வெளிச்சம்
____________________________________
பிறப்பை அறுத்திடு.
அதனால்
இறப்பையும் நிறுத்திடு.
கடவுளே
உன் காலடி போதும்.
இந்த
பக்தியெல்லாம் சரி தான்.
கடவுளும் சரி தான்.
"பிறப்பே இல்லாத மூளி உலகத்தில்"
ஏது
கடவுளும் பக்தியும்?
கருப்பையே இல்லை எனறால்
காடுடைய சுடலைப்பொடிப்பூசி கொள்ள
சுடுகாடே இருக்காதே சிவனே?
மனிதர்களே வேண்டாம் என்றால்
கடவுளும்
அங்கே எதற்கு?
இந்த அடிப்படைக் கேள்வியை
புறந்தள்ளிய
மந்திரங்களை வைத்துக்கொண்டு
என்ன செய்வது?
கடவுள் மறுப்பு என்பது
ஒரு இருட்டின் மறுப்பே ஆகும்.
வெளிச்சத்தின் திறப்பே ஆகும்.
சிந்தனையின் விரிவே ஆகும்.
___________________________________________
சொற்கீரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக