அகழ்நானூறு 19
______________________________________
சொற்கீரன்.
எருத்தத்து இரீஇ வன் தொடை மணிவில்
ஏந்து அலைஞர் வெறிகொள் வன்சுரம்
கடவு எறி செலவின் நுழைபடுத்தாங்கு
பொருள்சேர் உலகம் புகுவதுள்ளி
நற்றிழை நலிய இறை ஊர்பு அறுவளை
வளையின் நெகிழ நோதல் நன்றோ?
குளவிப்புதற் கண் அரவுஎறி அஞ்சி
பூவின் வள்ளிணர் விடுப்ப விழையா
அந்தொகை அவிர்க்குரல் அகவல் வரித்து
விரித்த பூவுள் நின் முகன் நோக்கும்.
கறிமுறி இவரிய கழைமுனை ஓடி
கடுவன் வேர்க்கும் மந்தி நகை ஊட
அஃதே ஒக்க அவனும் ஆங்கோர்
அழுவத்துக் கொல்முனை நத்தம் ஏகும்.
பொறிக்கண் பாம்பு பரலொடு சுருள
பாய்விரித்து துயில்மடிந்த வெங்கானம்
என்று மீளும் என்றோர் தீயின் மழையென
கனவின் மூழ்கும் முளவுமா முள்மாரி
பீய்ச்சும் அற்றை ஓர் அவள் துயிலிறந்த
கொடுவதை பானாட்கங்குல்.
இருள்சேர் இருவினையின் நீள் ஆற்று நின்
பொல்லா வேட்டம் போதும் போதும்.
கொலைதொழில் வம்பலர் குருதி நசையும்
வீளை அம்பின் அதிர் விண்ணொலியில்
நெஞ்சு பிளந்தாள் இவள் நெஞ்சம் அறி.
__________________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக