புதன், 12 அக்டோபர், 2016

சொல் காப்பியம்





சொல் காப்பியம்
=========================================ருத்ரா இ பரமசிவன்

தமிழ் மொழியின் சிறப்பு அதன் சொல் பரிணாமமே'..ஒவ்வொரு தமிழ்ச்சொல்லும் ஒரு தனி பல்கலைக்கழகம்..இதன் வேர்ச்சொல்லின் 
அடி ஆழத்தில் தமிழின் தொன்மை கால அமுக்கத்தில் நசுங்கிய புதை வடிவங்களாக (ஃ பாசில் கள் ) இருப்பதை அறியலாம்.நான் எழுதிய     இந்த சங்க நடைசெய்யுளுக்குள்  ஒரு "சொல் காப்பியமே "படிக்கலாம்.

வெள் நள் ஆறு
===============================================ருத்ரா இ பரமசிவன்

ஞெமலி மகிழ்தரு வெள் நள் ஆறு
நீள ஒலிக்கும் புன்மைசெறி கங்குல்
அல்கு பொலம்வரி அணியிழை நெகிழ‌
மைபொதி விசும்பு விரியுளை அன்ன‌
மஞ்சுபரி ஏகும் உருகெழு வல்மா
நோதல் கதழ்த்து நெஞ்சகம் சிதைக்கும்.
ஓமை ஒளித்து பார்ப்புகள் கூட்டும்
வரிமணல் கீற வடியிலை எஃகம்
பசும்புண் பிளப்ப வெஞ்சமர்  கூர‌
அலமரல் ஆற்றா அளியள் ஆகி
கம்பலை உற்று கண்மழைப் படூஉம்
மடமும் பயிர்ப்பும் உடைபடுத்தாங்கு
ஊழி பெயர்த்த பெருங்கல் கொல்லோ
பொடிபட வீள்க்கும் சேக்கை கண்ணே.
பொருள் மறை செய்து பொருள் நசைபெருக்கி
பொரியும் தீச்சுரம் உள் உள் கடாஅய்
யாது ஆற்றினை?அழியுமென் அணிநிறை.
அரவு வாய்ப்படு மென்சிறை அம்புள்
ஆகுவன் அறிதி.வீடத்தருதி.
மலைபடு ஊர! மல்லல் சீர்த்து.

===============================================


"ஞெமலி மகிழ்தரு" என்ற சொல்லை ஆக்கி இச்செயுளை நான் எழுதியமைக்கு ஒரு நடு இரவில் படித்த "அகநானூற்றுப்பாடல்" (மணிமிடைப்பவளம்)தான் கரு.அதில் "மகிழ்" என்ற சொல் நாய் குரைத்தலை குறித்தது.கூரிய பற்களை உடைய நாய் "மகிழ"த் (குரைக்க)துவங்கியதை புலவர் வெகு நுட்பத்துடன் எழுதியிருந்தார்.அப்போது தான் என் ஐயம் கூட தீர்ந்தது."கூரிய பற்கள் போல் இதழ்கள் கொண்ட பூவுக்கு "மகிழம்பூ" என பெயர் ஏன் வந்தது என்று தெரிந்து கொண்டேன்.சொல் பூவிலிருந்து நாயின்
பற்களுக்கு தாவியதா இல்லை நாய் குரைத்தலே புலவருக்கு மகிழம்பூ இதழ்களை நினைவூட்டியதா என்று தெரியவில்லை.நம் தொன்மைத்தமிழின் சொல் ஆழத்தில் பற்பல மொழிகள் ஏன் இப்படி கிடக்கக்கூடாது? என்ற சிந்தனை என்னுள் எழுந்தது.

அதில் நான் எழுதிய சங்க நடைச்செய்யுள் கவிதையே இந்த "வெள் நள் ஆறு."
இதை  01/12/14ல் எழுதினேன் 

=============================================================
இதன் பொழிப்புரை தொடரும்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக