அகழ்நானூறு 29
____________________________________________
சொற்கீரன்.
நெடும் பழன வழியிடை வள்ளுகிர் யாமை
பொறிக்கண் விதிர்ப்ப கொடிவிடு கல்லிற்
பரற்கண் போகி பெண்ணை அந்தூறு
அண்ணிய நுங்கின் கிளர்கண் கசியும்
கள்ளினை பகுவாய் நிறைப்ப மாந்தி
ஓர விழித்து சில் அசைகூர் சிறுதேர் அன்ன
செல் இயல் கண்டும் கரும்பமல் படப்பை
பாசடர் தோகையின் இடை இடை அகவும்
அவள் ஒலி ஆங்கு அஞ்சிறைத்துடியென
முரல்வதும் கூர்விழி பொறிமா திரிமருப்பு
அவனுள் சுருள்போழ் செய்யலும் ஒல்லாதானாய்
சுரம் நீடு தோற்றும் நிழல் ஆறு நெளிய
வான்சுடர் திசையொடு திரிதரும் நெருஞ்சி
அன்ன அவளும் அவன் அலை வன்காழ்
நெடுஞ்சுரம் முகத்தவள் புதைபடு துயிலும்.
இமைசேரா முள்விழிக்காட்டில் சேக்கை இடறி
துயர் அழல் வீழ்ந்து வேகுவள் நோகுவள்
காட்சியும் அவனை தீயூழிப்படுத்தும்.
வையை ஆற்றின் காஞ்சி நீழல் அவள்
குரவை அயரும் காட்சிமுன் கைக்கொள
காற்றையும் பெயர்த்து காற்றுமுன் சென்றான்.
_______________________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக