ஞாயிறு, 16 அக்டோபர், 2016

எழுத்துக்கள்

எழுத்துக்கள்
===================================ருத்ரா
மன எழுச்சிகளை
பேனாவும் பேப்பருமாக‌
வைத்து
மல்லுக்கு நிற்பது தான்
கவிஞனுக்கு பிடித்த ஒன்று.
கவிஞன் அல்லாத எழுத்தரசன்கள்
தங்கள் ராஜ பாட்டையில்
தங்கள் வெண்கொற்றக்குடைகளை
விரித்துகோண்டே செல்லும்போது
நிகழ்வுகளை அழகாக கோர்த்துக்கொண்டே
அதை சிறுகதை ஆக்குவார்கள்.
அல்லது நாவல் என்று
கால்நீட்டி கைநீட்டி ஆசுவாசமாய்.
மல்லாக்க தன்னை கிடத்திக்கொண்டு
ஒரு சின்ன குமிழ்ப்பைக்கூட‌
மிகப்பெரிய்ய ஆகாயமாக்கி
அதை தலைகீழ் கடலாக்கி
இரு உடல்களுக்குள்
இரு உள்ளங்கள்
அல்லது
இரு உள்ள‌ங்களுக்குள்
உறைந்து கிடக்கும் இரு உடல்கள் என்று
அந்த மாலைச்சூரியன் சிவப்பை கசிந்து
அதில் "சில்ஹவ்ட்" எனும்
நிழலைக்கரைத்து ஊற்றுவது போல்
மனத்தை உருக்கி விடுகிறார்கள்...
கவிஞன்
சில சொற்களை
சிதற விட்டு
பிறகு அதில் கூடுகட்டி
சிறகடிக்கிறான்.
படிப்பவர்களின்
இதயங்களுக்குள் அந்த சில்லறைக்குருவிகள்
சொற்களின் அர்த்தங்களை
சத்தம் போட்டு சத்தம் போட்டு
சுநாமிகளை சுருள விடுகின்றன.

"அவள்" ஒரு சிறு "புன்னகை" செய்ததில்
பாருங்கள்!
இநத எழுத்துக்கள்
காலை கையை முறுக்கி
சுழற்றி
ஆகாயத்தில்
நாலைந்து சொமர்சால்ட்டுகள் செய்ததில்
தங்கப்பதக்கங்கள்
கால் விரல் விளிம்பில்
உருண்டு விழுகின்றன.
இந்த எழுத்துகளுககுள்ளிருந்தா
இத்தனை போதை?

==============================================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக