அகழ்நானூறு 24
________________________________________
சொற்கீரன்
பாலைச்சுரம் அன்ன திரைச்சுரமும் ஆங்கோர்
நிரம்பா நீளிடை கடற்சுரம் கண்ணும் கண்போழ்ந்த
கடும்பல் திறத்தோன் முளிஅலை கல்லென
தண்பறை நாரை இனநிரை மேவ
வாள்மூக்கின் வன்சுறா உழப்ப ஆழல் மூழ்வும்
அலைவுறா நீச்சும் அவ்வெள்ளின் வெளியிடை
வீறு கொள வீங்கு நீர் புடைத்தாய் என்னே!
நின் குறுமகள் பாவை வண்டற் பாவை
அனையளாய் விரிமணல் எக்கர் வான்பூச்சூடி
குளகு குடையளாய் தழையாடை யுடுத்து
இன்பூ பூத்த செருந்திச் சுடரனாய் பரிமணல்
பருங்கண் தடம் தடம் நீ இவண் ஊர்வாய் என
அவள் விழி இமை அடுக்கத்து உள் பூத்து
நின்றாள் நோதக நீ செய்தல் கடுங்கோறல்
கொல் அறம் தவிர்க நினை நச்சினாட்கினியனே.
_______________________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக