செவ்வாய், 18 அக்டோபர், 2016

காந்திப்புண்ணகை


காந்திப்புண்ணகை
===================================ருத்ரா இ  பரமசிவன்

காந்திப்புன்னகை தாங்கிய‌
ரூபாய் நோட்டுகள்
இன்று முதல் ஈரமாகி விட்டன.
ஏன்?
கண்ணீர் விட்டு
அவை அழுதது தான் காரணம்.
இடைத்தேர்தலுக்கு
தேதி அறிவித்து விட்டார்களே.
பொதுத்தேர்தலின் போது
புண்ணாகிப்போன‌அந்த புன்னகை
இந்த அக்டோபர் ரெண்டில்
நடந்த அரசாங்க பூஜைகளாலும்
புனுகு தடவியது போல்
பிரசங்கங்கள் ஆங்காங்கே
நடந்ததாலும்
கொஞ்சம் குணம் அடைந்திருந்தது.
இப்போது மீண்டும்
மின்னணுப்பொறி வருடும்
கைககளாலும்
வட்டங்களாயும் சதுரங்களாயும்
இருக்கும் "செயல் வீரர்களின்"
007 வேலைகளாலும்
ஜனநாயகம் எனும்
கனவு
கரன்சிகளுக்கு
பண்டமாற்றம் செய்யப்படலாம்
என்று மனம் வாடிய
காந்திப்புன்னகை
காந்திப்புண்ணகை ஆனது.
அம்மா
அரசு கட்டிலில் இருந்தாலும் சரி.
அப்பல்லோ கட்டிலில் இருந்தாலும் சரி
எல்லாம் இயக்கிய படியே நடக்கும்.
இவர்களின் வியாபரத்தில் தான்
ஏழும் மூணும் கூட்டினால்
அஞ்சு வரும்.
அது என்ன புது ராமானுஜம் கணக்கு?
ராமராஜ்யத்துக்கு
ராட்டை சுற்றும்
காந்தியையே ஒரு ராம் தானே
கல்லறைக்கு அனுப்பினான்.
அதெல்லாம் சரி
வாக்குச்சீட்டுகளிலுமா
நாது ராம் கோட்சே
கரன்சிகள் வழியாய் உட்புகுந்தான்.
அந்த கண்டெய்னர்கள்
நல்ல நோட்டுகளின் மார்ச்சுவரியா?
கருப்பு நோட்டுகளின் சாங்க்சுவரியா?
கேள்விகளின் கழுமரத்தில்
பொய்மைகள் கந்தலாகிக்கொண்டிடுக்கின்றன.
அரசு அச்சு எந்திரங்களே!
பாவம்.
நம் தேசப்பிதாவை
இந்த நோட்டு சைத்தான்களிடமிருந்து
விடுதலை செய்யுங்கள்.

==================================================================1 கருத்து: