அரசியல் விழிப்புணர்ச்சின்னு அகலமா நீளமா ஆழமா பேசிட்டு இருக்கோம்.இது சட்டென்று மைல்கல்லுகள புடுங்கிப்போட்டுட்டு பாதையவே மாத்துற சமாச்சாரம்.நம்ம கலாச்சாரம் அப்டி இப்டின்னு ஆயிரம் ரெண்டாயிரம் சாதிகள வச்சுக்கிட்டு வலிமையற்றவர்களை வலிமை உடையவர்கள் அடக்கி ஆண்டு மிதிச்சு நசுக்கி கூழாக்கிக்கிட்டு இருக்கிறோம்.ஆணுக்கு பெண் சமம்னு பேசி பேசி வாய்ச்சவடால்தான் வுடுறோம். இன்னும் ஒரு பெண் தனியா போறத்துக்கு பாதுக்காப்பான ரோடு இன்னும் போடமுடியல.காந்தி அடிகள்கனவு இன்னும் அச்சடித்த புத்தகங்களில் மட்டுமே இருக்கு.அது சரி.இப்போது எதுக்கு பொலம்புரீங்கன்னு கேக்கரீங்களா? எல்லாம் வர்ர 2024 நெனச்சு தான்.எப்படி வச்சாலும் நிமிந்து நிக்கிற தஞ்சாவூர் பொம்மையாட்டமால்ல இருக்கு நம்ம தேர்தல் விளையாட்டு.இருக்கிற எல்லா மர மட்டைகளும் புழு பூச்சிகளும் கும்பாபிசேகங்கள்ளேயும் கும்பமேளாக்கள்ளேயும் தானே கவிந்து கிடக்குதுக.வேதாளம் எப்போதுமே சாதி சமய முருங்கமரத்திலெ ஏறி மக்களோட முதுகுல தானே சவாரிசெய்யுது.நாமளே சொல்லிகிட்டு இருக்கிறநம்ம கடேசி நம்பிக்கையான நீதிமன்றங்கள் அதோ எங்கோ ஒரு தெருக்கோடியிலே தான் இருக்கு. இன்னும் நூறாண்டு எங்க ராமராஜ்யம்னு தான் சொல்லிகிட்டு இருக்காங்க.யாருக்கோ சில பேருக்கு மொகம் துடைக்கிறகர்ச்சீஃபாத்தான் நம்ம பொருளாதாரம் இருக்கு.ஒலக நாடுகளும் அவங்க அவங்க வியாபாரத்துக்கு இந்த நாடு சந்தைத்திடல் ஆனால் மட்டுமே போதும்னு நெனைக்கிறாங்க.உலக மானிடவியல் மேம்பாடு மற்றும் மனித உரிமை கோரிக்கைகள் ரொம்பிக்கிடக்கும் குப்பைக்கூடைகளுக்கு ஐ நா வில் இட நெருக்கடியாம். என்ன செய்யபோகிறோம்?
மயக்கமா? கலக்கமா? பாட்டை அழுகையின் ஏதொ ஒரு பிரம்ம ராகத்தில் ஆனந்தமாய் கேட்டுக்கொண்டிருப்போம்.ராகத்தை நீலாம்பரி என்போம்.புரியாததை எப்படி அழைத்தால் என்ன?
__________________________________________________________________________
ஒரு வாக்காளன்
_____________________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக