வியாழன், 13 அக்டோபர், 2016

ரெமோ

ரெமோ
===============================ருத்ரா இ பரமசிவன்

படம் பட்டய கெளப்புது.
நர்ஸ் கெட் அப் ல
ஒரு "பிஞ்சு" அவ்வை சண்முகிய‌
கண் முன்னால நிறுத்துனாலும்
நகைச்சுவையின் பரிமாணம்
ரவுசு கட்டுது.
கொலவெரி கணக்கா
எல்லாரும் ரெமொ ரெமோன்னு
உதடுகளை ஒழப்பிகிட்டு இருக்கானுவ.
கே.எஸ்.ரவிக்குமாரின்
செதுக்கல் தான்
வெள்ளுடை தேவதையென‌
சிவ கார்த்திகேயன்
உலா வருவதற்கு பெரிதும்
உதவுகிறது.
ஒரு ஊதாப்பூவு ரிப்பன்ன்னு ரீங்காரம்
பண்ணியவர்
ரோசாப்பூ பெண் போல‌
பளிச் காட்டுகிறார்.
ரஜனிக்கு தான் ஜப்பான்ல் விசிறிகள்னா
ரஜனியோட விசிறிக்கும் ஜப்பான்ல
விசிறிகள் பெருகிடுச்சாம்.
இவர் அழுகையைப்பாத்து
காமெடின்னு சிரிக்கிற வரைக்கும்
இவர் காமெடி ஜெயிச்சிக்கிட்டேன் தான் இருக்கும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக