அகழ்நானூறு 23
__________________________________________
சொற்கீரன்.
கணக்கலை இகுக்கும் கறி இவர் சிலம்பின்
கழை வில்லாக கால் ஊழ் ஆங்கு கூர் அம்பாக
சிறைப்புள் இனநிரை வரியினை பிளக்கும்.
செம்புற்றம் உடைத்து இனஈயல் தின்று
சுரம் செறி இருட்டின் உருகாட்டி வெரூய்
குரூஉ மயிரியாக்கை கூனல் எண்கின்
அஞ்சுவரு ஆற்றின் ஆனாது வரும்
கடாத்த பெருமகன் எமியன் எனினும்
இமயம் இடறினும் பொடிபட படர்வான்
பசலை நின் மணிநிறம் அவ்வொளி காட்டும்.
இருநிலப் படுகையின் பரல் முரல் ஒலியில்
செந்நாய் ஏறு கூர்வாய் பிளப்ப எதிர்ப்படு
செலவும் தளர்வின்றி ஏகும் சிமைய வெற்பன்.
மண்டுஅமர் அழுவத்து புண்தேர் விளக்கத்து
குருதி ஒளியும் கருதினான் இல்லை.
இடைவழிச் செருவின் நிணம் சிதற நடந்து
அத்தம் ஆங்கோர் விண்தோய் விளங்கல்
எல்லிக்கொண்ட கங்குலும் கடந்தோன் அம்ம.
நனி நீண்ட பாலையும் நின் வளையொலி பட்டு
அவனுக்கோர் பட்டின் போர்த்த சாலையாகும்மே.
_____________________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக