துருக்கி சிரியா .......
_____________________________________
இந்த பூமி கொஞ்சம்
தும்மல் போட்டுவிட்டது..
அதற்கா
இத்தனை ஆயிரம் மக்கள்
பலியாகுவது?
இத்தனைக் கட்டிடங்கள்
குப்பைத்தொட்டிக்குள் கிடப்பது?
பூகம்பம்
பிரளயம்
சுநாமி
இதெல்லாம் இயற்கை நிகழ்வுகள்!
இல்லை இல்லை
இயற்கை சீற்றங்கள்!
இல்லை பூமியின் உள் அழுத்தங்கள்.
போலாரிடி..ரொடேஷன் அனாமலிஸ்..
இது சொல்கிறது
கடவுள் இல்லை.
இருந்திருந்தால்
அந்த கருணை வடிவம் தடுத்திருக்குமே.
கடவுள் இருக்கிறார்
அதனல்
தண்டனை வழங்கியிருக்கிறார்.
எதற்கு?
கடவுள் இல்லை என்று சொன்னதற்கு.
சரி
இப்படியும் சிந்திக்கலாமே
கடவுள் இல்லை
என்பது
நமக்கு ஒரு எசசரிக்கையை
பாடம் நடத்தியிருக்கிறது.
விண்பிண்டத்தை
பல்லாயிரம் ஒளியாண்டுகளுக்கு அப்பாலும்
சென்று துருவிக்கொண்டிருக்கிறாயே
நீ இருக்கும்
பூமியின் உள் நிலையை
உனக்கு உணர்த்தும்
ஏ ஐ எங்கே போனது?
அந்த சாட் ஜிபிடி
தகவல் களஞ்சியம் என்ன ஆனது?
அண்டத்து அண்டை மனிதன்
ஏலியன் பற்றி
எத்தனை ஆராய்ச்சிகள்?
பூமிக்குள் இருக்கும்
பேரழிவுகளின் இந்த
பெருச்சாளிப்பொந்துகளைப்பற்றி
எப்போது
முன் தகவல்கள் பெறப்போகிறாய்?
அந்த விஞ்ஞானமும் அஞ்ஞானமும்
எப்படியோ போகட்டும்.
விஞ்ஞானத்தின் அடுத்த பக்கம் அஞ்ஞானம்.
அஞ்ஞானத்தின் அடுத்த பக்கம் விஞ்ஞானம்.
போதும் மனிதா!
இப்போது அந்த குப்பையில் கிடப்பது.
மனிதம்.
சமுதாய மனிதம்.
நம் உடனடி உதவிக்கரங்கள்
உள்ளன்போடு
அங்கே விரையட்டும்.
எல்லாவற்றாலும் அந்த துயரச்சுவடுகளை
துடைத்திட வேண்டும்.
உள்ளே நொறுங்கிக்கிடப்பது
கடவுளும் தான்.
மனித அன்பின் ஊற்று
சுரக்கட்டும்.
வாரீர் வாரீர்
மனிதம் காப்போம்.
________________________________________________________
ருத்ரா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக