சனி, 2 ஆகஸ்ட், 2025

எனக்கு அவசரமில்லை.

 

எனக்கு அவசரமில்லை.

_______________________________________
(வலிக்கின்ற "செண்பகப்பூக்கள்"‍ _1)


என் அன்பே!

நீ எங்கிருக்கிறாய் என்று

துருவிப்பார்க்கவும் மனதில்லை.

அந்த "துருப்பிடித்த" மனதுக்கு

என்ன தெரியும்

எனக்குள் கொதிக்கும் அந்த

தங்கக்குழம்பின் மினு மினுப்பு?

அந்த கூழாங்கற்குவியலுக்கு

என் மின்னும் சிகரங்களின்

உயரங்கள் தெரியுமா?

டிஜிடலாக 

உள்ளுக்குள்

உள்ளாக நுழைந்து பார்க்கும்

அந்த கணிதத்திற்கு தெரியுமா

சமன்பாடே இல்லாமல் 

நீயும் நானும் எட்ட நின்று

காதலின் "எட்டுத்தொகையை"

சமப்படுத்தி

கணப்பொழுதுகளை 

உழுது கொண்டிருக்கும்

நீள நீள மான‌

அந்த "சமன்பாட்டை?"

உன்னைத் தேடுவதற்கு

எனக்கு அவசரமில்லை.

இல்லை..கிடைக்கவில்லை என்னும்

வலி 

உடனே வந்து என்னைக் கொத்தி

குதறிவிடுமோ

என்பதே

அந்த இனிப்பு மின்னலின்

உயிர் கொல்லிச் சவுக்கடிகள்.


_______________________________________________

சொற்கீரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக