள்.

லா.ச‌... ரா
த‌மிழை "லேச‌ர்"ஆக்கிய‌வ‌ர்.
மெய்யெழுத்துத்த‌லையின்
புள்ளியில் கூட‌
ஒரு க‌ரு உட்கார்ந்திருக்கும்.
ச‌ர்ப்பமாய் விரியும் ஒரு ப‌ட‌ம்
ஊடு ந‌டுகையாய்
ந‌டுங்க‌ வைக்கும்.

"ஜ‌ன‌னி"
"அம்பை"
"சிந்தாந‌தி"
......
இவ‌ர் எழுத்துக‌ள்
ஏதோ
எத‌ற்குமே புரியாத‌
ஒரு
லாவாக்குழ‌ம்பில்
ஜாங்கிரி பிழிந்த‌து போல்..
எரித்துக்கொண்டே
இனிக்கும்.
சமஸ்கிருதத்தை உறிஞ்சி உறிஞ்சி
அவர் எழுதியதில்
அவரே புரிந்து கொண்டார்
அதன் ஊற்றுக்கண் தமிழ் என்று.
முழுக்க‌ முழுக்க‌
லா.ச‌.ரா எழுத்து ஒன்றையே
"பொன்னியுன் செல்வ‌ன்" சைசுக்கு
வீங்க‌ வைத்து
பொங்கல் வைத்து
ஒரு "நாவ‌ல்" தின்றால்
எப்ப‌டியிருக்கும்?

குழ‌ந்தைக‌ள் "சுட்டி"ப்பானையில்
ச‌மைக்குமே
அப்படி சமைத்து
சாப்பிட‌ ஆசை
"லா.சா.ரா"எழுத்துக்களை.

=====================================================
 13 ஆகஸ்டு 2012ல் எழுதுயது

திங்கள், 29 அக்டோபர், 2018

கான்யாற்றுப் பிழியல் நீர்படுத்தன்ன‌

கான்யாற்றுப் பிழியல் நீர்படுத்தன்ன‌
=======================================ருத்ரா இ பரமசிவன்

கான்யாற்றுப் பிழியல் நீர்படுத்தன்ன‌
பாசடை அடர்கரை நெகிழ்ப்  பட்டாங்கு
தொடிநெகிழ்ப்பாவை பசலையுடுத்து
எல்லையும் மதியும் முல்லையும் மறந்துபு
பெரும்பேய் ஊழி ஊர்ந்தனள் மன்னே.
கூர்நடுங் கங்குல் துயில் மடிந்தன்ன‌
அடர்இருள் நீள்வனம் செலவினன் எண்ணி
நெடுமூச்சுக் கண்ணியின் விடுமூச்சு பயின்று
இறந்தாள் பிறந்தாள் பிறந்திறந் திருந்தாள்
மண்ணும் வானும் மரனும் மரபும்
உண்ணலும் உடுத்தலும் ஆயநினை விறந்தாள்.
தூங்கார மரத்து தூங்கிய பழம்போல்
கனவின் கொடுஞ்சிறைப் பட்டனள் போலும்
தண்ணிய படப்பை அவன் ஆரெழில் அகலம்
தோயக்கிடந்தாள் ஆயிழை ஆங்கே!

============================================================
24.11.2017 ல் நான் எழுதிய சங்கநடைச்செய்யுட் கவிதை.





சோறு

சோறு
============================ருத்ரா

பச்சை வயல்கள்
நீர் ஓட்டங்கள்
எல்லாம்
கம்பியூட்டர் கிராஃபிக்சில்
அற்புதம்.
உழுகின்ற
மனித வியர்வைக்கு
ஒரு ரூபாய்க்கு கூட
மதிப்பு இல்லை.
அந்தப் பன்றிக்குட்டியுடன்
நம் கனவுக்கன்னி நடிகை  ஒருத்தி
"செல் ஃபி "எடுத்துக்கொண்டாளே
அது போல்
இந்த பன்றிக்குட்டியுடன்
நாமும் எடுத்துக்கொள்ளலாமே...
செல்ஃபி !
என்பது தான்
நம் பசி தாகம்  எல்லாம்.
வீடியோக்கள்
நம் நரம்புக்குள் கூட
கூடுகள் கட்டிக்கொண்டன.
வைரல் ஆகவேண்டுமென்று
அந்த டெங்கு வைரஸ்களோடு
முத்தம் இட்டவாறு கூட
வீடியோ எடுத்து பரப்ப தயார்.
நமக்கு சோறு கொடுக்க
அந்த விவசாயிகள்
புழுதியோடு புழுதியாக
உருண்டு புரண்டு
போராட்டம் நடத்தியபோதும்
கார்ப்பரேட்டுகள் தரும்
அந்த டிஜிட்டல் சொர்க்கங்களே போதும்.
இந்த ஆண்டராய்டுகளின்
நிலப்பரப்பில்
இனி நம் சோற்றுக்கவளம் கூட
பிக்சல்கள் தான்.

==================================



ஞாயிறு, 28 அக்டோபர், 2018

ட்ராகுலா ரைசஸ் ஃப்ரம் தி க்ரேவ்

ட்ராகுலா ரைசஸ் ஃப்ரம் தி க்ரேவ்
===============================================ருத்ரா

அது ஆளரவம் அடங்கிப்போன‌
ஒரு மயானம்.
அலறும் பறவையின் குரல் கூட‌
அமுக்கப்பட்டிருக்கும்
ஒரு அசாதாரண அமைதி அங்கே.
ஏன் என்று
அந்த இடத்தில்...
அண்டை அயலார் இடத்தில்.....
கூட..
கேட்க நாதியில்லை.
உலகம்
அந்த மரண அமைதியை
வேடிக்கை பார்த்தது.
விட்டால் அந்த டிராகுலாவுக்கு  கூட‌
அமைதிக்கு
ஒரு நோபல் பரிசு கொடுத்து
அகமகிழ்ந்து விடும்.
மற்ற இடத்தில்
ரெண்டு நாய்கள் சண்டைபோட்டு
குரைத்துக்கொண்டால் கூட‌
"மூச்" சத்தம் போடாதே
உலக அமைதி கெட்டுவிடும் என்று
அந்த நீதி மேசையை
தட்டி தட்டி
குரலெழுப்பும் அந்த உலகம்
அந்த மரணப்பிரளயத்தின் போது
பாப்கார்ன் கொறித்துக்கொண்டிருந்தது.
ஒரு ரத்தவெறி
சுநாமியாய் கிளர்ந்தெழுந்து
நியாயங்களின் குரல் வளையை
குதறத் துடிக்கும்
ஆர்ப்பாட்டத்துடன்
அந்த ட்ராகுலா
சவக்குழியை பிளந்து கொண்டு
கோரைப்பல் எல்லாம் ரத்தம் ஒழுக‌
எழுந்து கொண்டு விட்டது.
அதையும் கூட ஒரு நரசிம்ம அவதாரமாய்
அர்ச்சிக்கும்
அதர்மங்களின் மேகங்கள்
சூழ்ந்த இந்த தேசத்து
சில நரித்தனமான புன்னகைகள்
இளித்து இளித்துக்களிக்கின்றன.

அப்புறம் அந்த ட்ராகுலா
தன் வெறிபடர்ந்த விழிகளை
உருட்டிக்கொண்டு.....
தன் நீண்ட கருப்புக்கோட்டை
பேய்க்காற்றில்
அலைய விட்டுக்கொண்டு...
அந்த கூரிய பற்களைக்கொண்டு
எல்லா ஆட்டுக்குட்டிகளின்
ரத்தம் குடிக்கும் தாகத்தோடு....

......................
"அப்புறம் அப்புறம்.."

ஏண்டா! "பர"தேசி..
நான் என்ன கதையா சொல்றேன்..
ராஜபக்ஷே பிரதமர் ஆயிட்டார்டா.

=====================================================







மக்கள் பீதி மய்யம்.

மக்கள் பீதி மய்யம்.
==============================================ருத்ரா

எங்கள் அன்பான‌
உலக நாயகர் அவர்களே.
உங்கள் ட்விட்டர்கள் கண்டு
முதலில்
சிந்தித்தோம்.
அடுத்து
ரசித்தோம்
அப்புறம்
குழம்பினோம்
இப்போது
அதிர்ச்சியும் பீதியும் தான்
எங்களை
கலங்க வைக்கிறது.

தமிழ் எங்கள் உயிர் என்றீர்கள்.
அப்புறம் அது
பின்னுக்கு போனது.
திராவிடம் என்றீர்கள்
அப்புறம்
ஊழலை எதிர்ப்போம்
என்ற கொடியை உயர்த்தி
திராவிடக்கட்சிகளை
அழிப்போம் என்றீர்கள்.
என் ஜீனுக்குள்
காங்கிரஸ் துடிக்கிறது என்றீர்கள்.
அதனால் காங்கிரஸ் கூட்டணி
பரவாயில்லை என்றீர்கள்.
முந்த்ரா ஊழல் மூலம்
ஊழலை துவக்கியதே காங்கிரஸ் தான்
என்பதும் கூட மிக வசதியாய்
உங்கள் ஞாபக மறதியின் குழியில் போய்
விழுந்திருக்கலாம்.
தற்போதைய அவலங்களை எதிர்க்கும்
ஜனநாயக அலைகளின்
முன்னோடி அலைகளாய்
மக்களின் கவனம்
ஈர்த்துக்கொண்டிருக்கும்
திமுக கூட்டணியை உடைக்க‌
சம்மட்டி தூக்கத்துவங்கி விட்டீர்களே.

இலங்கையின் படுகொலைகளை
அரங்கேற்றிய ராஜபக்ஷே
இனி அப்படியெல்லாம் செய்யமாட்டார்
என்ற
பொன் ராதாகிருஷ்ணன் அவர்களின்
பாட்டுக்கு
நீங்களும் சுருதி சேர்த்தீர்களே
அதில் எங்கே
மக்களின் நீதி இருக்கிறது?
ஒரு பீதி அல்லவா படர்ந்து
எங்களை கவிகிறது.
கமல் அவர்களே!
தமிழ் இனம் எனும்
வட்டம் இருந்தால் தானே
அந்த "மய்யத்துக்கு" மதிப்பு.
தமிழின வட்டம் இல்லாமல்
உங்கள் மய்யத்தினால் என்ன பயன்?

===============================================================

சனி, 27 அக்டோபர், 2018

விடியல்




விடியல்
=========================================ருத்ரா

ஓடும் குதிரையின் வாய்க்கு முன்
இதோ
வாய்க்குள் அகபட்டுவிடும்
என்ற ஒரு தோற்றத்தை மட்டுமே
காட்டி காட்டி
ஏமாற்றும் நிகழ்வு இது.
ஒரு குச்சியில் கொஞ்சம்   புல்லைக்கட்டி
அதன் வாயில் பட்டுவிடும் போல்
காட்டிக்கொண்டே இருப்பது இது.
அதனால்
ஏமாற்றப்படும் குதிரை
நுரைதள்ளி நுரைதள்ளி
மூச்சைப்பிடித்துக்கொண்டு ஓடும்.
நம்பிக்கை எனும் சொல்
"இன்று ரொக்கம் நாளை கடன்"
என்னும் பலகை போல்
அதன் கண்முன் காட்டப்படுகிறது.
இலங்கைத்தமிழர்களுக்கும் சரி
இங்குள்ள தமிழர்களுக்கும் சரி
இந்த கானல்நீர் மட்டுமே
ஏக்கம்
நோக்கம்
தாகம்
கவிதை
வரலாறு எல்லாம்.
தொன்மையின்
ஒளிநிறைந்த நம் தமிழ்....
உலக நாகரிகத்தின் தொட்டில்
ஆக இருந்த நம் தமிழ்.....
ஏமாற்றம் வஞ்சம் சுரண்டல்
சாதி மதங்களின் சாராயங்கள்

ரத்தம் மரணம் பேராதிக்கம் இவற்றின்
குப்பைத்தொட்டியாய் கிடக்கிறது.
"திருடனாய்ப்பார்த்து திருந்தாவிட்டால்
திருட்டை ஒழிக்க முடியாது"
கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
பாடிய  வைர(ல்)வரிகள் இவை.
ஏமாற்றும் ஏமாற்றப்படும்
இந்த கொடுமைக்கும் காரணம் கூட‌
நம் தமிழர்களே.
அதனால் தமிழ் இங்கு
புதைந்து கொண்டிருக்கிறது.
தமிழனாய்ப்பார்த்து திருந்தாவிட்டால்
இந்த அழிவைத் தடுக்க முடியாது.
அது வரை
விடிவது போல் தோற்றம் தரும்
அந்த விடியல் சினிமாவைப்பார்த்து
விசில் அடித்துக்கொண்டு இருப்போமாக!

===============================================

பொன்கதவுகள்

பொன்கதவுகள்
==========================================ருத்ரா

வாழும் கலைச் சொல்லிக்கொடுக்க‌
வாசலில் சுடச்சுட
வசூல் ரூபாய் ரெண்டாயிரம்.
அந்த "நிஷதம்" இந்த "நிஷதம்"
என்று
உள்ளேயும் போய்
ரூபாய் ரெண்டாயிரம்.
மூக்கைப்பொத்தி
வாயைப்பொத்தி
மூச்சுகீற்றை முடிச்சுப்போட்டு
அதில்
கீரை ஆய்ந்து
பூச்சி புழு பார்த்து
வர்ண சமுக்காளத்தில்
வர்ண வர்ணமாய்
சொப்பனம் கண்டு
மூடிய விழிக்குள்
ஆயிரம் பூரான் நெளிந்தவுடன்
மணியடித்தார்கள்
என் மண்டைக்குள்
குண்டலினி யோகம் புகுந்தது
என்று.
நான் மட்டுமா?
வெள்ளைக்காரன்களும்
அன்னியச்செலாவணியில்
ஆசனம் அமைத்து
படுத்து உருண்டு புரண்டு
ஆக்ஸ்ஃபோர்டு ஆங்கிலத்தை
அக்கு அக்காய்
கிழித்துச் சுக்குநூறாக்கி
"யா..யா" என்று
எழுந்து நடந்தான்.
முட்டாள் தனத்துக்கு
மொழியில்லை.
தடையில்லை.
எப்படியெல்லாமோ
வாழ்ந்து பார்த்தாயிற்று!
பண்ணி உடலெடுத்து
குட்டிகள் போட்டு
குர் குர்ரென்று
ஒலிப்பித்து அதனுள்
ஒளிந்து விளையாட‌
ரெண்டு லட்சம் கட்டவேண்டுமாம்.
அப்போது தான்
வாழும் கலை
நுட்பம் தெரியுமாம்.
பிறவியைக்கலைத்து
பிறவியைக்கடைந்து
பிறவியைக்கரைத்து
"குடித்துத்தீர்த்தால்"
மோட்சம் உடனே!
மோட்சம் உடனே!
ஆசிரமத்துப்
பொன்கதவுகள் பூட்டிக்கொண்டன.

=================================================
28.06.2016




வெள்ளி, 26 அக்டோபர், 2018

கொசு


கொசு
===========================================ருத்ரா

உன் முகத்தருகே மொய்க்கிற‌
கொசுவைக்கூட தட்டி விடுகிறாய்.
ஈக்களை
மருந்தடித்து விரட்டுகிறாய்.
பார்
அந்த மீசையை
சுவரில் தேய்த்து தேய்த்து
கார்ட்டூன் வரைவது போல்
அழகு காட்டும்
கரப்பான் பூச்சியைக்கூட‌
நீ ஒழித்துக்கட்டுகிறாய்.
எவ்வளவு விழிப்புணர்ச்சி உனக்கு.
எல்லாம்
டெங்குவாய் வந்து
உன் சுவடே இல்லாமல்
உன்னை அழித்துவிடுமோ
என்ற
அச்சம் தானே!
அதெல்லாம் சரி.தமிழா!
அண்டைத்தீவில்
மருந்து அடித்து
உன் இனத்தை பூண்டோடு
அழித்துவிட
நச்சு வாயுவை உமிழும்
அந்த அசுரன்
மீண்டும் கால் பதித்துவிட்டானே!
என்ன செய்யப்பொகிறாய்.?
அவனுக்கு
பூங்கொத்து கொடுத்து
சஹஸ்ரநாமம் பாட‌
இங்கேயும்
சப்ளாகட்டைகளோடு
பஜனை செய்ய‌
ஒரு கூட்டம் காத்திருக்கிறதே
தமிழா!
என்ன செய்யப்போகிறாய்?
தேர்தல் காற்று வீசுகிறதே.
அதில் துண்டு விரித்து
கொஞ்சம் அள்ளிக்கொள்ளலாம்
என்று
உன் விழிப்புணர்ச்சியை
நீ திசை திருப்பிக்கொண்டால்
உன் திசைகளையே
நீ இழந்து விடுவாயே.
என்ன செய்யப்போகிறாய் தமிழா!
நீ
என்ன செய்யப்போகிறாய்?

=============================================================










நிழற்பூதம்

நிழற்பூதம்
===============================================ருத்ரா

நீ என்ன நினைக்கிறாய்
என்று
என்
முகம் பார்க்கும் கண்ணாடி
என்னைப்பார்த்துக்கேட்டது?
என்னைப்பற்றி சொல்ல‌
என்ன இருக்கிறது?
என்னைப் பார்க்கவேண்டும் என்றால்
உன்னிடம் தான் வருகிறேன்.
ஆமாம்.
உனக்குப் பின்னால் ரசம் பூசியவர்கள்
யார்?
அவர்களை எனக்கும்
அப்படியொரு ரசம் பூசச்சொல்லு.
பார்ப்பவர்களை
அப்படியே
நான் படம்பிடித்துக்கொள்ளலாம்
அல்லவா!
கண்ணாடி பக பக வென்று சிரித்தது!
நான் ஒன்றும் அப்படி சிரிக்கவில்லை.
இந்த பிம்பத்தில் அந்த சிரிப்பு
எப்படி வந்தது?
நான் விதிர் விதிர்த்துப்போனேன்.
வியர்வையில் நனைந்தேன்.
பயப்படாதே!
கண்ணாடி பேசியது.
ஒரு வினாடி
என் ரசத்தை விலக்கிக்கொண்டேன்.
நீ "யாரோவாய்" ஆகி
சிரித்தாய்.
உன் முகத்தின் மீது
மற்றவர்கள்
தங்கள் முகத்தை
அச்சடிக்க ஆசைப்பட்டாயே!
அதைப்பற்றித்தான் அப்படி சிரித்தேன்
என்றது.
இந்த ரசம் வெறும் நிழல்.
உன் முகத்தை மட்டுமே
தினமும் எனக்கு பூதம் காட்டுகிறாய்.
மாறாக இந்த நிழல்
உன் மீது பூதம் காட்டினால்...

"பூதம் காட்டினால் என்ன ஆகும்?"
நான் கேட்டேன்.
அது சொன்னது.
அதைத்தான் உட்பொருள் அறியாமல்
கடவுள் என்கிறாய்.
அந்த பூதம் உன்னை
பயமுறுத்தும் உணர்வு ஆனது கூட‌
அறியாமல்
அந்த நிழலைக்குவித்து வைத்து
பூசனைகள் செய்கிறாய்.
கண்ணாடி
மீண்டும் பக பகவென்று சிரித்துவிட்டு
அமைதியானது!

=============================================================









கண்ணாடியின் முன்...

கண்ணாடியின் முன்...
===============================================ருத்ரா

நீ என்ன நினைக்கிறாய்
என்று
என்
முகம் பார்க்கும் கண்ணாடி
என்னைப்பார்த்துக்கேட்டது?
என்னைப்பற்றி சொல்ல‌
என்ன இருக்கிறது?
என்னைப் பார்க்கவேண்டும் என்றால்
உன்னிடம் தான் வருகிறேன்.
ஆமாம்.
உனக்குப் பின்னால் ரசம் பூசியவர்கள்
யார்?
அவர்களை எனக்கும்
அப்படியொரு ரசம் பூசச்சொல்லு.
பார்ப்பவர்களை
அப்படியே
நான் படம்பிடித்துக்கொள்ளலாம்
அல்லவா!
கண்ணாடி பக பக வென்று சிரித்தது!
நான் ஒன்றும் அப்படி சிரிக்கவில்லை.
இந்த பிம்பத்தில் அந்த சிரிப்பு
எப்படி வந்தது?
நான் விதிர் விதிர்த்துப்போனேன்.
வியர்வையில் நனைந்தேன்.
பயப்படாதே!
கண்ணாடி பேசியது.
ஒரு வினாடி
என் ரசத்தை விலக்கிக்கொண்டேன்.
நீ "யாரோவாய்" ஆகி
சிரித்தாய்.
உன் முகத்தின் மீது
மற்றவர்கள்
தங்கள் முகத்தை
அச்சடிக்க ஆசைப்பட்டாயே!
அதைப்பற்றித்தான் அப்படி சிரித்தேன்
என்றது.
இந்த ரசம் வெறும் நிழல்.
உன் முகத்தை மட்டுமே
தினமும் எனக்கு பூதம் காட்டுகிறாய்.
மாறாக இந்த நிழல்
உன் மீது பூதம் காட்டினால்...

"பூதம் காட்டினால் என்ன ஆகும்?"
நான் கேட்டேன்.
அது சொன்னது.
அதைத்தான் உட்பொருள் அறியாமல்
கடவுள் என்கிறாய்.
அந்த பூதம் உன்னை
பயமுறுத்தும் உணர்வு ஆனது கூட‌
அறியாமல்
அந்த நிழலைக்குவித்து வைத்து
பூசனைகள் செய்கிறாய்.
கண்ணாடி
மீண்டும் பக பகவென்று சிரித்துவிட்டு
அமைதியானது!

=============================================================







வாழ்க ஓட்டுகள்.




வாழ்க ஓட்டுகள்.
===============================================ருத்ரா




தீர்ப்பு.
மூச்.
இதைப்பற்றி ஒன்றும்
சொல்லக்கூடாது.
நம் ஜனநாயகத்தைப்பற்றி
நாம் சொல்லிக்கொண்டே இருப்போம்.
ஆண்டாண்டு காலமாய்
இதற்கு உயிர் இருக்கிறது என்றும்
அது குடை விரித்து
நம்மைக் காத்து வருகிறது என்றும்
சொல்லிக்கொண்டே இருப்போம்.
நம் உரிமைகளும் கடமைகளும்
நம் பொருளாதாரமும்
நம் நியாயாலயங்களும்
நம் சட்டம் சமைக்கும் கூடங்களும்
நம் குரல்களும்
நம் எதிர்க்குரல்களும்
நம் சாதிகளும் மதங்களும்
நமக்கு நன்கு உயிரூட்டி உரமூட்டி
நம்மை மேலும் மேலும்
மலர்ச்சி யடையச்செய்கிறது என்றும்
எக்காளமிட்டுக் கூறுவோம்.
அட..
என்னய்யா சொல்றீங்க.
ஜனநாயகத்தைக்காப்போம்னு
கம்பு தடிகளோடு வந்து
தேர்தல் தேர்தலாய்
மிதி மிதின்னு மிதிச்சுட்டுப்போய்டுறீங்களே!
கரன்சில காய் நகர்த்தும்
அந்த சதுரங்க கட்டங்களில்
காணாமலேயே போயிடுறீங்க!
அப்புறம் நீங்க
எத்தனைப்பக்கத்துலே
எந்த எந்த ஷரத்துன்னு
நூத்துக்கணக்கா பக்கங்கள அவங்க
எழுதி வாசிச்சத வச்சு
என்ன பண்ணப்போறீங்க?
ஜனநாயகம் காப்போம்னு வீரமா
இந்த செத்த பாம்பையே
அடிச்சு அடிச்சு என்ன பண்ணப்போறீங்க?
கோமாவிலேயே படுத்துக்கிடந்தாலும்
அப்பப்ப
எந்திரிச்சுவந்து
சினிமால வர்றமாதிரி
குத்தாட்டம் போட்டு
கோமாளித்தனங்கள் பண்ணும்
நம் ஜனநாயகம்
உண்மையிலேயே
உலகத்திலேயே
பெரிய ஜனநாயகம் தான்!
வாழ்க நம் ஓட்டுகள்.
வாழ்க வாழ்க அவர்களின்
ஒட்டுண்ணி சீட்டுகள்!

========================================================







வியாழன், 25 அக்டோபர், 2018

கடவுள் கடவுள் என்று...

கடவுள் கடவுள் என்று...
=======================================ருத்ரா இ பரமசிவன்.

கடவுள் கடவுள் என்று
செக்கு மாட்டைப்போல‌
மனிதன் முனை மழுங்கக்கூடாது.
கடவுள் தான் படைத்தார்
கடவுள் தான் இந்த ஏணியை வைத்தார்
என்று
நீங்கள் படியேறுங்கள்.
ஆட்சேபணையில்லை.
ஏறி ஏறி நின்று
எதை நீங்கள் உற்றுநோக்குகிறீர்களோ
அது நிச்சயமாக கடவுள் இல்லை.
அது கடவுள் இல்லை
என்று
அந்த கடவுளுக்கே கூட தெரியும்.
அதற்கு மேலும் உள்ள வெளிச்சத்தை
நீங்கள் அறியவேண்டும்
என்பதே அவர் விருப்பம்.
அதைப்பற்றிய அறிவை
உலகம் எல்லாம் பரப்பவேண்டும்
என்பதும் அவர் நோக்கம்.
அதன் மூலம்
அந்த "படைப்பாளி"
தன் முகத்தையே கண்ணாடியில்
பிம்பம் பார்த்துக்கொள்கிறாரா
அல்லது
அதையும் கடந்து உள்ளே (கடவுள்)
போகப்போகிறாரா
என்பது
நீ காட்டும்
உன் அறிவுப்படலத்தைப்பொறுத்தது.
மனிதனின் அறிவு பிம்பப்படுவது இல்லை.
புதிய புதிய அறிவின் ஊற்றுக்கண்
மனிதனே.
கடவுள் அதைப்பார்த்து தான்
தன்னையே படைத்துக்கொள்கிறார்.
அவரை தரிசனம் செய்யும்போதெல்லாம்
அவர் உங்களுக்கு சொல்வது
"மாற்றி யோசி".
ஆனால் நீங்கள் அவரையே
ஜபமாலை ஆக்கி உருட்டிக்கொண்டே
இருக்கிறீர்கள்.
கடவுளின் அறிவுப்பசியை
புரிந்து கொள்ளாமல்
சுண்டலும் அப்பமும் சாப்பிடுவதற்காக‌
அவரையே
இம்போசிஷன் எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்.
அவர் வைத்த பரீட்சையில்
இன்னும் உங்களால்
எதுவும் எழுதவே முடியவில்லை.
"கடவுளே நீ யார்?
கடவுளே நீ எது?
என்றாவது நீ என்னிடம் கேள்.
அதை விட ஒரு சொல் உன்னிடம்
கேட்க காத்து நிற்கிறேன்
என்கிறார்.
கடவுள் என்று எதுவும் நீ
"இல்லை" என்பதே அது.
அது தான் இந்த மொத்தப்பிரபஞ்சத்தையும்
திறந்து காட்டும் சாவி
என்று
அவர் சொல்லாமல் சொல்லும்
ஒரு மௌனத்தை தான்
உன் முன் நிறுத்தியிருக்கிறார்.

அதை விட்டு
மீண்டும் மீண்டும்
கடவுள் என்று கன்னத்தில் போட்டு
தரையில் மண்டியிடச்சொல்லவில்லையே.

விஞ்ஞானத்தைக்காட்டி
மேலும் ஒரு அஞ்ஞானத்தில் விழு
என்று
அவர் சொல்லவில்லையே.
கடவுள் ஒரு விஞ்ஞானம் என்று
அவரிடமே நீ
சூத்திரங்கள் சொல்லி
விஞ்ஞானத்தை அஞ்ஞானம் ஆக்கும்
"பாவத்தை"
கண்டிப்பாக நீ செய்யாதே
என்று
அந்த "மௌனம்" முணுமுணுப்பதை
கடவுள் விஞ்ஞானிகளே
எப்போது புரிந்துக்கொள்ளப்போகிறீர்கள்?

=================================================================



புதன், 24 அக்டோபர், 2018

பிம்பம்

பிம்பம்
==========================ருத்ரா இ பரமசிவன்

இது உலகம் அல்ல
உன் பிம்பம்.
அங்கு தெரியும்
உன் முகமே
உன் வாழ்க்கை.
உற்று ப்பார்த்து
உன் மீசையை
சரி பார்த்துக்கொண்டதெல்லாம்
போதும்!
உன் வீரம் காட்ட
வாள் சுழற்றியதும்
போதும்.
இந்த துப்பாக்கிக்குண்டுகளா
உன் வாழ்க்கை?
சாதி மாதங்கள்
உன் பார்வையை மறிப்பது
உன் பார்வைக்குள்
வரவில்லையா?
மரணங்களை
தினந்தோறும்
உன் மீதே காறி உமிழும்
காட்டுமிராண்டியாய்
காட்டுவதற்கா
இங்கு முகம் பார்த்தாய்?
சகிக்கவில்லை!
எங்கே உன் மனித முகம்!
சமாதானபூங்கொத்தோடு
ஒரு சரித்திரத்தின்
முகம் காட்டு.
போ!
ரத்தக்கறை
படிந்த உன் முகத்தை
கழுவிக்கொண்டு வா!

===============================================
21.09.2016




செவ்வாய், 23 அக்டோபர், 2018

ரஜனியும் மக்கள் மன்றமும்



ரஜனியும் மக்கள் மன்றமும்
===========================================ருத்ரா

இப்போது தான்
என் கொலுப்பொம்மைகளை
அடுக்கிக்கொண்டிருக்கிறேன்.
இதற்கு நிச்சய‌ம் உயிர் கொடுத்து
உலவ விடுவேன்.
"இன்று ரொக்கம் நாளை கடன்"
எனும் பலகை தான்
இப்போது வரை தொங்கவிட்டிருக்கிறேன்.
அந்த "நாளை"எப்போது வருமோ
அப்போது
மக்கள் கடன் செய்யக்காத்திருக்கிறேன்.
ரசிக மன்றத்து கடமை
படம் பாக்கிறது.
மக்களிலிருந்து
மக்கள் மன்றம்  முளைக்கப்போறது
சமுதாயக்கடமை.
போய் குடும்பத்துக்கு
உப்பு புளி மிளகாய் எல்லாம்
வாங்கிக்கொடுத்து
கடமையாற்றுங்கள்.
மீ டூ  வெறும்
பொம்பளைங்களோட புலம்பல் இல்ல.
பூவுக்குள் பூகம்பங்கிற
சினிமா வசனமும் இல்ல,
இயற்கையே இனிமே
பூவுக்குப் பதிலா
பூகம்பமாகவே  பூக்கும்.
குத்தாட்டம் போடறதுக்காக
போடுற டியூன் இல்ல இது.
ஆனாலும் இந்த பூகம்பம்
சமுதாயம் எனும்
கட்டிடத்தை தரை மட்டம்
ஆக்கி விடக்கூடாது.

சுற்றி
தீ எரிகிறது.
எனக்குத் தெரியும்.
அணைக்கப்பட வேண்டிய நேரத்தில்
கட்டாயம் அணைக்கப்படும்.
என் ஆன்மீக அரசியல் இப்போது
உங்களுக்கு புரிந்திருக்கும்.
நீதிமன்றமும் மதிக்கப்பட வேண்டும்
ஐதிகமும் காக்கப்பட வேண்டும்.
தாமரை இலையும் இருக்கவேண்டும்
அதில் தண்ணீர் ஒட்டவும் கூடாது.
எல்லாம் தாமரைப்பூ பார்த்துக்கொள்ளும்.
இப்ப‌
"பேட்ட"யில் தூள் பறக்கும்.
"பேட்ட துள்ளல்" கொடி பறக்கும்.
அந்தக்கொலுவை நீங்க எல்லாரும்
பாக்கணும்.
அதை கையிலே புடிக்கமுடியாதுண்ணுதான்
நம்ம "சக"பாடியும்
"நாளே நமதே"ண்ணு  பாடுறாரு.
குருட்சேத்திரம் கண்டிப்பா நடக்கும்.
பொம்மை ரத்தம் ஓடினாலும்
அந்த பொம்மை விடியலின்
"நாளை" நிச்சயம் வந்தே தீரும்.

=======================================================

இலக்கணக்குறிப்பு

இலக்கணக்குறிப்பு
====================================================ருத்ரா

"கடவுள்"
இலக்கணக்குறிப்பு எழுது.
வினாத்தாள் வினவியது.
இன்னும் அது விடவில்லை
படம் வரைந்து பாகங்களைக்குறி.
பரீட்சை
பயமுறுத்தியது.
என்ன விளக்கெண்ணெய்க்குறிப்பு
வேண்டிக்கிடக்கிறது?
அவன் வீட்டில்
அம்மா விளக்கெண்ணெயில்
தீபம் ஏற்றி
அந்த மாடக்குழியை
கருப்பாய் ஆக்கி வைத்திருந்தாள்.
அவன் எழுதினான்
கருங்குழி என்று.
படம் வரையலாம்.
என்ன வரைவது?
எதை குறிப்பது?
அவனுக்கு பிக்காஸோவைத்தெரியாது.
ஆனால்
அவனுக்குள் பிக்காஸோ
கரு தரித்து விட்டார்!
ஆணா? பெண்ணா?
அவன் விடலைப்பருவத்தின்
விளிம்பின் விளிம்பைக்கூட‌
இன்னும் ஸ்பரிசிக்கவில்லை.
இருப்பினும்
மின்னல் புழுக்கள்
அவன் மண்டையில் குடைந்தன.
வட்டமா? முக்கோணமா?
வட்டத்துள் முக்கோணம்
முக்கோணத்துள் வட்டம்.
வட்டத்துள் முக்கோணம்
...........
இப்படியே நுணுக்கி நுணுக்கி
காகிதத்தை
அமாவாசையின் குழம்பாக்கி
பௌர்ணமியின் லாவா ஆக்கினான்.
அந்த காகிதத்துள்ளும்
ஆயிரம் டிகிரி சென்டிகிரேடு
அனல் அடித்தது.
காகிதத்தை சுருட்டி
கொடுத்துவிட்டு வந்து விட்டான்.
விடை திருத்திய ஆசிரியருக்கோ
பிரபஞ்சத்தின் ப்ளாக் ஹோல் தெரிந்தது.
படத்திலோ
சக்கரத்துள் சக்கரமாய்
ஒரு வெளிச்சம் தெரிந்தது.
.........
அவன் வகுப்பில் முதலாய் வந்தான்.
மாணவ நண்பர்களின்
கரவொலி வெள்ளத்தில் மிதந்தான்.
ஆசிரியர்
கடவுள் என்று ஆரம்பித்து
ஏதோ புரியாத சொல்மழைகள்
பொழிந்து கொண்டே இருந்தார்.
எல்லாம்
இவன் எழுதியதைப்பற்றித்தான்..
அது சரி..
யார் அந்த கடவுள்?
அதெல்லாம் தெரியாது!
அதோ
ஒரு புல் தடுக்கி பயில்வானாய்
விழுந்து கிடக்கிறான்.
யாராவது
அவனைத்தூக்கி விடுங்களேன்.

==============================================================



திங்கள், 22 அக்டோபர், 2018

டிஜிடல் குப்பைகள்

டிஜிடல் குப்பைகள்
=============================================ருத்ரா

கடவுள் என்னிடம் வந்து
கடவுளுக்கு அர்த்தம் தெரியவில்லை.
சொல்லு என்றான்.

நான்
விஷ்ணுசஹஸ்ரநாமம் சொன்னேன்.

எனக்கு புரியவில்லையே
என்றான் அவன்.

ஏனப்பா இந்த விளையாட்டு?
சமஸ்கிருதமே நீ தானே
உனக்கா உன்னைப்புரியவில்லை?

ஆம் புரியவில்லை தான்.

நீ கடவுளே ஆனாலும் கவலையில்லை.
சமஸ்கிருதம் தெரியவில்லை என்றால்
நீ
நாத்திகனே.

அப்படியென்றால்
நீ கடவுளுக்கு அர்த்தம் சொல்லப்போவதில்லை
அப்படித்தானே!

ஆம் அது தான் ஐதிகம்.
வேதம் சொன்னால் தான் உனக்கு புரியும்.

கடவுள் குழம்பியவாறாய்
எதுவுமே கேட்காமல் திரும்பிவிடலாமா
என்று நினைத்தார்.
அவர் சமஸ்கிருதத்தை எங்கே போய் கற்பது?

அது
குருகுலத்தில்
மேல் சாதியினர் மட்டுமே படிப்பது அல்லவா?
கல்யாணகுணங்கள் பொருந்திய‌
ராமனின் ராமராஜ்யத்தில் கூட‌
மற்ற சாதியினர் சமஸ்கிருதம் கேட்டு
கடவுளை புரிந்து கொள்ளலாம்
என்று போனால்
காதுகளில் ஈயத்தைக்காய்ச்சி ஊற்றிவிடுவார்களாமே.

ஆம் இது தான் ஐதிகம்

அப்போ எனக்கு கடவுள் என்றால்
என்ன என்று அர்த்தம் சொல்லமாட்டாயா?

என்னடா..சும்மா தொண தொணன்னு பேசிண்டு..

 நான்  உத்தரீயத்தை வைத்து
அரித்த முதுகை சொறிந்து கொண்டே
பலமாக "விஷ்ணு சஹஸ்ரநாமம்"
சொல்லிக்கொண்டே இருந்தேன்.

கடவுளும்
கடவுளாக வந்து விட்டு
ஒன்றும் புரியாமல்
நாத்திகராக திரும்பினார்.

=============================================================

பின் குறிப்பு

இது கணினியுகம்.
கூகிள் என்ற குப்பைத்தொட்டியைக் கவிழ்த்தால்
எல்லா சமஸ்கிருதமும் வேதசுலோகங்களும்
கிடைக்கிறதே ஈக்கள் மொய்த்துக்கொண்டு.

கடவுள் என்பதற்கு அர்த்தம் சொல்ல முடியுமா?

பாருங்கள்
முகமெல்லாம் டிஜிடல் குப்பைகளால்
நசுங்கிக்கிடக்க‌
கடவுள் அங்கே அர்த்தம் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

==============================================================






அப்பா என்றால்...

அப்பா என்றால்...
======================================ருத்ரா இ பரமசிவன்


"அம்மா என்றால் அன்பு"
அப்பா என்றால் என்பு!
ஆம்
என் முதுகெலும்பே அவர் தான்!
இந்த குருத்தெலும்பு
ஓடும்போது ஆடும்போது
எங்கே முறிந்து விழுந்து இடுமோ
என்று
அணைத்து அரண் அமைக்க‌
உள்ளத்தால் உருக்கி வார்க்கப்பட்ட‌
எலும்புக்கூட்டமே அவர்தான்.

கண்ணீர் என்றால்
பூப்போல் கசங்குவாள் அம்மா!
அதை கருங்கற்கோட்டை ஆக்க‌
கற்றுத்தருவார் அப்பா!

வாழ்கையின் கரடுமுரடுகளில்
கால் பதிக்க வைத்து
அதன் கல்லும் முள்ளும்
தரும் புண்களை
தன் நெஞ்சில் ஏற்றுக்கொள்வார்.

நான் கல்வியின் உயரம் எட்டச்செய்ய‌
எந்த இமயத்துச்சிகரம் என்றாலும்
விரல் பிடித்து ஏற்றி
விண்ணையும் கூட அதிரவைப்பார்.

கோபமும் கடும் சொல்லும்
கொப்பளிப்பது உண்டு.
அது அவரது உயிரின் சீற்றம்.
என் உயிரும் உயர்வும்
காக்கப்படவேண்டும்
என்ற அவர் ரத்தமே
அப்படி லாவாவாய் உருகிப்பாயும்!

தந்தை சொல் போல்
மன் திறம் இல்லை!
நம் மனத்தை
அடி அடி மேல் அடி அடித்து
வார்க்கும் கலையே
அந்த மந்திரம்.
அப்பபா!
விடுதலை வேண்டும் எனவும்
நீ நினைப்பது உண்டு!
அது
அவர் நுரையீரல் பூங்கொத்திலிருந்து
உன் உயிர்க்காற்றுத்துளிகளை
இழந்து விடுவதற்கு சமம்.

வாழ்க்கையின் கான்வாஸில்
என் தூரிகைகள்
தற்செயலாய்
தடுக்கிவிழுந்து தடுக்கி விழுந்து
இழையும் ஓவியத்துக்கு
அவரே "ஃபினிஷிங் டச்".

அவர் முடிந்து போனாலும்
என்னை எப்போதும்
ஒரு வெற்றிக்கு
ஆரம்பம் செய்துவைத்துக்
கொண்டே இருப்பவர்.

பிறந்த நாளும் மறைந்த நாளும்
மட்டும்
நினைவில் ஏற்றிவிட்டு
மற்ற நாட்களின்
காகித காலண்டர் தாள்களின்
சவக்கிடங்கில்
அந்த சரித்திரத்தை
புதைத்துவிடும் முட்டாள்தனங்களின்
உலகம் இது.

வாழ்வின்
என்
பந்தய ஓட்டங்களில்
"அப் ..அப்..அப்.."
என்று
உருவமாயும் அருவமாயும்
குரல் கொடுத்துக்கொண்டே இருப்பது
அதோ நிற்கும் அவர்..
என் அப்பா!

=========================================
19.06.2016

படிக்கவேண்டாம்.






படிக்கவேண்டாம்.
=============================================ருத்ரா

படிக்கவேண்டாம்
இது கவிதை.

இதயம் சில்லு சில்லுகளாய்
உடைந்த போதும்
அதன் ஒவ்வொரு கோணத்தையும்
திருப்பி திருப்பி
கலர் காக்டெயில் கனவுகளை
கண்களில் பதியவிடும்
இடுக்குகள் நிறைந்த‌
அடுக்குகள் அடர்ந்த வனப்பகுதி
கவிதை.

கையில் காசு வாயில் தோசை
என்று பழக்கப்பட்ட‌
வியாபார நெடிகளுக்கு
எத்தனையோ ஒளியாண்டுகள்
விலகி நிற்கும்
ஒளித்திட்டுகள்
கவிதை.

கற்பனை விண்கோள்
ஒளிவேகத்தையே முறித்துப்போகும்
கூர்வேகம் உடையது
கவிதை.

அப்புறமும்
மொக்கை என்று
உதடு பிதுக்குவீர்கள்.
குத்தாட்ட ஜிகினாக்களின்
புழுதி மண்டலம்
இங்கே
புறமுதுகிட்டு ஓடிவிடும்.

பிள்ளையார் காப்பு முதல்
செப்பு வைத்து வரிசையாய்
செய்யும்
வார்த்தைகளின் சின்ன விளையாட்டு
அல்ல கவிதை.

இதற்கு வாசல் தாழ்வாரம்
பூஜை அறை
படுக்கை அறை
அடுப்பாங்கறை
புழக்கடை
என்ற வரிசையெல்லாம்
கிடையாது.
நுழையும்போதே
நமக்கான பாடை கொள்ளிச்சட்டி
சங்கு சேகண்டி
எல்லாம் தயார்தானா?
என்று நோட்டம் இடுவது தான்
இந்த காகிதங்களின் சரசரப்புகளில்
கேட்கின்றது.
வாழ்க்கை என்ற‌
அர்த்தம் தொலைந்து போன சொல்லுக்கு
பதவுரையும் பொழிப்புரையும்
கோவிலில் இருப்பதாய் சொல்லி
சொல்லி...சொல்லி சொல்லி..
எதிரொலி மட்டுமே நிறைய‌
இங்கு அடைத்துக்கொண்டிருக்கிறது
வௌவ்வால் புழுக்கைகளோடு.
உனக்குள்
பழைய கும்ம்மிட்டி அடுப்புகள்
குமைகிறதா?

ரணமாய் மாறிய
சொப்பனங்களின்
பாழடைந்த சுவர் இடுக்குகளில் போய்
வாழ்க்கையின் பிரகாச இடிமின்னல்களை
தரிசித்துவிட்டு வந்த‌
அதிர்ச்சிகள் இன்னும்
அடி ஆழத்தில்
நசுக்கிப்பிழிந்து கொண்டிருக்கிறதா?

காதலும் போதை.
கடவுளும் போதை.
மனிதம் எனும்
மையம் கழன்ற சுழற்புயலின்
மனமுறிவுகள்
எங்கணும் எங்கணும் எங்கணும்....
வண்ண வண்ண
லேசர் ஒளிப்பிழியல்களில்
தொலைக்காட்சிகளாய்
தொல்லைப்படுத்துகின்றன.
தேடல் தேடல் என்று
பெருமூச்சுகளை
சிறு மூச்சுகள் தேட‌
அந்த கீற்று மூச்சுகளும்
சில்லிட்டு மூடிக்கொள்கின்றன.
டி.எஸ் எலியட்
இப்படி முடிக்கின்றான்.
இதோ இந்த உலகம் முடியப்போகிறது.
ஆம்.
இதோ முடியப்போகிறது.
இதோ முடியப்போகிறது.
பெரிய ஓசைகளாய் அல்ல.
நாயின் நீண்ட நாக்கு
ஜொள் விடுவதுபோல்
காலத்தின் சொட்டுகள்
விழுந்து கொண்டே இருக்கின்றன.
ஆனாலும்
இதோ  முடியப்போகிறது
என்று
அதே நாயின் விடைத்த காதுகள்
உடுக்கு அடிக்கின்றன.
அந்த ஓசை ஊளையாய்
ஆகாய நெற்றியில் விபூதி பூசுகிறது.
பேரொலிகள் மரணமடைந்து போகின்றன.
மனமே உடலாகி
களைத்துப்போய்
வெறும்
முணு முணுப்புகளாய்
மிஞ்சுகின்றன.
முணு முணுப்புகள் கூட‌
அதோ
அடியில் புதைந்து
அகழ்வாராய்ச்சி எலும்புத்துண்டுகளாக....

=====================================================




ஞாயிறு, 21 அக்டோபர், 2018

நடுவுல கொஞ்சம் "கடவுளை"காணோம்

நடுவுல கொஞ்சம் "கடவுளை"காணோம்
=======================================ருத்ரா

நீக்கமற நிறைந்திருக்கும்
கடவுள்
நடுவுல கொஞ்சம் காணவே இல்லையே!
எங்கே?
சபரிமலையில் தான்.

ஆண்பாதி பெண்பாதியாய்
அந்த அர்த்தநாரீஸ்வரன்
அங்கே அந்த படிகளில்
ஏறிக்கொண்டிருந்தான்.
அவன் போய்த் தான் அங்கே
தரிசனத்தை காட்ட வேண்டும்.

பக்தர்கள் அவனை தடுத்து
நிறுத்தினார்கள்.
"யாரடா நீ! நாடகக்காரனா?
அந்த பெண்வேடத்துக்கு வயது என்ன?
அம்பது வயது தாண்டினாத்தான்
இந்தப்படிகளைத் தாண்ட முடியும்.
பத்து வயதிலிருந்து அம்பது வயது வரை
உள்ள பெண்மைக்கு இங்கே
அனுமதியில்லை."

"ஏனுங்க?
அவன் அடக்கமாய்த்தான் கேட்டான்.

"இது ஐதிகமில்லையடா.
பிறவியை அறுக்கத்தடையாய்
இருப்பது இந்த பெண்மைத் தன்மையே.
அது மோட்சத்தை தடுக்கும்"
சமஸ்கிருத ஸ்லோகங்களைக்கொண்டு
அவன்
நீட்டி முழக்கிக்கொண்டிருந்தான்.
வந்தவனோ
அப்பாவித்தனமாய்க் கேட்டான்.
"அப்படின்னா
ஆண்கள் பிறப்பிக்கும் தன்மை
இற்று விட்டவர்களா?"

"என்ன கேள்வி கேட்டாய்?
மூல வித்துகளை பொழிபவன் அல்லவா
ஆண்?"

"வித்துவைத்திருப்பவருக்கு அனுமதி உண்டு.
விளைய வைப்பவருக்கு அனுமதி இல்லையா?
மோட்சத்தை தடுப்பதற்கே காரணமான‌
விதைகளுக்கு இந்த விளைநிலத்தை
தடுக்கும் உரிமை
எங்கிருந்து வந்தது?"

அது கேள்வி அல்ல.
நெற்றிக்கண் திறந்த தீப்பொறிகளின்
பிரளயம்.
அப்புறம் அங்கே எல்லாம் 
புகை அடர்ந்த சூனியம்.
பிறகு
எல்லாமே வெறிச்சோடிவிட்டது.

எங்கும் நிறைந்த இறைமைக்கு
இடையில் ஒரு
ஒரு சூனியவெளியை 
உண்டாக்கிய அந்த 
ஐதிகத்துள் இருந்த ஆதிக்கம்
அரக்கனாய் நின்று அங்கே இடைமறித்தது.

அரக்கனை வதம் செய்ய‌
அவன் சூலாயுதத்தை தேடினான்.
எங்கே அது?
அவனுக்கு இன்னும் அது கிடைக்கவே இல்லை.
அவனைப்பற்றிய புராணத்துக்கு
நடுவுல   
கொஞ்சம் பக்கத்தைக்காணோம்.

===============================================


அறிவியல்புரம் ராமதுரை

அறிவியல்புரம் ராமதுரை
======================================================ருத்ரா

மனிதனின்
சிந்தனைப்புள்ளிகளில்
கள்ளிகள் மண்டும்
நம் மதவாத மண்ணில்
அறிவியல்புரத்துக்கு
அடுக்கடுக்காய்
மைல்கற்கள் நட்டு
அசத்திய அறிவியல் வீரர்
ராமதுரை அவர்களின் இழப்பு
ஈடு செய்ய இயலாத இழப்பு.
அவரது கட்டுரைகளை நம் மீது
ஏற்றிக்கொண்டால்
அந்த சூரியன் வரை கூட போய்
கிச்சு கிச்சு மூட்டலாம்.
கடலின் அதிக ஆழத்துக்குள் போய்
மனித ஆழத்தை தேடலாம்.
அறிவை ஞானம் என்னும்போது
அது பிரம்மஞானம் எனும்
பைத்தியக்காரத்தனத்தின் படுகுழியில்
தள்ளிவிடுகிறது.
அறிவியல் எனும் போது தான்
அறிவை
எப்படி அறிய வேண்டும்
ஏன் அறிய வேண்டும்
என்ற கேள்வியின் "ப்ளாக் ஹோல்"க்குள்
நுழைந்து பார்க்க சொல்கிறது.
அந்த வாசல்களுக்கு செல்லும்
வெளிச்சத்தின் சாவித்துளை
ராமதுரை எனும் அந்த‌
மா மனிதரின் கட்டுரைகளில்
நிரவி விரவிக்கிடக்கிறது.
அந்த எழுத்துக்களில் அவரை
தினமும் சந்திக்கலாம் வாருங்கள்.
அந்த ஒளிசிந்தும் அறிவுச்சுடருக்கு
நம் நெஞ்சம் நெகிழ்ந்த வணக்கங்கள்.

===============================================================





சனி, 20 அக்டோபர், 2018

திராவிடக்கட்சிகளை தூக்கியெறி

திராவிடக்கட்சிகளைத்  தூக்கியெறி
================================================ருத்ரா


உலா போகும்
உலக நாயகர்களின்
உளறல் மொழி இது.
ஊழலை ஒழிக்கும் போர் என்று
ஊதுகுழல் ஊதும்
இந்த சினிமா நாயகர்
முதலில்
கருப்புச்சட்டைக்காரன் என்றார்.
பேட்டியாளர்கள் கேள்விகள்
வீசிய போது
கருப்பு என்ன? காவி என்ன?
பார்க்கும் பார்வையின் கோளாறு
என்பது போல் பேசினார்.
சிந்துவெளி
தமிழனின்  முதல்வெளி என‌
முழங்கியவர்...
தமிழனின் உயிர்க்காற்று
வீசுவதே திராவிடம் என‌
ஒலித்தவர்...
திராவிடக்கட்சிகளை தூக்கியெறி
என்கிறார்.
கிரிக்கெட் வீரர் "டிராவிட்டிடமிருந்து"
திராவிடம் தொடங்குவோம்
என்றவர்
இந்தியாவே திராவிட நாடு தான்
என்று தானே
இவர் பங்குக்கு அந்த
இமயமலையில்  போய்
திராவிடக்கொடி ஏற்றவேண்டும்?
இப்போது
திராவிடமாவது கிராவிடமாவது
தூக்கி ஏறி என்கிறாரே!
ஊழலை எதிர்க்க
குரல் கொடுக்க வந்தவர்
திமுக வையும் அதில் சேர்த்துக்கொண்டார்.
திமுக ஊழல் செய்யவில்லை
என்று யாரும் இங்கு சொல்லவில்லை.
அதனோடு ஒட்டிக்கொண்ட காங்கிரஸ்
இங்கு
வரட்டுமே என‌
தந்திரமாய் நரிக்குரல் ஒலிக்கிறார்.
காங்கிரஸின் ஊழல்
கண்ணுக்கு தெரியவில்லை.
ஐம்பது ஆண்டுகளாய்
திராவிடம்
இந்த மண்ணில் வேர் பிடித்தது மட்டுமே
இவருக்கு அலர்ஜி ஆனது.
காங்கிரஸ் ஜீன் அவர் எண்ணத்தில்
அலையடிப்பதாய்
தலை நிமிர்த்தும் இவரிடம்
திராவிடம் என்ற சொல்
ஒரு தேர்தல் காற்று வீசத்தொடங்கியதும்
தலை கவிழ்த்துக்கொண்டதே.
மைக்கேல் மதன் காமராஜன்
என்று எல்லோரையும் வைத்து
காக்டெயில் காமெடி செய்தவர்
வசனங்களின்
வெறும் காக்கா ரெக்கைகளை
மகுடம் சூட்டிக்கொண்டு
மோடி வித்தைகள் காட்டுகின்றார்.
வித்தை காட்டுபவன்
ஒருவனை படுக்கவைத்து
அவனைத்துணியால் மூடி
உடுக்கு அடித்துக்கொண்டே இருப்பான்.
பார்த்துக்கொண்டிருப்பவர்கள்
சற்று விலக ஆரம்பித்தாலும்
ரத்தம் கக்கி சாவீர்கள் என்று
அவன் உடுக்கு அடிப்பான்.
இப்படி சினிமாக்காரர்களின்
உடுக்குகளால்
இந்த தமிழன் இன்னும் இங்கு
ரத்தம்
கக்கிக்கொண்டு தான் இருக்கிறான்.

===================================================








கழுவிய நீரிலும் நழுவிய மீனா கமல்?



கழுவிய நீரிலும் நழுவிய மீனா கமல்?
=================================================ருத்ரா

உச்சநீதி மன்றம்
சபரிமலைக்கோவிலுக்கு செல்லும் பிரச்னையில்
எல்லாப்பெண்களுக்கும்
சம உரிமை அளித்த‌தைத்தொடர்ந்து
தற்போது சபரிமலையில் நடைபெறும்
நிகழ்வுகள் பற்றி
கமலிடம்
செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு
நான் அந்த கேள்விகளுக்கு எல்லாம்
பொறுத்தம் இல்லாதவன்
என்னிடம் அதையெல்லாம் கேட்காதீர்கள்
என்பது போல்
நழுவிக்கொண்டு விட்டார் அவர்.
தசாவதரம் எடுத்து அமெரிக்க அதிபர்
புஷ் போல் எல்லாம்
கலக்கியவர்..கலக்கி கலக்கி
தெளியவிட்டவர்.
எதைக்கண்டும் அஞ்சாமல் அறிக்கை விடுபவர்.
விஸ்வரூபம் எடுத்து வெடிப்பவர்
இப்படி
"நமத்துப்போன" ஊசிப்பட்டாசாய்
ஊமை வேடம் போட்டது ஏனோ?
இது வரை ஏற்ற வேடங்களில்
இது தான் அவருக்கு பிடித்த வேடமோ?
அல்லது
இப்போது தான் வேடங்களை எல்லாம்
கலைத்து விட்ட நிலைமையோ?
அரசியல் அரிதாரம் பூசும் முன்
தோழர் பினரயி விஜயன் அவர்களை...
அவர்கள் சித்தாந்தத்தை...
தொட்டு ஆரம்பித்தவர்
அந்த தொடு புள்ளியை மறந்து
அவர் கோலத்தை தொடராமல்
இப்படி ஒரு
அலங்கோல அறிக்கையை அவரிடம்
யாருமே எதிர்பார்க்கவில்லை.
மய்யம் இழந்த டைட்டானிக் கப்பல் போல்
மய்யம் இழந்து போய்விடுமோ
அவரது ம.நீ.மய்யம்?
காவிக்குள் கருப்பா?
கருப்புக்குள் காவியா?
காவிய நாயகர் தான்
நெஞ்சைத்
தொட்டுப்பார்த்துக்கொள்ள வேண்டும்!


=====================================================

வெள்ளி, 19 அக்டோபர், 2018

வெண்குருகு ஆற்றுப்படை (2)

வெண்குருகு ஆற்றுப்படை (2)

==============================================ருத்ரா இ பரமசிவன்.

அற்றைத்திங்கள் அவ்வெண்ணிலவில்
நீள்நெடுங்கரையில் நிலம் கீறி நடந்து
சிறுமீன் உறுமீன் இரை கொள்ள ஓர்த்து
அலகு ஆட்டி உறுபசி தீர்க்க‌
புன் கால் பதிய‌ நுழை ப‌டுத்தாங்கு
ஓலை நறுக்கு ஒன்று கால் இடறக்கண்டு
இடுங்க‌ண் குவித்து ஓலையுள் உழுத‌
வ‌ரிக‌ள் சொல்லிய‌ வ‌ர‌லாறு உரைப்பேன்
.கேளிர் ஈண்டு ப‌ண்டு ஊழிப் பெய‌ர்ச்சிக‌ள்
.


"பெரும்ப‌ல்லி வ‌ருமுன் இருந்த‌ பேரூழி
பேழ்ந்த பெருங்க‌ல் பெரும்புல் காட்டிலும்
சுவ‌டு ஒற்றிய தொல்த‌மிழ் ஓதை
ப‌ர‌விப்பாய்ந்து ப‌ல்லூழி க‌ட‌ந்த‌
உயிர்வ‌ழிக் காதை கேள்மின்!கேள்மின்!

ஒற்றை ஏட்டில் ஒளிந்ததை விரித்து
வெண்குருகு விண்டது பலப் பல்லாயிரம்
.
பெரும்பல்லி இனங்கள் எலும்புகள் எச்சமாய்
தொல்லியல் அறிஞர் தொகுத்தது அறிவீர்
.
வகைப்படு பல்லிகள் வகையினை அறிந்தால்
உயிரியலுள்ளே ஒரு இயற்பியல் அறிவீர்
.
தொல்காப்பியம் மூன்றாய் உரித்த‌
எழுத்து சொல் பொருளெனுமாப்போல்
ஊரினம் கிடப்பினம் பறப்பினம் எனவாங்கு
உள்பொதி உண்மை ஓர்மின் நன்கு
.
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து
ஊழிப்பிழம்பை உய்த்து நோக்கின்
மூவடுக்கினிலே முகிழ்த்துக்கிடந்த‌
உயிரின் பயிரின் வகையினைக் கேள்மின் !
.
வெண்குருகாய் குரல் மிழற்றும்
யானோர் ஈண்டு அறிவியல் படைப்பு
.
விண்ணின் வெளியில் சூப்பர் நோவா எனும்
பெருஞ்சுட‌ர்ப் புதுமீன் உருக்கொண்டு க‌ருக்கொண்டு
வெடித்துப்பிற‌ந்த‌து,விந்தை விரிந்த‌து.

கோடிமீன்க‌ள் ஒன்றாய்த்திர‌ண்டு ஒருமீன் ஆகி
ஒளிர்ந்த‌பின் இற‌ந்து ஒழிந்திடும் நிக‌ழ்வு அது
.
அது த‌ந்த‌ விண்ணின் திட்டு ஒன்றில்
முத‌ல் உயிர்ப்பொறி வெளிச்ச‌ம் த‌ந்த‌து.

=========================================================
தொடரும்
.

வீணை

வீணை
======================================ருத்ரா

ராகமழையில்
உள்ளம் குளிர்ந்தன.
ஜன்ய ராகங்களும்
மேள கர்த்தாக்களும்
கணக்கற்ற ஒலிவடிவங்களில்
இன்னிசை பெய்தன.
இந்தியக்குழந்தைகள்
ஒவ்வொன்றும்
இந்தியாவின் இந்த யாழ்நரம்பில்
எப்போது
சுருதி கூட்டப்போகின்றன?
சோற்றுப்பஞ்சச் சித்தாந்தங்கள்
சொக்கப்பனையாய்
கொளுந்து விட்டு எரிந்தபோதும்
இந்தியன் என்னும் உள்ளொலியில்
இந்த இசை ஒளியே
நம் மண்ணின் ஒளி.
மொழியற்ற இந்த அமுத ஒலியிலும்
நான்கு வர்ண சுருதிபேதம்
நாராசமாய்க்கேட்கிறது.
சேரி ஜனங்களுக்கு வீணை இசையா?
சேற்றுக்கைக்குள்  இசை
ஊற்றுக்கண்களா?
என தள்ளுபடி செய்ததில்
கலைமகள் எல்லாம்
தெருவில் தான்  கிடக்கிறாள்.
பிறப்பொக்கும்எவ்வுயிர்க்கும்.
பண் என்பதே பள்ளு ஆயிற்று.
பறை எனும் தாளக்கருவி
அதனோடு இயைவது ஆயிற்று.
சிவன்களின் ஆட்டமும் அதன் வழி ஆனது.
ஆனால்
இந்த தொன்மைக்குடிகள் மட்டும்
குப்பைத்தொட்டிக்கு
போனது எப்படி?
பாயிரம் எத்தனை பாடி என்ன?
ஆயிரம் ஆண்டுகள் சூழ்ச்சி இது!
தமிழ்ப் பண்ணும் யாழ்வழி பிறந்ததே.
அந்த வரலாறுகள் திரும்பிட வேண்டும்.
அன்று நம் பத்துப்பாட்டுள் ஒன்றான‌
பட்டினப்பாலை
"பாலை" எனும் பண்(ராகம்)ணில்
பாடப்பட்டது அல்லவா?
தமிழ்த்தாய்க்கு
காங்கிரீட் கட்டிடங்களில்
சில பல கோடிகளைக்
கொட்டிக்கவிழ்ப்பதில்
என்ன பயன் கண்டீர்?
பழந்தமிழ் இனிக்கும்
அந்த "பாலை யாழின்"நரம்பு ஒலியையும்
தோண்டி ஒரு அகழ்வாராய்ச்சி செய்யும்
முனைப்பு வேண்டும் இந்த தமிழனுக்கு!
முன்னுக்கு பின்னாய்
மேலுக்கு கீழாய் முரண்பட்ட‌
இந்த வர்ணத்து நீதிகள்
தொலைந்திட வேண்டும்.
கருப்புக்கைகள் விறகு பிளக்க‌
வெள்ளைக்கைகள் மட்டுமே வீணை ஏந்த‌
"வெள்ளைத்தாமரை மகள்" எண்ணவேயில்லை.
வெள்ளைமனத்தவள்
இருட்டை நிரப்பியா இசையின்
விடியல் தந்தாள்?
கருப்பு வைரங்கள் மேலை நாட்டில்
இசையில் மகுடம் சூட்டுதல் அறியீரோ?
பாழாய்ப்போன அரசியல் வக்கிரம் நம்
பாதையை மறித்துக்கிடப்பதே
நம் உயிர்கொல்லி நோய்.
நோய் நாடி நோய் முதல் நாடி
அது தணிக்கும்
வாய் நாடி வாய்ப்பச்செயல்
ஆற்றும் நாளே
நமக்கு ஒரு நன்னாள்!

==============================================




வியாழன், 18 அக்டோபர், 2018

"காந்தள் நெகிழும் கடிவிரல்..."

"காந்தள் நெகிழும் கடிவிரல்..."
=========================================ருத்ரா இ பரமசிவன்


"காந்தள் நெகிழும் கடிவிரல் தூஉய்
ஐம்பால் வகுக்கும் கொடுநிலை அன்ன‌
அலையின் அலையின் நெளிதரும் நினைவின்
ஆரிடை மிதப்ப களிகூர் போழ்தின்
இன்னிசை ஏந்தினேன் தோழி நீ ஓர்க!
காலிடை ஆயிரம் கீற்றுகள் பிளக்கும்
பண் அஃதின் அமிழ்தும் சுவைப்பாய் மன்னே!"


பொருள்
==========================================


தலைவி தன் காந்தள் மலர் ஒத்த‌ மெல்லிய விரல்களால் கோதி கோதி தன் கூந்தலில் வகிடுபிரித்த போது வளைவு வளைவுகளாய்
இருக்கும் அந்த  கூந்தல் சிக்கலில் ஈடுபட்டிருக்கிறள்.அந்த
கூந்த‌லைப்போலவே அலை அலையாய் அவள் மீது கவிழும் இனிய நினவுகளில் அவள் மிதந்து களிப்புற்ற போது "ஒரு மெல்லிசையை தவளவிட்டேனே! தோழி அதனை நீ கேட்டாயா?" என்று அவள் தன் தோழியுடன் பேசுவதாய் உணர்கிறாள்."அந்த இசை ஒலி காற்றினுள்ளும் ஆயிரம் கீற்றுகள் பிளக்கும்.அத்தகைய பாட்டின் அமுதத்தையும் நீ சுவைப்பாயாக" என்று மகிழ்ந்து கூறிக்கொள்கிறாள்.

=================================================
sanganadaikkavithai composed by RUTHRAA E PARAMASIVAN

26.05.2017










இதோ ஒரு "ஸெல்ஃபி"










இதோ ஒரு "ஸெல்ஃபி"

==============================================ருத்ரா



யார் இந்த மானிடப்புழு?

நெளிந்து கொண்டிருந்தாலும்

நெளிந்த தடம் எல்லாம்

மின்னல் உமிழ்வுகள்.

ஆயிரம் கைகள்.

ஆயிரம் கண்கள்..தலைகள்.

ஆயிரம் ஓசை எழுப்பும்

ஆயிரம் நயாகராக்களை

கடைவாயில் ஒழுக விடும்

கடையனுக்கும் கடையவன்.

ஒளியாக‌

ஒலியாக‌

நரம்புகளைத் துளை போடும்

அதிர்வுகளை

இரைச்சல்களை வெளிச்சங்களை

சர்க்கரைப்பொங்கலாய்

தின்று கொண்டிருப்பவன்.

எங்கிருந்தோ

எதையோ

எப்படியோ

இழுத்துவந்து வெளியே போட்டு

அதன்

கருப்பொருள் தெரியாமல்

ஆரவாரம் செய்து கொண்டிருப்பவன்.

காரணமே கரு தரிக்காமல்

காரியமாய்

பெரிய

அசிங்கமான அழகான‌

ரெட்டை மயிர் மீசையை

ஒற்றி ஒற்றி

இந்த பில்லியன் ஆண்டுகளை

துப்பறிய வந்த கரப்பான் பூச்சியாய்

துரு துருப்பவன்..

கொடிய மரண வடிவத்தை

வைரஸ்ல் புதைத்து

தன் பிம்பம் காட்டுபவன்.

"செர்ன்"உலையில்

குவார்க் குளுவான் குழம்பை

தாளித்துக்கொண்டிருப்பவன்.

ஹிக்ஸ் போஸானயும்

நியூட்ரினோவையும்

கடுகு வெடிக்க வைத்து

கலகச்சமையல் செய்து கொண்டிருப்பவன்.

சீசனுக்கு சீசன்

எந்த நாட்டிலாவது

ரத்தம் கொப்புளித்துக்கொண்டிருப்பான்.

உண்மை சதை பிய்ந்து

கிடக்கும் போது

உண்மையை மொய்த்துக்காட்டும்

ஈக்களாய் அங்கே

அலையடிப்பான்.

வெள்ளமாய் வந்து

தேர்தல் பிரகடன‌ங்களை

கொட்டு முழக்குவான்.

ஈசல்களின் சிறகுகளில்

ஈஸாவாஸ்யம் ஸ்டிக்கர் ஒட்டி

தெறிக்க வைப்பான்.

காளையாய் வந்து

கொம்பை ஆட்டி ஆட்டி

ஒரு தேவரகசியத்தை

தெருவெல்லாம்

மூக்கணாங்கயிறு வழியே

மூசு மூசு என்று

மண் குத்தி

மண் கிளறி

தன் "பார் கோடு" தனை

தரையில் கிழித்துக்காட்டுபவன்.

வதை செய்பவர்கள்

வாலை முறுக்குபவர்கள் அல்ல.

பிரபஞ்ச மூச்சையே சுவாசிக்கத் தெரியாமல்

ஒரு வட்டமேஜைக்குள்

வார்த்தைகளை

சவைத்துக்கொண்டிருப்பவர்கள்

கையில் தான் வெட்டரிவாள்

என்று

கொதித்துக்குதிப்பவன்.

படீரென்று

கீழே விழுந்து

சுக்கல் சுக்கலாக‌

நொறுங்கியது அது.

அது நிழலா?

நிழலின் இமேஜா?

உடுக்கையிலிருந்தும்

வெர்ச்சுவல் ரியாலிட்டியின்

தூரிகை மயிர்கள் துடித்தன.

கோணா மாணா சித்திரத்துள்ளே

கோணல் கோட்டின் இன்ஃபினிடியில்

காட்சியில் பிடி படாத நேர்கோடு

வளைந்து வளைந்து

வக்கிரம் காட்டியது.

யார் அவன்?

எது அது?

அது வேறு ஒன்றுமில்லை.

தன் "செல்ஃபியை"

கீழே எறிந்த‌

இறைவனே அது!



===============================================

"சிந்தனை செய் மனமே"



"சிந்தனை செய் மனமே"

=================================================ருத்ரா



காகிதமும் பேனாவுமாக கவிஞன்.

எதிரே கடவுள்

கையில் ஒரு "ரிமோட்டுடன்".

"கவிஞனே!

காதல் கத்தரிக்காய் எல்லாம்

இருக்கட்டும்..

ஒரு பத்துப் பாட்டு

காதலின் வெத்துப்பாட்டு என‌

இல்லாமல் பாடு.

தவறி நீ பாடினாயானால்

இதை ஒரே அழுத்து..

உங்கள் எல்லோரையும் சேர்த்து

நானும் கூட‌

வெடித்துச்சிதறுவேன்.

தயாரா?

இறைவன் சீறினான்.

இப்போது தான்

ஏதோ ஒரு திரைப்படம் பார்த்தான்

போலிருக்கிறது.

காதலை குத்தாட்டம் குரங்காட்டமாக‌

பார்த்துவிட்டு வந்த

அவன் கூட

அதோ வெறி பிடித்து

ரிமோட்டை வெடிக்க காத்திருக்கிறான்.

கவிஞனுக்கு பயம்.

நான் போனாலும் பரவாயில்லை.

இந்த உலகம் காப்பாற்றப்படவேண்டுமே

என்ற நடுக்கத்தில்

"சிந்தனை செய் மனமே..."

பாடல்கள் தொடங்கி விட்டான்.

முதல் பாட்டு..

2 ஆம் பாட்டு..

3 ஆம் பாட்டு..

........

.........

11 ஆம் பாட்டு



இந்த தடவை கவிஞன் ஏமாறவில்லை.

கடவுள் காப்பு பாட்டையும் சேர்த்து தான்

பாடியிருக்கிறான்.

......

ஆனாலும்

என்ன ஆயிற்று?

இறைவன் ரிமோட்டை அழுத்திவிட்டான்..

எல்லாம் தொலைந்தது..

எல்லாம் புகைமயம்.

சூன்யம் எனும் வெறுமை...



காளைமாட்டின் மேல் இருந்த‌

தேவனிடம் தேவி

படபடத்துக்கொண்டிருந்தாள்!

"என்ன காரியம் செய்து விட்டீர்கள்?"

கவிஞன் சரியாகத்தானே பாடியிருந்தான்.

"என்ன பாட்டு

காதலாகி..என்று ஆரம்பித்து

கடைசியில் ..இன்பம்" என்று ஒலிக்க‌

அல்லவா அத்தனை பாட்டும் பாடினான்."



"சரி தான்.

உங்களுக்கு ஒரு புலவன் பாடினானே

காதலாகி கசிந்துருகி..

அது போல் துவக்கி

பேரின்பத்தை "பெரும்பேர் இன்பம்"

என்று

உங்களைப்பற்றியே அல்லவா

உருகி உருகிப்பாடினான்.



அப்படியா?

ஐயோ! தவறு செய்துவிட்டேனே!

மீண்டும்

"ரீ ப்ளே"பட்டனை அமுக்கிவிட்டால்

போயிற்று.

"தேவையில்லை"

இது ஆண்டவனின் அசரீரி அல்ல.

மனிதனின் கணீர்க்குரல்..

படைப்புக்கும் அழிப்புக்கும்

"பாஸ் வர்டே"

இன்பம் தான்..

மகிழ்ச்சி தான்.

இதில் சிறிது என்ன? பெரிது என்ன?

மனிதனே தான்

உனது பாஸ் வர்டு

உன்னை அறிய நீ

என்னைப்படைத்தாய்!

அறிந்து கொண்டாயா?

சொல்?

காளை மாட்டோடு

கடவுள் ஓடியே போய்விட்டார்!



==============================================
மீள்பதிவு.

புதன், 17 அக்டோபர், 2018

ஓலைத்துடிப்புகள்



ஓலைத்துடிப்புகள்
============================================ருத்ரா இ பரமசிவன்

அம்மூவனார் எழுதிய "நெய்தல் செய்யுட்"கள் கடற்கரையின் அழகை மிக உயிர்ப்புடன் காட்டுகின்றன என்பதை சங்கத்தமிழ் ஆர்வலர்கள் நன்றாகவே அறிவார்கள்.

"வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மடநடை நாரை"..

என்ற இந்த இரண்டு வரிகள் அவர் தீட்டும் ஓவியம் ஏழு கடலும் கொள்ளாது அலை கொண்டு அதன் கலை கொண்டு அதன் மணல் கொண்டு அதன் குருகும் சிறகும் குருகின் குஞ்சும் கொண்டு தீட்டப்பட்ட உணர்ச்சிப்பிழம்பு. அந்த இரண்டு வரிகளில் வரும் "செத்த" என்ற சொல் பலவிதமாய் பொருள் கொள்ளப்பட்ட போதும் "செத்தவன் கையில் வெத்தலை பாக்கு "இன்றும் நாம் வழங்குகிறோமே அந்த "செத்த நிலையை" தான் புலவர் மனத்தில் கொண்டிருக்கிறார் என்று உரையாசிரியர்கள் கருதுகின்றன. தொள தொள என்று அல்லது தத்தக்க பொத்தக்க நடை தான் இங்கு குருகின் மட நடை என குறிக்கப்படுகிறது.இருப்பினும் தன் குஞ்சு தொலைந்ததோ (செத்ததோ) என்ற துயரத்தில் அந்த தளர்நடை வெளிப்படுவதாகவும் கொள்ளலாம்.இன்னமும் நமக்கு புரியவேண்டுமென்றால் "தங்கப்பதக்கம்" திரைப்படத்தில் மிடுக்கு நிறைந்த அந்த அதிகாரி துயரம் தாங்காது தளர் நடையிடுவதை நம் நடிகர் திலகம் நடந்து காட்டுவாரே அதுவும் நம் கண் முன் விரிகிறது.

"செத்தென" என்ற சொல் மிகவும் அழகானது;நுண்மையானது.

ஐங்குறுநூறு 151லிருந்து 160 வரைக்கும் உள்ள அத்தனை பாடல்களிலும் அந்த வெள்ளாங்குருகின் பிள்ளை (குஞ்சு)யின் "மடநடை"அவ்வளவு செறிவு மிக்கது.தலைவியின் காதல் "மடம்" அதில் காட்சி ஆக்கப்படுகிறது.செத்த என்பதற்கு ஒரு பாடலில் மட்டுமே காணாமல் போன அல்லது இறந்து போய் விட்ட குஞ்சை தேட தளர தளர நடையிட்டதாக அம்மூவனார் பாடுகிறார்.மற்ற பாடல்களில் "போல" என்ற உவமை உருபாகத்தான் எழுதுகிறார். இருப்பினும் செத்த என்ற சொல் "போல" என்று வழங்கப்படுவதில் "சங்கத்தமிழின் சொல்லியல் முறை" ஒரு அ றிவு நுட்பத்தையும் சிந்தனைத்திட்பத்தையும் வெளிப்படுத்துகிறது.இறந்தவனுக்கும் இருப்பவனுக்கும் அப்படி என்ன வேறுபாடு வேண்டிக்கிடக்கிறது இங்கே என்ற ஒரு தத்துவ உட்குறிப்பு நமக்கு புலனாகிறது.மக்களுக்கு ஊறு செய்பவன் அல்லது எந்த பயனும் இல்லாதவன் அவன் உயிரோடு இருந்தாலும் "செத்தையாருக்குள் வைக்கப்படும்" என்கிறார் வள்ளுவர்.எங்கள் திருநெல்வேலிப்பக்கம் "செத்தை" என்பது காய்ந்த சருகுகள் மற்றும் குப்பைகள் ஆகும்.இன்னொரு குறளில் "உறங்குவது போலும் சாக்காடு" என்கிறார்.பெரும்பாலானவர்கள் இப்படி "நடைப்பிணங்களாய்"(செத்தவர்கள் போல்) இருப்பதால் தானே எல்லா பிரச்னைகளும் தீர்வு இல்லாமல் தத்தளிக்கின்றன.இங்கே "செத்த" "போல" என்ற இரு சொல்லும் ஒரு பொருளில் இழைகிறது.எனவே "வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தென"என்ற வரிகளைப்பற்றியே வெள்ளம்போல் சிந்தனை பெருகுகின்றது. அதனால் நான் எழுதிய சங்கநடைக்கவிதையே இது.







"வெள்ளாங்குருகின் பிள்ளை செத்தென.."
=======================================================ருத்ரா


பூவின் அவிழ்முகம் நோக்கும் தாதுள்
உயிர்பெய் அவிர்மழை நனையல் அன்ன‌
தீயின் தீஞ்சுவை நுண்ணிய நோக்கும்.
நிலவின் பஞ்சு வெள்ளிய வெள்ளம்
விண்ணின் பரவை வெரூஉய் நோக்கும்.
வெண்ணிப்பறந்தலை ததையநூறி
குருதி பொத்திய அகல் அறை மன்று
ஆயும் ஓர்க்கும் தன் சேய் தேடும்
மறத்தினை உடுத்த மணித்திரள் அன்னை
முலையின் தேக்கிய உயிர்ப்பால் அழிய‌
மூசு மூச்சின் உடற்கூடு திரிய‌
கண்ணீர் இழியும் கடுஞ்செறி தேடல்
அன்ன யாமும் அழல்குண்டு மூழ்கும்.
வெள்ளாங்குருகு பிள்ளை செத்தென
மடநடை பயிலும் மடப்பத்தின் மாய்ந்து
வெள்மணல் ஒற்றி விரிகுரல் வீசி
அவன்விழி தேடும் விசும்பின் உயர்த்தும்
வெறுங்கை வீச்சும் வானம் சிதைப்ப‌
காணா ஒள்வாள் செங்கடல் பாய்ச்சும்.
கதிர்மகன் இருந்தலை மலையிடை வீழும்.
எக்கர் சிவக்கும்;யாழல் சிவக்கும்;அண்ணியநீரின்
பொறிநுரை நிழலும் சிவக்கும் கண்ணே
அயிரைப் பிஞ்சும் அழல்சிறை காட்டும்.
படுபரல் துறைதொறும் அவனே நோக்கும்.

=================================================================
23.06.2015

திங்கள், 15 அக்டோபர், 2018

கமல் எனும் காற்றாடி

கமல் எனும் காற்றாடி
==============================================ருத்ரா


தமிழ் என்றார்.
ஆகா என்றனர்.
சிந்துவெளி என்றார்
மகிழ்ச்சியின் எல்லைக்கு சென்றனர்.
திராவிடம் என்றார்
அப்படி போடு அருவாளை என்றனர்.
எண்ணூர் ஒட்டிய‌ வாய்க்காலில்
தேனும் பாலும் ஓடவைக்கலாம்
என்றார்.
ஊழல் ஆட்சியை விரட்டணும்
என்றார்.
இவர் தான் நம் "நாயகன்" என்று
இறும்பூது கொண்டனர்.
கவிஞர்களுக்கு கூட புரியாத‌
எதுகை மோனைகளை
எடுத்துவிட்டார்.
சரி தான்.
இவர் தான் நம் சங்கப்பலகையின்
நடு "மய்யம்" என்று
தமிழில் புல்லரித்துக்கொண்டார்கள்.
காந்தி என்றார்
குரு என்றார்
கம்யூனிசம் என்றார்.
காவிக்குள் கருப்பு
கருப்புக்குள் காவி
என்று ஸ்பெக்ட்ரம் எனும்
விஞ்ஞானத்தையும் கூட‌
டிங்கரிங் செய்து
அடித்து நொறுக்கினார்.
பலே! சபாஷ்!
கரகோஷங்களில்
குளிக்கத்தொடங்கினார்.
சாதி மத ஆதிக்கத்தை
தவிடு பொடியாக்க புயல் ஆகினார்.
எல்லா திராவிடக் கட்சிகளையும்
தூக்கியெறி
என்று முழங்குகின்றார்.
அது தானே நியாயம்
என்ற உணர்வு பரவும்படி
ஊழல் பூதம் எதிர் நிற்பதை
பலூன் ஊதுகின்றார்.
காங்கிரஸ்...என்றதும்
அவர் காற்று இறங்கிய பலூனாய்
"கை"களை அங்கே இங்கே
அசைத்து
சலங்கை ஒலி பாணியில்
அபிநயம் செய்யத்தொடங்கிவிட்டார்.

என்ன நினைத்துக்கொண்டீர்கள் என்னை?
நான் என்ன பரமக்குடியில்
எருமை மாடு மேய்த்துவிட்டுவந்த பரம்பரையா?
என் ரத்தநாளங்களை பாருங்கள்
தேசிய நீரோட்டம் சிலிர்த்துக்கொண்டிருப்பதை
என்றும் கூட பிரகடனம் செய்வார்.
காங்கிரஸ்  உடைத்துக்கொண்டு வரட்டுமே
என்கிறார்.

காங்கிரசும் மூவர்ணத்தை
இத்தனை ஆண்டுகளாக‌
நான்கு வர்ணக்காற்றில் தானே
"பட்டொளி" வீசி பறக்கவிட்டுக்கொண்டிருந்தது?
முந்த்ரா ஊழல் என்று
முதன் முதலில் அந்த ருசி காட்டி
நாற்காலிகளுக்கு சட்டம் மாட்டித் தானே
வைத்திருந்தது?

ஈழம் எனும் நெருப்பை
வேள்வி போல காட்டியவர்
தேர்தலில் புகைவளையங்கள் விட‌
சிகரெட்டுக்கு நெருப்பு கேட்டு
கூட்டத்தை நோக்கி "கை" நீட்டுகிறார்.
விஸ்வரூபம் ஒன்று இரண்டு மூணு..
இது என்ன‌
விஸ்வரூபமா?
புஸ்வரூபமா?
கமல் எனும் காற்றாடி
விசிலடிக்கும் டவுசர் பசங்களுக்கு
நல்லதொரு விளையாட்டு.

================================================================


நம்பிக்கை

நம்பிக்கை
==============================================ருத்ரா

எழுந்துகொண்டு விட்டேன்
போர்வைக்குள்ளிருந்து உதறி.
கனவுச்சதையின் மிச்சம்
கண் இமைகளில் பனிபோல்
கவ்விக்கிடந்தது.
விழிப்பின் கத்திமுனை
அறுக்கக் காத்திருக்கிற‌து.
துண்டு துண்டுகளாய்
இந்த சுறாக்களுக்கு உணவாக.
இன்னுமா என் மீது இரவுக்கடல்
கொந்தளிக்கிறது?
பகல் நேரத்துக்கடமைகளும் கவலைகளும்
பள பளக்கிறது
"கில்லட்டின்" போல.
மறுபடியும் கால்களை உதைத்து உதறி
எழுந்திருக்கிறேன்.
ஜிவ்வென்று
என்னக்குள்ளிருந்து மனத்தின்
ஒரு அசுரக்கை முளைத்தது.
தன் முஷ்டியால்ஓங்கி ஒரு குத்து
அந்த பேய்களின் முகத்தில்.
என்ன செய்துவிட்வாய்?
என்னைத்தின்று விடுவாயா?
முடிந்தால் விழுங்கிப்பார்.
இருட்டுப்பிழம்பே
கரைந்து போ!
காணாமல் போய்விடுவாய்!
ஒரு கோடி வெளிச்சம்
என்னில் உண்டு.
நம்பிக்கை நம்பிக்கை.
ஆம்! நம்பிக்கையால்
இந்த வானம் சுருட்டுவேன்.
எல்லாம் என் காலடியில்.
"ஊழையும் உப்பக்கம்" காண்!
எப்பவோ எவனோ
எழுத்தாணி கொண்டு
ஒரு ஓலையில் கிறுக்கிவிட்டுப்போனான்.
ஆயிரம் ஆயிரம் புத்தகங்களில்
கோடி கோடி வரிகளில்
அந்த கதிர்வீச்சு பரவிக்கிடக்கிறது.
பூ .... இவ்வளவு தானா?
வரட்டும் அந்த டிராகுலாக்கள்
அவற்றை நான் உறிஞ்சித்தீர்த்துவிடுகிறேன்.
வாழ்க்கை எனும் அழகிய‌
மாணிக்கக்கல் என் மடியில்.
தூரப்போ! அழிந்து போ!
அவற்றின் முகத்தில்
காறி உமிழ்கிறது..அந்த நம்பிக்கை!
சட சடவென்று
ராட்சதத்தனமாய்
மகிழ்ச்சியின் உந்துதல்
ரெக்கைகளாய் என் மீது
இப்போது ஒட்டிக்கொன்டிருக்கிறன!

=================================================
ஒரு மீள்பதிவு.




அண்ணே அண்ணே

அண்ணே அண்ணே
===================================================ருத்ரா


அண்ணே நான் கமல்ஹாசன் ஆரம்பிச்ச "மய்ய"க்கட்சியிலே சேந்துட்டேண்ணே..

சரிதாண்டா..மய்யம்னா என்னன்னு தெரியுமாடா?

அதெல்லாம் தெரியாது.அதன் கொள்கை பிடிச்சுபோய்
சேந்திருக்கேன்.

அப்படியா. அது என்ன கொள்கை?

அதாண்ணே அது.

என்னடா சொல்றே.

ஆமாண்ணே அதாண்ணே அதுன்னு சொல்றேன்.

மய்யம் ஒங்கள்ட்டே இருக்கு.கொள்கை எங்கே இருக்கு?

அதாண்ணே அது..

டேய்..(பல்லை கடிக்கிறார்..அப்புறம் குழைவாய் கேட்கிறார்.)

மய்யத்துலே நீ சேந்தது சந்தோசம் ராசா.இப்ப கேக்கிறேன் நிதானமா
சொல்லு..

மய்யம் ஒங்கள்ட்ட இருக்கு."கொள்கை" எங்கே இருக்கு?

அதாண்ணே ..அது..

(இவர் கோபத்தோடு ஓடுகிறார் அவரை அடிக்க.அவர் தப்பித்து
ஓடிவிடுகிறார்.)

===============================================================




கடவுள்கள்

கடவுள்கள்
===============================================ருத்ரா

கடவுள் கனமானவர்.
ஆம்
அது ஒரு சிலுவையின் கனம்.
கடவுள் கூர்மையானவர்
ஆம்
உடம்பில் ஆணிகள்
அறையப்பட்டபோது
தெரிந்தது.
கடவுள் ரத்தமானவர்.
ஆம்
அது அங்கே பெருகியபோது
தெரிந்தது.
அப்போது அவர் சொன்னார்.
கடவுளே
தான் என்ன செய்கிறோம் என்று
இந்த கடவுள்களுக்கே
தெரியாது.
இவர்களை மன்னியும்.
பாவங்களை படைத்த‌
கடவுள்களும்
காத்திருக்கிறார்கள்
கடவுளிடம்
பாவமன்னிப்பு பெறும்
வரிசையில்.


=========================================================
22.12.2017





சனி, 13 அக்டோபர், 2018

எம்.கே.டி

எம்.கே.டி
==========================================ருத்ரா

"அன்னையும் தந்தையும் தானே..."
"கிருஷ்ணா முகுந்தா..."
அசோக் குமாரில் அந்த‌
தாலாட்டுப்பாடல்..
இன்னும் எத்தனையோ பாடல்கள்..!
பிரபஞ்சமே இழைந்து குழைந்து
நம் உயிர்களில் ஊடுருவும்.

அந்த‌ பாடல்களில்
இன்னும் அந்த சிங்கத்தலையை
சிலிர்த்துக்கொண்டு வரும்
எம் கே டி யின் இசை
யுகங்கள் யுகங்கள் யுகங்கள்
என்று
தாண்டிக்கொண்டே இருக்கும்.
ஏதாவது ஒரு புதிய கடவுள் தோன்றி
இந்த இசைச்செல்வனை
தட்டி எழுப்பி
நமக்குத்தரமாட்டானா?
என்ற ஏக்கத்துக்கு மட்டும்
மரணங்களே இல்லை.
தங்கத்தட்டில் தான் சாப்பிடுவாராம்.
வைர மோதிரங்கள்
விரல்களில் விளையாடுமாம்.
இசை என்பது நாதப்பிரம்மம் என்றால்
அந்த பாடல்கள் எனும்
பிரம்மோத்சவத்திற்கு
பொன்னும் வைரமும்
எவ்வளவு வேண்டுமானாலும்
குவிக்கலாம்.
கர்நாடக இசை என்றால்
அர்த்தம் புரியாத அவஸ்தைகள் நிறைந்த
ஓசைக்கூட்டம் என்று
உணர்ந்த போதும்
அந்த இனிமையான இசை
மேட்டுக்குடிகளின் சன்னல்களையும்
பிதுங்கிக்கொண்டு
வெளியே அருவியாய் கொட்ட‌
சினிமா தான் உதவியது.
அந்த இனிமையின் ஒலிப்பிரளயம்
பட்டி தொட்டிகள் கூட‌
புகுந்து பாய்ந்ததால்
அவர் படம்
மூன்று தீபாவளிகளையும் தாண்டி
புகழின் பாட்டசுகளை
வெட்டித்துக்கொண்டே
தியேட்டரில் ஓடி
வரலாறு படைத்ததே!
வரலாறு வழி விட்டு அந்த மாமனிதனுக்கு
வரவேற்பு அளித்ததை
யாரும் மறக்க இயலாது.
சிறைக்குள்ளும் அவர் அடைத்து வைக்கப்பட‌
அந்த கறைகள் கூட கரைந்து போனது.
இன்று இசைத்திருவிழாக்களில்
அதிகம் அடைத்துக்கொண்டிருப்பது
செவிகள் கிழிபடும்
மின் இசைக்கருவிகளும் மற்றும்
விஞ்ஞானத்தின் லேசர் படலங்கள் மட்டுமே.
தூய ஒலி மட்டுமே
ஒரு இனிய புயலை வாரி இறைத்த‌
அன்றைய அற்புதங்கள்
ஈடு இணையற்றவை!

=================================================

வெள்ளி, 12 அக்டோபர், 2018

"அந்த பசிபிக் கடலோரம்..."

SDC11418.JPG


"அந்த பசிபிக் கடலோரம்..."
====================================================ருத்ரா


கொஞ்சநேரம்
அந்த குத்துப்பாறையை
பார்த்துக்கொண்டிருந்தேன்.
பசிபிக் கடலோரம்.
ரெட் வுட் நேஷனல் பார்க்.
அமெரிக்கர்களுக்கு
அந்த நீல வானமும் கடலும்
காடுமே சொத்து.
தனிப்பட்டதாய்
சட்டைப்பாக்கெட்டில்
சுருட்டிக்கொள்ளும் எண்ணம்
கொஞ்சமும் இல்லாததால்
அந்த இயற்கை செல்வம்
இயற்கை அழகாகவே
அலைவிரிப்பில்
"ஹாய்"யாய் படுத்திருக்கிறது.
வரும்போது ஓட்டலில்
அந்த வழ வழா கிண்ணத்தில்
கொஞ்சம் பாலில்
கொஞ்சம் தானியப்
பொறிகளின் விழுதுகள்
விரவி சாப்பிட்டது தான்.
இப்போது
வயிற்றைக்கிள்ளியது.
ஆனால்
கண்களுக்கு செம விருந்து.
புல்கீற்றுகளின் வழியே
பசும் இலைக்கூட்டங்களின்
கண்களின் வழியே
நீலக்கடல்
அள்ளி அள்ளிக்கொடுத்ததை
நெஞ்சம் நிறைய‌
உண்டோம்.

=============================================
30.12.2016