சனி, 8 அக்டோபர், 2016

அம்மா அம்மா அழைக்கின்றோம்.

அம்மா அம்மா அழைக்கின்றோம்.
=========================================ருத்ரா இ பரமசிவன்

சட்டசபை படுத்துக்கிடக்கிறது.
அரசாங்கத்துக்கு மூச்சுத்திணறல்.
ஜனநாயகத்துக்கு ஓட்டுப்போடும் போது
தாக்கிய பணக்கிருமி தொற்று ஏற்பட்டு
மூளையில் முடக்கம்..அதனால்
யாவரும் இங்கே மூலையில் முடக்கம்.
"நோய் நாடி நோய் முதல் நாடி
அது தணிக்கும்
வாய் நாடி வாய்ப்ப செயல்"
அப்படி செயல் படுத்தும் செயலக‌மே
கண்ணுக்கெட்டிய வரையில்
இருப்பதாகத் தெரியவில்லை.
மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி
மக்கள் எவ்வழி மன்னன் அவ்வழி
கண்டெய்னர் கண்டார்
கன்டெய்னரே கண்டார்.
காந்திப்புன்னகை
கைக்கு வருமா?
பஞ்சாயத்துத்தேர்தல்
பணமழை வெள்ளம்
எங்கே எங்கே எப்போது?
அம்மா..அம்மா..அம்மா என்று
அம்மா என்ற சொல்லே
கொச்சைப்பட்டுப் போனது.
அதனால் அம்மா உங்களை
உள்ளம் உருகி அழைக்கின்றோம்.
புதிய அம்மாவென
புடம்போட்ட அம்மாவென‌
நலம் பெற்று மீண்டுவந்திட‌
இதயங்கள் நைந்து
அழுது தொழுது அழைக்கின்றோம்
அப்பல்லோவா உங்கள் கோட்டை?
மிடுக்காய் எழுந்து வருவீர்கள்.
தமிழ் தேசம் என்ன கோமா தேசமா?..புது
கொள்கை விளக்கின்   சுடர் தாங்கி
வந்திடுவீர்கள் !வந்திடுவீர்கள்!
அழைக்கின்றோம்
அம்மா அம்மா அழைக்கின்றோம்.

===========================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக