புதன், 5 அக்டோபர், 2016

துலா 'பாரம்'

துலா 'பாரம்': 'கருத்துச் சித்திரம்' - தி இந்து
( துலாபாரம்  என்ற சொல்லை  "க்ளிக்"செய்யவும்.)

காவேரியும் தமிழ்க்காக்காய்களும்
=====================================ருத்ரா இ.பரமசிவன்.

தந்திரக்காரர்கள்
அனுமார்வாலில் தீயிட்டு
கொளுத்திப்பார்த்தார்கள்.
இப்போது
காவேரி அப்பத்தை  பங்கிட
தராசுக்கோலோடு வந்திருக்கிறார்கள்.
உச்சநீதி மன்றத்தை
கொஞ்சம் கொஞ்சமாக
ருசி பார்த்து ருசி பார்த்து
இவர்கள் ஏப்பம் விட்ட பிறகு
இருக்கும்
மிச்ச நீதிமன்றத்தில்
நாம் வழக்கு தொடுக்கும் போது
காவிரி நமக்கு கூவம் ஆகிப்போயிருக்கும்.
தமிழர்களே விழித்துக்கொள்ளுங்கள்.
காக்கா கூட தாகம் தீர்க்க
கற்களை மாணிக்கங்களாக
பொறுக்கி பொறுக்கி அந்த
கூஜாவில் போடும்போது
நீங்கள் மட்டும்
ஏன் வெறும் "கூஜாவாகி"போனீர்கள் ?
"ஓட்டுக்கள்"போடும்போது.!

==============================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக