திங்கள், 11 ஆகஸ்ட், 2025

படு பாவி அல்லவா அவன்!

 


எனக்கு 82 வயது....

இப்போது இந்த காட்சியைப்பார்க்கலாம் என்று சாவகாசமாக 

ஒரு அலட்சியத்தில் பார்க்கத்துவங்கினேன்.

ஆனால் திடீரென்று உடைந்த குரலில் 

"கை வீசம்மா   கை வீசு" என்று ஆரம்பித்து 

உடம்பு குலுங்கி 

ஒரு அழுகை அங்கே சோகம் பிழிந்த

கடலாய் துயரத்தின் திவலைகளை அள்ளிவீசியது...

அந்தக்கடல் சிவாஜி தான்.

அந்தோ! 

என் 82 வயதுகளும் உடைந்து நொறுங்கி 

விழிகளில் 

கண்ணீர்ப்பிழம்பாய் பிதுங்கி வெளிவந்தது...

வாழ்கின்ற ஒரு இடைவெளியில்

அந்த அரிதாரப்"பாசமலரில்" கூட‌

"மரணத்துடிப்பை"கூட‌

வாழ்க்கையின் ஒரு அமிலச்சொட்டாக்கி

எங்கள் மீது மழையாக்கிய‌

படு பாவி அல்லவா அவன்!

___________________________________இ பரமசிவன்.



https://www.youtube.com/watch?v=3zQ5ngw6oWI

(MEEL PATHIVU)



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக