All day on all my days,
the lives I’m not to process wash in;
anxieties lullaby on
and quite like to be gotten among;
but now—and now—one old,
abundant flower just screws up the room.
காலத்தின் கோலம்
===================================
(மொழி பெயர்ப்பு....ருத்ரா இ பரமிசிவன்)
நாட்கள் எத்தனை எதனையோ
என் மீது ஊர்ந்து சென்று விட்டன.
என் வாழ்க்கைத் தடங்களை
என் மீது அப்பி விட்டுப் போயிருக்கின்றன.
இது காலத்தின் நுணுக்கமான
நகாசு நிறைந்த கைவிரல்களின்
அவற்றின் விரல் நக நுனிகளின்
கீறல் வேலை..
அல்லது செல்லமாக கன்னத்தை
கிள்ளிவிடும் வேலை...
இதை கழுவிக்கொள்ளும்
வாழ்க்கைக்குள் இன்னொரு வாழ்க்கையாய்
என்னை அலம்பிக்கொள்ளுவதில்
என்ன இருக்கிறது?
பரபரப்புகள் கூட பட்டுமெத்தையாய்
படுக்கவைத்து என்னைத் தாலாட்டிவிடும்
தருணங்களோடும்
நான் பொதிந்து தான் கிடக்கிறேன்.
அதன் அழகான இனிய சேட்டைகளை
பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
இப்பொழுது தான் பாருங்கள்
இந்த அறைக்குள்
ராட்சசத்தனமாய் ஆனாலும்
வெகு நேர்த்தியாய்
ஒரு பூவை சுற்றிச் சுழற்றி
அழகு காட்டிக்கொண்டிருக்கிறது.
ஆமாம் ஐயா ஆமாம்!
மேஜையில் காபியை சிந்தவைத்து
இப்படி ரங்கோலி போட்டது
காலத்தின்
அந்த நளின விரல்களே தான்.!
Copyright © 2016 Graham Foust. Used with permission of the author.
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக