வியாழன், 14 ஆகஸ்ட், 2025

அளும்பு

 அளும்பு

________________________________


"இதோ ஒரு சிம்பிள் டெஸ்ட்.

நீங்கள் எப்போது இறப்பீர்கள்

என்று தெரிந்து கொள்ள?"

ஆராய்ச்சியாளர்கள்

பேப்பரும் கையுமாய்

தலையை 

சொரிந்து கொண்டிருக்கிறார்கள்.

ஏதாவது ஒரு ப்ரோட்டீனின் 

ஜெனடீக் மேப்பை 

கையில் வைத்துக்கொண்டு

கோடிஃபிகேஷன் என்று

ஏதாவது சொல்லிக்கொண்டிருப்பார்.

அது சரி?

நீங்கள் எப்போது பிறக்கப்போகிறீர்கள்

என்று

அதோ அந்த சோஃபாவில் 

உட்கார்ந்து கொண்டு

இதோ யோசியுங்கள் என்று

ஏதாவது சூத்திரம் சொல்லியிருக்கிறீர்களா?

ஏன்?

அது தான் "ஏ ஐ"

என்னும் பிரமன்களுக்கு எல்லாம்

ஒரு தாத்தா பிரம்மம் எங்களிடம்

இருக்கிறதே என்று

ந்யூரல் மார்ஃபிக் நெட்வொர்க் பற்றி

பேருரை ஆற்ற கிளம்புகிறார்.

எப்படியோ?

பிம்பங்கள் பில்லியன் பில்லியன்களாய்

நிழல்கள் ஏற்படுத்தியுள்ளன.

அது குவாண்டத்தின்

மொமெண்டமா? பொசிஷனா?

பரவாயில்லை.

எப்படியோ அந்த சிதையில் நான்

படுத்துக்கொள்ள தயார்.

என்டேங்கில் மெண்டாய்

இனி நான்

எந்த கருப்பைக்குள் போகவேண்டும்?

என்ன செய்வது?

மண்டைக்குள் புகுத்தியிருக்கிறார்களே

மறு ஜன்மங்களை.

இந்த உலகத்தையே 

மழித்து விட்டு வழித்து விட்டு

மொளுக்கென்று உட்கார்ந்தாலும்

அந்த "கேசக்குப்பைகள்"

மூக்கு நுனியில் வந்து

ஸ்லோங்கள் சொல்லிக்கொண்டிருக்குமே!

நம் பழைய நூற்றாண்டுகளின்

அறியாமைக்கனம் தான்

நம்மை அழுத்திக்கொண்டு

அளும்பு பண்ணுகிறது.


_________________________________________

சொற்கீரன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக