"ஜெய்ஹிந்த்!"
___________________________
சுக்கா? மிளகா?
சுதந்திரம் என
சீறினான் பாவேந்தன்.
சுந்திரதினம் பற்றி நாம்
சீறவும் தான் வேண்டும்.
நான்கு வர்ணத்தை நம்
மனத்தில் கட்டி
மூன்று வர்ணத்தை
கொடியில் கட்டி
போக்கு காட்டி
அவர்கள் "போங்கு ஆட்டம்"
ஆடியதெல்லாம்
அறியாதவர்கள் அல்ல நாம்.
மத சார்பற்ற ஜனநாயகம்
சோசியலிசம்
மத நல்லிணக்கம்
எல்லாம் நம் மீது நிழல் படிய
காரணமாக இருந்த
ஒரு மனப்பாங்கும்
நம்மை ஒன்றிணைய
வைத்துக்கொண்டிருக்கிறது
இந்த சுதந்திர தினவிழாவில்
என்பதும்
பெரு மகிழ்ச்சிக்குரியது தான்.
ஆனாலும்
ஆதிக்கத்தின் ஆணிவேரில்
சனாதனத்தையும்
சேர்த்து ஆணி அடித்து தானே
இந்த சுதந்திரப்படத்தை
மாட்டி வைத்திருந்தார்கள்.
ராகுல் காந்தி எனும்
விழிப்புற்ற
சமுதாய உணர்வாளர்தானே
உண்மையான திசைவெளிக்கு
இப்போது மக்களை இட்டுச்செல்கிறார்.
இருப்பினும்
விலங்குகள் இன்னும்
ஒடிக்கப்படாத நிலையில் தான்
நாம் கட்டுண்டு இருக்கிறோம்
என்பதை
ஒவ்வோரு ஆண்டும்
முழங்கி முழங்கிச்சொல்கிறது
இந்த
"ஜெய்ஹிந்த்".
முழங்குவோம்...
நம் அடிப்படை சமுதாய சமநீதி சுந்திரம்
வெற்றி பெற
மீண்டும் மீண்டும் முழங்குவோம்
"ஜெய்ஹிந்த்!"
__________________________________________
சொற்கீரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக