அளபடை இயக்கவியல்
ருத்ரா
குவாண்டம் மெக்கானிக்ஸ் எனும் அளபடை இயக்கவியல் இந்த 21 ஆம்
நூற்றாண்டுக்குள் கூட அடை படாது. இதன் நுட்பமும் ஆராய்ச்சித் தினவும்
அறிவியலாளர்களுக்குள் இருந்து கொண்டே இருக்கும். விண்வெளி இயலில் இது புதிய கோட்பாடுகளை திறந்து வைத்திருக்கிறது.மேலே கண்ட இந்த நூல் ஜான் எல் போவெல் ,பெர்னாட் க்ராஸ்மான் ஆகிய இருவரால் ஆக்கப்பட்டிருக்கிறது. 1988ல் முதல் பதிப்பாக இது வெளிவந்துள்ளது.கல்லூரி மாணவர்களுக்கான படைப்பு இது. அறிவியல் ஆர்வம் மிக்க கணித புத்தகப் புழுக்களுக்கு கூட இதில் தீனி நிறையவே இருக்கிறது. அருமையான நூல்
என விஞ்ஞான மேதைகளால் புகழப்பட்டிருக்கிறது இந்த நூல்.
அலை இயங்கியத்தின் அடிப்படையிலிருந்து இது துவங்குகிறது.(பக்கம் 35)
ஒளி மின்னியல் விளைவுகளின் பரிசோதனை ஒரு முககிய திருப்பத்தை நமக்குத் தந்திருக்கிறது.ஆல்பர்ட் ஐன்ஸ்டின் தந்த கோட்பாட்டுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.உலகமே அவரது "சார்புக்கோபாடுகளை கொண்டாடிய போதும் இதற்கே நோபல் பரிசு கொடுக்கப்பட்டிருப்பது அவரது அறிவு நுட்பம் பெரிதும் பாராட்டப்பட்டிருக்கிறது என்பதையே காட்டுகிறது. சிதறல் அடையும் மின்காந்த அலையின் ஆற்றல் உட்கொள்ளப்படுவது வெளியே கதிராக பாய்ச்சப்படுவதும்
"துண்டு பட்ட அளவு பாடு அல்லது அளபடைகளிலேயே"தான் (டிஸ்கிரீட் குவாண்டா) உள்ளன என்பது தான் இந்த "அளவுபடை இயக்கவியலின்" இதயம் போன்ற
முக்கியப்பகுதி ஆகும். இதன் உள்ளே இன்னும் நுழைந்தால் வியப்பும் அந்த நுட்பம் தரும் ஒரு அறிவு நெகிழ்ச் சியும் நம்மை சிலிர்க்க வைக்கும்
(தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக