அகழ்நானூறு 21
_______________________________________________
சொற்கீரன்
நிரைபறை குரீஇ சில்வீடு நிரப்ப
புள்ளி நீழல் பொறி ஆர்த்த மரத்து
அகலிடம் மறைத்த விண்பூச்சு ஒளியில்
ஒளிந்து களைந்த நான்வகை மொய்ம்பும்
நெகிழத்தந்த காதலின் களியில்
அவன் அவளாய் அவள் அவனாய்
விண்குயில் மண்ணும் மண்குவி விண்ணும்
மயங்கிய காட்சியில் விழிபுதைந்து வித்திய
வான்பயிர் விளைந்தது போன்ம்
கண்படை யாழ பண்ணி நேர்ந்தனர்.
மறை பொருட் காமம் விரிக்க ஒல்லா
மகிழ்வுப்பெருங்கடல் அலைஎறி அயர்தல்
இயலா சூர்நகை மூழ்கும் நாணம்
கல்லென வீக்களின் பாயல் இயலுமோ?
பேஎய் கண்ட இப் பெருமறைக் கனவு.
_______________________________________________________
சங்ககாலத்து காதலர் தினம் பற்றிய ஒரு செய்யுட்கவிதையை இந்த அகழ்நானூறு 21 ல் எழுதியிருக்கிறேன்.
_____________________________________
சொற்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக