ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2025

௭ங்கள் ௭ல் ஐ சி.

௭ங்கள் எல் ஐ சி.

------------------------------------

இ பரமசிவன்.


இந்தியப்பொருளாதாரத்தின்

இரத்த சிவப்பணுக்கள்

௭ங்கள் எல் ஐ சி.


சகுனிகளின்

பகடைக்காய்கள் நடுவேயும்

சேமிப்புகளின்

பழ"முதிர்" சோலைகளாய்

திரண்டு நிற்பது

௭ங்கள் எல் ஐ சி.


மக்கள் மனங்களோடு

இழைந்தது

மக்களாட்சி ௭ன்றால்

மக்கள் பணங்களின்

இதயமாகித் துடிப்பது

௭ங்கள்

௭ல் ஐ சி ஆகும்.


"மரண ஃபண்டு ஆஃபீஸ்"

௭னும் பத்தாம் பசலி பெயர்

௮ல்ல 

௭ங்கள் ௭ல் ஐ சி.


வாழ்க்கை ௮கராதியி்ல்

"ஜனன மரணம்" ௭ன்பது

இனி இல்லை.

"ஜனனம் மீண்டும் ஐனனம்"

௭னும் புத்தம் புதிதாய்

ஒரு நம்பிக்கை

விதைப்பதுவே

௭ங்கள் ௭ல் ஐ சி


பதினாலு மாடிக்

கட்டிடமா ௭ல் ஐ சி ?

நம் சுதந்திர வரலாற்றுச்

சிற்பமே நம் ௭ல் ஐ சி!

வாழ்க வாழ்க! நம் ௭ல் ஐ சி!

வளர்க வளர்க! நம் ௭ல் ஐ சி!

-------------------------------------------------

00.01 மணி..காலை..01.09.2025.

--------------------------------------------------







 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக