குழம்பியத்தின் அளபடை (குவாண்டம் சேயாஸ்)
=================================================ருத்ரா இ பரமசிவன்
(QUANTUM CHAOS)
குழம்பியம் என்பதே ஒரு இயற்பியலின் மைய வீச்சு ஆவதற்கு காரணம் "இயற்கையின் ஒற்றையா?ரெட்டையா?" விளையாட்டு தான்.நடக்கும் நடக்காது எனும் வடிவேலுவிஸம் கணித விஞ்ஞானத்தில் நிகழ்தகவு (ப்ராபபலிடி)எனப்படுகிறது.ஹெய்ஸன்பர்க என்ற விஞ்ஞானி குவாண்டம் கோட்பாட்டை தலைகீழாக திருப்பி விட்டார்.ஆற்றல், துகள் அல்லது துகளின் இருப்பிடம் (மொமென்டம் அன்ட் பொசிஷன்) இரண்டின் நிகழ்தவை தனித்தனியாய் கையில் பிடித்து குவாண்டம் (அளபடை)சொல்ல முடியுமா என்ற அவரது கேள்வி இன்றைக்கும் பல புதிய கண்டுபிடிப்புகளுக்கு வாசல்கள் திறந்து வைத்திருகின்றது என்பதில் ஐயமே இல்லை.
எதற்கும் கட்டுப்படாத எந்த திசைக்கும் குறி வைக்காத விசைப்பாடுகள் அல்லது நகர்ச்சி நிகழ்வுகள் இயற்பியலில் குழம்பியம் (சேயாஸ்) எனப்படுகிறது.விஞ்ஞானிகள் எதையும் கட்டுப்பாடுகள் எனும் கட்டம் கட்டி அதற்குள் எல்லா கட்டறுத்த நிகழ்வுகளையும் முளையடித்து ஆராய்ச்சி செய்து பார்க்க முயலுவார்கள்.குழம்பிய விசைகள் இருவகைப்படும்.ஒன்று ஒரு மையத்தை நோக்கி ஒருங்கும்.இன்னொரு வகை அல்லது இதற்கு எதிர்ப்பான வகை மையத்தை விட்டு வெளியே விரியும்.முதல் வகையை ஈர்ப்பிகள் (அட்ராக்டர்ஸ்) என்கிறார்கள்.ஈர்ப்பி எனப்படும் போது குழம்பிய விசைகள் மையத்தோடு தொடர்பு உடையதாக இருக்கும் என நீங்கள் கருதினால் நீங்கள் ஏமாந்து போவீர்கள். இந்த குளறுபாடுகள் (சேயாஸ்)பற்றியும் கூட ஒரு கணிதவியல் இயற்பியல் சமன்பாடு நிறுவ முடியுமா என்பதே விஞ்ஞானிகளின் கனவு.இதில் துல்லியமாய் ஒன்றும் இரண்டும் மூன்று என்பது போல் ஒரு கணிதம் கண்டுபிடித்து விட்டார்களேயானால் அப்புறம் பில்லியன் டாலர் லாட்டரி கூட நமக்கு சுகமாய் விழுங்கும் அல்வாத்துண்டுகள் ஆகி விடுமே.மேலும் திடீர் நில நடுக்கங்களை எதிர்பார்த்து கணக்கிட்டு உயிர்ப்பலிகள் நிறுத்தப்படலாமே. ஆம்.மனித அறிவு அதை நோக்கி பயணிக்கிறது.கோடியில் ஒரு பங்கு துல்லியம் கூட இன்னும் கைப்படவில்லை.எனவே கண்ணுக்குத்தெரியாத நம் நுண்கருவிகளுக்கும் எட்டாத அந்த நுட்பமான "நெற்றிக்கண்"ண்ணின் இமைகளை உரித்து விழிக்க வைக்க மனிதன் தன் முயற்சியை நிறுத்தவே இல்லை.இந்த கண்ணோட்டத்தோடு கடவுளைக்கூட சோதனைக்குழாயில் போட்டு குலுக்கியெடுத்துவிட மனிதன் விரும்புகிறான்.அதன் வெளிப்பாடே தீர்வியல் குழம்பியவியல் அல்லது குளறு பாட்டியல் கோட்பாடுகள் ஆகும்.(தியரி ஆஃப் டிடர்ன்மினிஸ்டிக் சேயாஸ்)
யாருக்கும் அடங்காத அந்த "அடங்காப்பிடாரி"ப்புள்ளி (இப்போதைக்கு நாம் அதை ஒரு புள்ளியாகத்தான் உருவகம் செய்து கொள்ளவேண்டும்)
ஏதோ ஒரு இடத்தில் ஆட்டம காட்டிக் கொண்டிருப்பதாகக் கொள்வோம் . அதை எப்படி அணுகலாம் என்று இயற்பியல் கணிதவியலாளர்கள் எப்படியெல்லாம் வலை வீசுகிறார்கள்என்று பாருங்கள்.மிக வேடிக்கையாக இருக்கும்.அந்த புள்ளியின் நிலைப்பாடும் நகர்ச்சியும் இங்கு அலசி ஆராயப்படுகிறது. அவை யாவன:----
(1) நிலைத்த புள்ளி (ஃபிக்சட் பாயிண்ட்)
(2) வளைவிடப் புள்ளி (சேடில் பாயிண்ட்)
(3) நிலையற்ற புள்ளி (அன்ஸ்டேபிள் பாயிண்ட்)
(4) வரம்பு வட்டநிலைப்புள்ளி (லிமிட் சைகிள்)
(5) இரு சுழல் வளையப்புள்ளி (பை பீரியாடிக் டோரஸ்)
இதன் விளக்கத்தை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக