SEKAR KRISHNASAMY!
a Wonderful
FACE BOOK FRIEND.
He always distills that
Majestic Green
of TANKASI AND SENKOTTAI
in his posts!
He is a radical shine
and a rational thought
amidst the irradical or irrational
things around.
___________________________EPS
முகநூல் நண்பர் சேகர் கிருஷ்ணசாமி
________________________________________
"போதும் போதும்
மரண ஒத்திகை பார்த்தது போதும்
நண்பரே!
வந்து
ஒரு லைக் போடுங்கள்.."
ஆம்.
முகநூலில்
அவர் மறைவு செய்தி
நம்பமுடியாததாய்
இருந்ததால்
என்னால் அப்படித்தான்
பகிர்ந்து கொள்ள முடிந்தது.
வாழ்வியல் மனிதவியல்
சமுதாய ரணங்கள்...
இப்படி
கலைடோஸ்கோப்பை
உருட்டி உருட்டி
பார்த்துக்கொண்டே இருப்பார்.
அந்த
செங்கோட்டைச்சிங்கம் அல்லது
தங்கம்
ஒரு விலைமதிப்பற்ற
முகந்தெரியாத
அகம் காட்டிய
ஒரு அன்பு நண்பர்.
நண்பர்களின் கமெண்டுகளை
"சேகரித்து"வைத்திருக்கும்
அந்த சேகர் கிருஷ்ணசாமி
இப்போது
நட்பின் கண்ணீர்த்துளிகளைத்தான்
சேகரித்து வைத்துக்கொண்டிருப்பார்.
சீசனுக்கு சீசன் வந்து
போகும் குற்றாலம் அல்ல அவர்.
எப்போதும் அந்த
சொல்லருவியாய்
விழுந்து கொண்டே இருந்ததை
மறக்க இயலாது.
அன்புடன் சொற்கீரன்
________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக