வியாழன், 14 ஆகஸ்ட், 2025

"கூலி"

 "கூலி"

_____________________________________


 

கூச்சல்களும்

கூக்குரல்களும் 

அல்ல 

கூலி.

நரம்பு புடைப்பதும்

கண்கள் சிவப்பதும்

மட்டும் அல்ல‌

விடியலின் அடையாளம்

என்று சுள்ளென்று 

சொல்லிக்கொண்டாலும்

மக்களின் அந்த குறுக்கு வெட்டுத்தளம்

ஏதோ ஒரு குமுறலை குறிக்கிறது.

தனக்குள் ஏதோ ஒரு

குறுகுறுத்த அரசியலை

தைத்து வைத்துக்கொண்ட போதும்

நான் வெறும் கூலிக்கு மாரடிக்கும்

அரசியல் வாதி அல்ல‌

என்று அன்று அவர்

புறமுதுகு காட்டியது ஒரு

ஒப்பற்ற வீரம் தான்.

பாபா ப்ளாக் ஷீப்

என்று 

ஒரு இமாலய ஆத்மீக "ரைம்"

பாடினாலும்

ரசிகர்களுடைய‌

ஒரு முரட்டு தேசத்தின்

கொடியை ஏற்றிக்கொண்டுதான் 

இருக்கிறார்.

கடல் கடந்தும் 

மொழி கடந்தும்

அவரது திரைச்செங்கோல்

உயர்ந்தே நிற்கிறது.

பழைய பாஷாவுக்கு

ஆயிரம் புது மெருகுடன்

ஏ ஐ யின் வண்ண வண்ண 

சேட்டைகளும்

சேர்த்த இந்த கலவை

ஒரு வெற்றியின் சூத்திரம்.

வசூல் என்பதும் 

பல இமயங்கள் கனத்த மகுடம் தான்

அவருக்கு.

எனக்கு அவரிடம் ஒரு வேண்டுகோள்.

அன்பான ரஜினி அவர்களே!

நீங்கள் இயற்கையான தோற்றத்திற்கு

நாணயமிக்கவராகவே 

இருந்த போதிலும்

அது மிக மிகப் பாராட்டுக்கு

உரியதாகவே இருந்த போதிலும்

இந்த கம்பீரத் தோற்றத்தின்

விக் மகுடமும்

தரித்தவராய் அந்த‌

சிங்கத்து சிகையலங்காரத்துடன்

வெளியே எங்களுக்கு

காட்சி தந்தால்

அது எங்கள் நெஞ்சை அள்ளிக்கொண்ட‌

சித்திரமாய் சிலிர்க்கச்செய்யும்.

"மெய் வருத்தக்கூலி தரும்"

படத்துக்காக மட்டும் அல்ல.

உங்களின் அசைக்க முடியாத அந்த‌

"இடத்துக்கும்" தான்

உங்கள் "மெய் வருத்த"க் கூலி தரும்.

வள்ளுவன் குரல்

உங்களுக்கு ஒரு பின்னணிக்குரல்.


______________________________________

சொற்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக