செவ்வாய், 18 அக்டோபர், 2016

வடிவேலு ப்ளஸ் சூரி

வடிவேலு ப்ளஸ் சூரி
=======================================ருத்ரா இ பரமசிவன்
(கத்திச்சண்டை)


வடிவேலு அவர்களே!
நகைச்சுவையின் சிகரம்
தண்டிய பின்னும்
ஒரு "பச்சைக்குதிரை"
விளையாட்டை
படம் காட்ட வந்திருக்கிறீர்கள்.
வருக! வருக!
உங்கள் வரவு நல் வரவு ஆகுக!
புலி கேசி தெனாலி ராமன்
என்றெல்லாம்
தனிமையிலே உரிமையை
நன்றாகவே தான் நிலை
நாட்டியிருக்கிறீர்கள்.
உங்களுக்கு அவர்கள்  ஜோடியா?
அவர்களுக்கு நீங்கள் ஜோடியா?
என்று தெரியவில்லை.
ரஜனி பார்த்திபன் சுந்தர் சி
விஜய் இன்னும்
புகழ்பெற்ற கதாநாயகர்கள் கூட்டணியில்
நீங்கள் கொடுத்தது
நிலையான சிரிப்பின் ஆட்சி தான்.
ஆனாலும்
கதாநாயகர்களுடன் நீங்கள்
அடித்த லூட்டியை விட‌
உங்கள் "பரிவாரங்களுடன்"
அதாவது உங்கள் சக சிரிப்பு நடிகர்களுடன்
தூள் கிளப்பிய பாணிகள் இருக்கிறதே
அந்த நகைச்சுவைகளை
பார்க்க வேண்டாம்..
நினைத்தாலே போதும்
விலாப்புடைக்க சிரித்து சிரித்து
விழுந்து கொண்டிருக்க வேண்டியது தான்.
எந்த காட்சி என்று சொல்ல?
நீங்கள் நடித்த எல்லா காட்சிகளையும்
கோர்த்தால்
செவ்வாய் மண்டலத்தையெல்லாம் தாண்டி
ஒரு சிரிப்பு மண்டலத்தில்
கொண்டு போய் சேர்த்துவிடும்.
"நினைத்தாலே இனிக்கும்" எடுத்த பாலச்சந்தர்
தன் முற்றுப்புள்ளியை வைக்காமலேயே
போய் விட்டார்.
"நினைத்தாலே சிரிப்போம்" என்று
உங்களை வைத்து "அனுபவி ராஜா அனுபவி"மாதிரி
ஒரு ரெட்டை வேடத்தில் படம் எடுத்திருந்தால்
அது ஒரு பிரம்மாண்ட சிரிப்பு வெடிப்படமாக‌
இருந்திருக்கும்.
உங்கள் புலிகேசியிலும் தெனாலிராமனிலும்
ரெட்டை வேடம் மிகச்சிறப்பாயிருந்த போதிலும்
பாலச்சந்தரின் முத்திரை தனி முத்திரை அல்லவா?
சரி போகட்டும்
கத்திச்சண்டையில்
நம் துரு துரு நடிப்பு வெள்ளம் விசாலுடன்
நீங்கள் கலக்கப்போகும் காமெடிக்கு
ஆவலுடன் காத்திருக்கிறோம்.
100 சதவீதம் வடிவேலுவுடன்
இன்னொரு 100 சதவீத வடிவேலுவும்
கலக்கப்போகிறார்களாமே..
அதான் நம் சூரியைத்தான் சொல்கிறேன்.
ஆம்.
இப்போது ரெட்டைவேடம்
சூரிக்கும் வடிவேலுவுக்கும் தான்.
யார் சூரி? யார் வடிவேலு?
எத்தனையோ படங்களில்
விவேக் வடிவேலு காம்பினேஷன்கள் பார்த்து
சிரித்து சிரித்து
வயிற்றைப்புண்ணாக்கி யிருக்கிறோம்.
இது புது காம்பினேஷன்.
வடிவேலு _வடிவேலு கம்பினேஷன்
அல்லது
சூரி_சூரி காம்பினேஷன்.
கத்திச்சண்டையில் சிரிப்பு மழை
எப்படி என்று தெரியவில்லை.
எதற்கும் குடையோடு போங்கள்
தியேட்டருக்குள்.
=====================================================================

1 கருத்து:

 1. bro
  let us welcome the born actor vadivelu
  i know a leading BRAIN SURGEON/NEURO SURGEON
  WHO USED TO WITNESS LOT OF VADIVELUS COMIC SCENES before he begins an operation.
  he says that vadis comedy make him vibrant composed patient and lot
  more good things

  பதிலளிநீக்கு