இலஞ்சிக்கலி.
__________________________சொற்கீரன்
குரூஉத் துளி பொருது பொறிகல் திரங்க
குற்றாலப் பொங்கு வெள்ளருவி நுடங்க
பரலொடு இலையோடு பாசடை நடுங்க
குணில் பாய் முரசின் அன்ன ஆங்கு
சிதர்க்கல் மைக்கண் அதிர் அதிர்
அறையும் பறையென ஆர்த்து வீழ
நீர்த்திரை மறைக்கும் நெடுவிழி ஓர்த்த
ஈரம் பொதி பார்வையின் ஒருபால்
நோக்க குழையும் நோல்படுத்தாங்கு
இலஞ்சி சுனைய குண்டு நீராம்பல்
தாள் அவிழ் பெருமடம் நாணக்கவிந்து
(தொடரும்)
ஒருநகை உதிர்க்கும் ஒள்வாய் இழியும்
மின்வாய் எதிர்க்கும் நுங்கின் பிளந்த
நுடங்கு சொல் கொண்டு பீலிய வருடி
நெஞ்சம் கலித்த சில்பூ கிளர்ந்து
முகைவிரிக் களிப்பில் உரைத்தது என்..
(தொடரும்)
________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக