ஞாயிறு, 26 பிப்ரவரி, 2023

கேமரோன்களும் ராஜமவுலிகளும்.

கேமரோன்களும் ராஜமவுலிகளும்.

______________________________________________

ருத்ரா 



திரையுலக சிற்பிகள்

சங்கமிக்கும் உலகம் தழுவிய 

இந்த தருணங்களே கூட‌

ஹாலிவுட் அல்லது பாலிவுட்

படம் போல் 

பேசப்படும் 

புகழ் பெற்ற நிகழ்வுகள் 

ஆகி விட்டன.

ஆர் ஆர் ஆர் படம்

ஆஸ்கார்களைக்கூட‌

பூ என்று

ஊதித் தள்ளிவிடும் போல் 

அல்லவா இருக்கிறது.

இந்தியர்களின் பெருமிதம்

வானை முட்டித்தள்ளிவிடுவது போல்

இருப்பது

பெரும் மகிழ்ச்சியே.

ஒரு சமுதாய உரசலின் சிறுபொறி

மூணு மணிநேரப்படமாக 

இருந்த போதிலும்

அது 

உலக வரலாற்றை

மனிதத்தின்  ஆழ்மனது ரணங்களோடு

மண்ணுக்குள் பின்னிய‌

நரம்பு முடிச்சுகளில்

காட்சிப்படுத்தப்படுமானால்

அது

உலக உள்ளத்துடிப்புகளை

அசைத்துப்பார்க்கிறது

என்று நாம்

உணர்கின்றோம்.

அலைவிரிப்புகளாய்

ஆவேசம் கொள்கின்றோம்.

அது ஏன்

இன்று முரண்பட்டு போனது?

கிராஃபிக்ஸ் பொம்மைப்படங்களாய்

மெய்போல் தோன்றும்

பொய்யின் ரத்தசதை மடிப்புகளாய்

இல்லாவிட்டால்

ஹிக்ஸ்போஸான்களைக்கூட‌

விநாயகர் கை பொரிஉருண்டைகளாய்

அல்லது

ஏதோ கிரேக்க ரோமானிய‌

சிறகு முளைத்த டைனோசார்களாய்

டிஜிடல் கணிதங்களின்

குடலை உருவி மாலைபோட்டு

மலைக்க வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஊதிபத்தி புகைபோல்

எழும் சமுதாய ஓர்மைகளை

மேலை நாட்டினர் கோடு காட்டினாலும்

இந்திய மேதாவிகளுக்கு

அனுமார் வாலும் பன்றி "அவதார்"களும் போதும்

லேசர் கொப்புளித்தல்களில்

கணிப்பொறியின் காக்கா வலிப்புகளில்

பிரமாண்டம் காட்டி நம்

மூளையை எல்லாம் மழுங்கடிக்க.

அன்று

சத்யஜித் ரே தந்த 

கருப்பு வெள்ளையின் கனமான‌

உண்மைகளுக்கு முன்

இந்த "சோளப்பொரிகள்"

என்ன கலை ருசியை காட்டிவிடும்?

தொழில் நுட்பம் வாய்ந்த‌

கோரைப்பற்கள் மூளைச்செதில்களை

கிழித்துத்தின்னுவதில்

சாதிகளும் மதங்களும் மற்றும்

மனிதம் கசாப்பு செய்யப்படுவதே

தெரியாமல்

கசாப்பு செய்யப்படும் உத்திகளும்

மிக மிக அருகில் உள்ள‌

நம் நூற்றாண்டை 

"சாட் பாட்"டுகளின்

க்யுபிட் கொட்டாங்கச்சியில்

கலக்கித்தரும் இந்த‌

காக்டெயிலை 

சுவையுங்கள் சுவையுங்கள்

சுவைத்துக்கொண்டே இருங்கள்.

வேர்வை வர்க்கம் பிழிந்து போட்ட‌

சக்கைகள் தான்

உங்கள் சரித்திரத்துப்பக்கங்கள்


_____________________________________________________________





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக