ஞாயிறு, 26 பிப்ரவரி, 2023

பெர்முடேஷன் காம்பினேஷன்



பெர்முடேஷன் காம்பினேஷன் 

எப்படிப் போட்டாலும்

நம்முள் தைத்து வைத்திருக்கும்

பரமபதக்கட்டத்தின்

சாதிப்பாம்புகள்

நம்மைச்சுற்றி 

நெளிந்து கொண்டிருக்கின்றனவே.

ஏன் ஏணிகள் என்னாயிற்று?

அவையெல்லாம் 

சொர்க்கவாசல் ஊஞ்சல்களுக்காக 

பிரமன் தொப்புள்கொடியில்

அவர்களுக்காகவே திரித்த‌

நூலேணிகள் அல்லவா!

அப்புறம்...

அரசியலமைப்பாவது

சாசனமாவது?

இவர்களின் கட் அவுட் ஜனநாயகம்

மடியில் ஒளித்து வைத்திருந்த‌

சர்வாதிகாரத்தை

மகா உத்சவத்துடன் 

மேளம் தட்டிக்கொண்டிருக்கிறது.

அதோ கண்ணாடித்தம்ளரில் தண்ணீர்.

என்று தணியும் அந்த 

சுதந்திர தாகம்?

பாரதி கேட்டது தான்.

செவிப்பறைகள் சல்லடைகள் ஆகின

அந்த சில்லரைச்சத்தக்காடுகளில்.


________________________________________________

ருத்ரா




 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக