குருகு 2
----------------------------------------------------------------------------
கம்பியூட்டர் ஓவியம் ...ருத்ரா ...ஆகஸ்ட் 1996 ப்ரையார் ஒக்லஹாமா. யு எஸ் ஏ

உன் மார்புக்கூட்டை
உற்றுப்பார்.
அது வெறும் ஏறியிறங்கும்
மூச்சு அல்ல.
அதை சிறகுத்துடிப்புகளாய்
உருவகம் கொள்.
அந்தப்பறவை எங்கு
வேண்டுமானாலும்
பறக்கும்.
அமைதியாய் அதன் ஒலி
ஹம்..ஸ்.. என்று
உன் மூச்சுகளில் ஒலிக்கும்.
ஹம்சம் என்றால்
அந்த மொழியில் அன்னம்.
அந்த ஒலிகளின் முட்டைகள்
பிரம்மத்தை குஞ்சு பொரிக்குமோ
என்று
இந்த உபநிஷத்தை
சொல்லிக்கொண்டு
இருக்கிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக