தனுஷ்"கொடிக்கு" ஜே !
====================================ருத்ரா இ பரமசிவன்.
ரெட்டை வேட லகானை பிடித்து
வேட்டையாட துவங்கி இருக்கிறார் தனுஷ்.
வித்யாசம் அதிகமாக காட்ட
மேக் அப்புக்குள் அதிகம் புகவில்லை.
கொஞ்சம் தாடி மீசை
குங்குமக்கோடு அவ்வளவு தான்,
நடிப்பில் தான் அந்த
"தின் ரெட் லைனை"காட்டுகிறார்.
அது அவரால் முடியும்.
மாமனாரின் "கொடி பறக்குது"வில்
கொடி மட்டும் தனிமரமாய் இங்கே
முண்டாசு கட்டுகிறது.
முட்டி உயர்த்துகிறது.
குங்குமம் பூசிக்கொண்டு
உருத்திராட்சம் உருள
அங்கே அதர்மம் தூளாகப்போகுதுன்னு
கோடி காட்டுது கொடி !
கபாலி பஞ்ச் கொஞ்சம் மாறுகிறது.
அங்கே "நெருப்புடா"
இங்கே கொடி "பறக்குதுடா"
கேட்கும் போது "பொறி பறக்குதுடா"
என்று தான்
நமக்கும் சீட்டியடிக்க வைக்கும்
என நினைக்கிறேன்.
நாமள்ளாம் "சிடிஸன்"ன்னு
சொல்லிக்க்கிறத விட
"சீட்டிஸன்ன்னு" சொல்லிக்கறதுலே தான்
இந்த தேசத்துக் கொடியே
சிலித்துப்போயி நிக்குது.
அதனால அந்தக்கொடி
மூவர்ணத்துக்குள்ள நாலு வர்ணத்தை
காட்டுதா? இல்லையாங்கறப்பத்தியெல்லாம்
கனமா சிந்திக்கிறதுக்குள்ள
ஜன கண மன வுக்கு
சல்யூட் வெச்சிருவோம்..
சண்டைக்காட்சியெல்லாம் பாத்தா
கிராமத்து அத்தியாயத்துக்குள்ளேயும்
பூந்திருக்கிறதா நாம் நம்புவோமாக!
துண்டு பிலிம் டீசரில் அந்த
"இந்து"மகாசமுத்திரத்துக் களேபரங்களை
காண முடியாது தான்.
"இப்ப என்ன பண்ணப்போறேன்னு "
ஒரு கட்டத்தில்
விஜய் அப்பா "சந்திரசேகர்" கேட்கிறாரே
அதில் ஏதாவது "திருப்பு முனை"யை
கிசு கிசுக்கலாமோ!
த்ரிஷாவுக்கு கொஞ்சம் சீரியஸ் ரோல் .
காதலுக்கு முகத்தை அப்படி
அழகு காட்டுவதில் கூட
நளினம் நர்த்தனம் ஆடுகிறது.
அந்த இன்னொரு கதாநாயகி
தீபாவளி மத்தாப்பு தான்.
அடி வாங்கி விட்டு அடி கொடுத்தாக
அம்மாவிடம் செல்லம் கொஞ்சும் தனுஷ்
தனியாக "பளிச் " காட்டுகிறார்.
அதை விடுங்க!
எல்லா வெற்றிக்கும் பின்னாலே இரு
க்கிற
வெற்றி மாறன் பெரிய ப்ளஸ் பாயிண்டு.
இயக்காமல் இயக்கும் அவர்
துரை செந்தில்குமாருக்கே
தனியாட்சி கொடுத்திருக்கிறார்.
எதிர் நீச்சலில் எதிர் நீச்சல் போட்டவர் ஆயிற்றே.
அந்த விறு விறுப்பு
காட்சிகளின் தூள்கிளப்பல்களில் தெரிகிறது
கொடி பறக்கட்டும்
கோடிகளும் குவிக்கட்டும்.
அதுக்கு நம்ம மனப்பூர்வமான
வாழ்த்துக்கள்.!
========================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக