சனி, 15 அக்டோபர், 2016

குறும்பாக்களைப்பற்றி குறும்பாக்கள்பதிவரின் பெயர் : ruthraavinkavithaikal.blogspot.com
தமிழ்மணத்தில் இணைக்கப்பட்ட நாள் : 2014-06-27
3 Month Traffic Rank : 115
Tamil Blogs Traffic Ranking
Add this Traffic Widget to your blog 
at 02.55.PM on 15th Oct 2016

குறும்பாக்களைப்பற்றி குறும்பாக்கள்
=======================================================

ருத்ரா  இ  பரமசிவன்.

ஆயிரம் பக்க
எழுத்துக்களின்
"போன்சாய்" மரம்

காதல் தீயை
பற்ற வைக்கும்
சிக்கி-முக்கிக்கல்.

சங்கத்தமிழ்
அடைந்து கிடக்கும்
முத்துச்சிப்பிகள்

ஒரு சோறில்
ஒன்பதாயிரம்
பசி.

எதிர்வீட்டு ஜன்னலில்
உட்கார்ந்து இருப்பவர்கள்
காளிதாசன் கம்பன்கள்.

மொழியே இல்லாத
ஹைக்கூ
குயிலின் குக்கூ.

பேனாவின் ஒற்றைப்புள்ளியில்
காதலின்
ஏழுகடல்கள்.

இரு எழுத்து போதும்
காதலின் பிரபஞ்சம் தெரிய..
"கண்"

கழி நெடிலடி எண்சீர் விருத்தமும்
கழுத்து சுளுக்கிக்கொண்டது ..அவள்
"களுக்" சிரிப்பில்.

கவிதைக்கடல் இங்கே
கர்ப்பம் தரித்த சொல்
"பாரதி"

======================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக