சனி, 1 அக்டோபர், 2016

சிந்திப்பீர் !
சிந்திப்பீர் !
 ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍=====================================ருத்ரா இ.பரமசிவன்

"ஒரு கோடி வெல்லலாம்"
இந்த சொல்
ஆகாசத்தில் கட்டி தொங்கவிட்டு
ஆசைகாட்டும்
பகாசுரக்கம்பெனிகள்
விளம்பரங்களின்
கோர வாய் பிளந்து நம்மை
விழுங்கும் வித்தை தான்.
இதில் கலந்து ஒரு கோடி பெறுபவர்களை
நாம் மனதாரப்பாராட்டுவோம்.
அது வேறு.
இது வேறு.
நூற்றைம்பது கோடி மக்கள் தொகை கொண்ட‌
ஒரு கனமான "பார"த மாக‌
நாம் உருவெடுத்து நிற்கப்போகிறோம்.
உலகப்பொருளாதார இனிப்பு தடவிய‌
சந்தைப்பொருளாதாரம்
விட்டால்
நம் சதையை எலும்பை
உயிர் விசை எனும் உழைப்பையும் சேர்த்து
ஏற்றுமதி செய்ய விலை பேசிவிடும்.
மேலோட்டமாக தெரிகின்ற‌
அழகிய டிசைன்கள் உள்ள‌
மலைப்பாம்பு நம்மை சுற்றிக்கொண்டு
முறுக்குகிறது.
ஆள வந்தவர்களோ
அதன் ஏஜெண்டுகளாய்
விரியன் பாம்புக்குட்டிகளாய்
நம்மை காவு வாங்கவே
நம் ஓட்டுகளையெல்லாம்
குத்தகைக்கு எடுத்துக்கொள்கிறார்கள்.
இந்த அற்ப சந் தோஷத்துக்கு
டன் டன்னாக அவலங்களின் பொதி
சுமக்க முடியாமல்
நாக்கு தள்ளி முழி பிதுங்குகிறோம்.
தமிழுக்கும் அமுது என்று பேர்
என்றால் இனிப்பு தான்.
ஆனால் தமிழுக்கு தமிழ் தான் பேர்
என்ற தன்  உணர்வு இல்லாமல்
ஒரு தேவ பாஷையின் போதையில்
கிடக்கிறான்.
இதனோடு தொலைக்காட்சிப்போதை!
இந்த பரிசு மழை
ஒரு தேன் மழையாய் தெரிந்தாலும்
இது போன்ற திசை திருப்பல்களில்
உங்கள் மீது இந்த‌
அமில மழை
விழாமல் இருக்க‌
நீங்கள் சிந்திக்க வேண்டும்.
உங்கள் மொழி
உங்கள் இனம்
உங்கள் நாடு
உங்கள் வரலாறு
உங்கள் இடம்
உங்கள் தடம்
பற்றியெல்லாம்
சிந்திப்பீர்! செயல்படுவீர்!!

=======================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக