இல.கணேசன்
___________________________________
இந்தியாவின் புழக்கடையிலிருந்து
துவக்கப்பட்டது போல்
துவக்கப்பட்ட இயக்கத்தின்
ஒரு நேர்மையான தொண்டன் இவர்.
முகமூடிகள் நடுவே
உண்மையாகவே முறுவல் பூக்கும்
ஒரு சுடர் முகமே இவர்.
மனிதன் கடவுளைப்பார்த்து
கும்பிடப்போகும் போது
அவன் கைகளைப் பிடித்துக்கொண்டு
கடவுள் சொன்னது.
"நீ வேறு நான் வேறு அல்ல"
இந்த அத்வைதத்தின்
அடிவயிற்றிலிருந்து
எப்படி வந்தன
இந்த நான்கு வர்ண தீண்டாமை
பூதங்கள்?
இவருக்கு அந்த கேள்வியும்
அதன் பதிலும்
ஒரு ஆழமான புன்முறுவலை
மட்டுமே கொடுத்திருக்கும் என
நினைக்கத்தோன்றுகிறது.
இன்னும் கேட்டால்
இவரிடமும்
வானத்திலிருந்து விழுந்த
சொற்துண்டுகளாய் கருதும்
அந்த பாஷ்யங்களின் உபநிஷதங்களின்
புனித கொப்புளிப்புகள்
அட மழை பெய்யும் என்பதையும்
நாம் அறிவோம்.
இருப்பினும்
எல்லா அரசியல் கட்சிகளின்
சித்தாந்தங்களிடையேயும்
மௌனமாய் நெளிந்து ஓடவேண்டிய
கண்ணியமும் நாகரிகமும்
இவரிடம் சுடர்கின்ற
அந்த "விதிவிலக்கு"
நம்மை வியக்க வைக்கிறது.
ஒரு மாமனிதனாய் இருந்து கொண்டு
மனிதமைக்கு பூட்டப்பட்ட
விலங்குகளை
அவிழ்க்க வேண்டிய ஒரு
கட்டாயக்கண்ணியத்தில் இருப்பதை
அவர் எல்லோரிடமும்
காட்டிக்கொண்டிருந்தார்.
கண்ணிய மிக்க அந்த தலைவர்
மறைவுக்கு
நம் அஞ்சலிகள்.
________________________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக