சனி, 2 ஆகஸ்ட், 2025

என்ன இது?

 


என்ன இது?

_________________________________


"ஆணவக்கொலை"

ஆகா.சரியான தமிழ்ச்சொல் இது.

சரிங்க.

அட சரிதாங்க.

செத்துட்டாங்க.

இனி என்ன தான் செய்யமுடியும்

என்று

துடைத்துப்போட்டு விட்டுப் போகும்

ஊடகத்து மூடகச் சமாச்சாரம் 

அல்ல இது.

ஒரு ஆதிக்கத்தின் வெறி

துளைத்த‌

ஆயிரம் ஆயிரம் 

சல்லடைக்கண்களில்

குருட்டுக்கந்தலாய்

கிழிந்து தொங்குகிறது

நம் மனிதத்தின் ஜனநாயகக்கொடி.

இதன் ஆவேசங்களையும் சீற்றங்களையும்

சாதி சமய சவக்கிடங்குகளில்

வீசியெறியும் சூழ்ச்சிகளை

முறியடித்தாக வேண்டும்.

___________________________________________

சொற்கீரன்






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக