மதன் பாப்
_______________________________
சிரிக்க விரும்பாத
சிரிப்பை விரும்பாத
சினிமா பார்ப்புக் குழந்தைகள்
உண்டா?
அவர்களுக்கெல்லாம்
வஞ்சகம் இல்லாத இனிப்புச்சிரிப்பின்
லாலி பாப்
மதன் பாப்.
சிரிக்க வைக்க "நகைச்சுவை பேச்சு"
வேண்டுமே?
காமெடி பண்ணி சிரிக்க வைக்கும்
பாணி அல்ல இவரது பாணி.
சிரித்துக்கொண்டே
சிரிக்க வைக்கும் சிறப்பு தான்
இவரது பாணி.
வயிறு குலுங்க குலுங்க
இவர் சிரிக்கும் போது
அது நம்மை அதிரச்செய்து
சிரிக்க வைக்கும்
மகிழ்ச்சிகள் தெறிக்கும்
பூகம்பச்சிரிப்பு ஆகும்.
எமனால் இவர் உயிரைத்தான்
பறிக்க முடிந்தது
ஆனால்
அவர் சிரிப்பின் "காப்பி ரைட்:"
நமக்குள்
இன்னும் குலுங்கி குலுங்கி
கேட்டுக்கொண்டு தான் இருக்கிறது.
அழுகையில் அஞ்சலி செலுத்தினால்
அவரே திடீரென்று
குலுங்கி எழுந்து கோபித்துக்கொண்டு
குலுங்கி குலுங்கி
சிரித்தாலும் சிரிப்பார்.
"மதன் பாப்"
நமக்கு மறக்க முடியாதவர்.
நம் துயரங்களின்
அமுக்கத்துக்கெல்லாம்
"ஷாக் அப்சார்பர்"
அவர் சிரிப்பு மட்டுமே.
அதோ பலூன்களாய்
அந்த மவுனச்சிரிப்புக்குமிழிகளை
குலுங்க குலுங்க மிதக்க
விட்டுக்கொண்டே போகிறார்.
நம் கண்ணீர்க்குமிழிகள் கூட
உடைபடாமலேயே
சிரித்துக்கொண்டு பின்னால்
ஓடுகின்றன.
நம் நெஞ்சம்
மறப்பதும் இயலாது
மறுப்பதும் இயலாது
அந்த சிரிப்பின் சரவெடிக்கலைஞனை!
________________________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக