சனி, 15 அக்டோபர், 2016

றெக்கை

றெக்கை
===================================ருத்ரா இ.பரமசிவன்

விஜயசேதுபதி
இனி ரூபாய்க்கு நாலு படம்
குடுப்பார் போலிருக்கே!
அதிக படம் எடுத்து கின்னஸ் புத்தகத்திலும்
ஃபேஸ் புக் போட ஆசையோ?
அவர் நடிப்பின் கோணங்களில்
360 டிகிரியையும் தாண்டி
மூவாயிரம் கோணங்கள் காட்டக்கூடிய‌
நடிப்புச்சக்கரவர்த்தி தான்!
ஆனாலும்
பாலச்சந்தரை ருசிபார்த்த‌
ஹைகிளாஸ் ரசிகர்களும்
அவரை ரசிக்கிறார்கள்.
ஃப்ரேம் ஃப்ரேம் ஆக ரசிக்க வேண்டும் என‌
நினைப்பவர்களை
இப்படி "றெக்கை"கட்டிய வேகத்தில்
போனால்
அப்புறம் வெறும் சேதுபதியாய்த்தான்
பார்க்க முடியும்.
இப்போது அவரிடம் "விஜயையும்" தாண்டிய‌
ஒரு விஜய சேதுபதியை அல்லவா பார்க்கிறோம்.
இப்போதைய ரசிகர்கள்
சிவாஜியைப்போல்
அவரது மூக்குநுனி நரம்பு கூட நடிக்க வேண்டும்
என்று எதிர்பார்ப்பதில்லை.
கேரளத்து மம்முட்டி போல்
"இயல்பை" அப்படியே
கருப்பு வெள்ளை படத்தில்
அப்பியது போல் அப்பிக்கொண்டால் போதும்.
தமிழ் நாட்டுக்கு
மம்முட்டி நிழலை நிஜமாக்கி
அதில் ஒரு வைரக்கிரீடம் சூட்டும் வேகத்தில் தான்
இருக்கிறார் விஜய் சேதுபதி!
றெக்கை படம்
கந்தலான திரைக்கதை அமைப்பினால்
காக்காய் ரெக்கையை மாட்டிக்கொண்டு
பறப்பது போல் இருந்தாலும்
கழுகின் கூரிய தீர்க்கமான நடிப்பும்
மிளிரத்தான் செய்கிறது.
"நடுவுல கொஞ்சம் பக்கத்தைக்காணோம்"
என்ற படத்தின் தலைப்பே
ஒரு அழகிய அரிய அற்புத கவிதை போன்றது.
அதில் அவர்
"கொஞ்சம் பக்கத்தைக் காணோம்"
என்று தேடாதீர்கள்
அதில் கதை எனும் சிந்தனைக்களம்
ஒரு நூலகமாய்
என் நரம்புச்சொடுக்கல்களில்
ஒரு நிமிர்ந்த கட்டிடமாய் இருக்கிறது
என்று காட்டி விட்டார்.
ஆண்டவன் கட்டளையில்
நாஸர் முன்னே நடந்து காட்டும்
அந்த "ராசா"வின் நடையே போதும்.
இந்த றெக்கையில்
அவர் பாத்திரம் மட்டுமேகடத்தல் அது இது என்று
மசாலா நெடிக்குள் விழுந்து கிடக்கிறார்.
"றெக்கை" வெறும் மொக்கை
எனும் அதிரடி விமரிசனத்தையும்
அவர் தான் குறுக்கே விழுந்து தடுக்கிறார்.
மொத்த பொம்மைப்பறவைக்கும்
றெக்கையை கீ கொடுத்து
முறுக்குகிறதும் அவர் தான்.
குறும்படத்திலும் குறும்படமாய்
"போன்ஸாய்" மரம் போல‌
கடுகுக்கதையை வைத்துக்கொண்டு
ரப்பரில் இழுத்துவிட்டது போல்
அட்வெஞ்சர்கள் காட்டினால்
அவர் அலுப்பு தட்டிப்போகும்
அபாயத்துக்குள் விழுந்து விடலாம்.
ஜாக்கிரதை விஜய் சேதுபதி அவர்களே!

====================================================

3 கருத்துகள்: