தேவையில்லாத ஆணிகள்
____________________________________
இது
அமீபா அவர்கள் எழுதிய தொகுப்பு.
இவரது படைப்புகளில்
சமுதாயப்பார்வை
மிகவும் முறுக்கேற்றப்பட்டு
முடுக்கிய ஆணிகளாக
இருந்தாலும்
பிடுங்கப்பட வேண்டிய
தேவையில்லாத ஆணிகளைப்
பற்றி
இவர் ஆழமாய் ஆவேசப்பட்டிருப்பதே
சமுதாயக்கூர்மையுள்ள ஓர்மை.
இவருக்கு என்
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.
விடியல் விளிம்பு
என்ற ஒன்று தான்
நாம் நட விரும்பி
அந்த மைல் கல்லையும் தூக்கி
சுமந்து கொண்டே ஓடி ஓடி
களித்து அல்லது களைத்துப்போகும்
இலக்கிய அடையாளம்.
நாம் அதை நோக்கிச்செல்ல செல்ல
அதுவும் ஒரு விகிதத்தில்
அதிகரித்து விலகிக்கொண்டே ஓடும்.
வினோதமான முரண்பாடாய்
அதற்கும் "ரெட்ஷிஃப்ட்" என்றே பெயர்.
கானல் நீர் நோக்கி ஓடும்
சித்தாந்த மான்களின்
சஹாராவாகத்தான்
இந்த மக்கள் இலக்கியங்களின்
பெருவெளியும் நீள்கிறது
என்பதே நம் ஆதங்கம்.
அதை
நம் சிவப்பு ஏக்கம் என்று
சொல்லிக்கொண்டு
அந்த கருங்குழியின் செங்குழிப்புலத்து
அடி வானம் அல்லது தொடு வானம்
வருடும் பணியை
நம் பேனாக்களுக்கு கொடுத்து
பெருமூச்சு
விட்டுக்கொள்வோமாக!
_________________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக