அகழ்நானூறு 20
________________________________________
சொற்கீரன்.
அமர்த்த மழைக்கண் விழிநீள் அம்பின்
அஞ்சிறைத் துடிப்பின் மணிமிடை ஈர்ந்த
நெஞ்சத்து விடரகம் மாய்ந்தோன் தழீஇய
நின் எரிதழல் அன்ன குவளை ஆங்கு
மீண்டும் கூர்த்து தண்மழை வீழ்க்கும்.
பானாள் இரவு இகந்து செறீஇ மைக்குறி
நடுக்குறு கள்வர் குடர்வாங்கு கொடுவாள்
தப்புன வந்தும் அவனை எதிரிய
வன்கண் அழிய அளியள் ஆனாய்.
அம்நெளி நெறியிழை ஐம்பால் தீங்குரல்
கறங்கு வெள்ளருவி காட்சியின் மலியும்.
திங்கள் நீடியும் இருளே உனைத் தின்மோ
என இமைத்து இமைத்து ஓச்சிய கங்குல்
ஆறு போழ்ந்து வருதல் வேண்டா எனவும்
வேண்டி வேண்டி பயிர்த்தாள் மற்று
ஆயிழை அவணே நனி நலிய மெலிந்தாள்.
_________________________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக