புதன், 19 அக்டோபர், 2016

"காஷ்மோரா கார்த்திக்"


"காஷ்மோரா கார்த்திக்"
=================================================ருத்ரா
பருத்திவீரனின் அந்த துடிப்பான
கண்களிலிருந்து
உயிர்ப்புடன் கொட்டத்துவங்கிய‌
அந்த "நயாகரா" நடிப்பின்
அருவி
இது வரை நீர்த்துப்போகவில்லை.
ஏனெனில்
இது நீரின் வீழ்ச்சி அல்ல.
நெருப்புக்கங்குகளின் கண்களின்
மழை!
கிராமத்து லுங்கி சுருட்டிய ஸ்டைல் முதற்கொண்டு
அந்த மீசைத்துடிப்பின்
மயிர்ப்புருசுகளில்
தெறிக்கும் காதலின் வெறி ஓவியம் கூட‌
ஆயிரம் அழகு.
நவீனத்துவமாய்
சகுனியில் வெளிப்படுத்தும்
நமுட்டுப்பார்வை
காதலின் ஓர வீச்சிலும்
அவர் பாணி தனி பாணி.
பழைய "தென்னாட்டுக்காதல் மன்னன்"
பட்டத்துக்கு இவரைத்தவிர
வேறு யாரும் பொருந்த மாட்டார்கள்.
சரி!
தீபாவளிக்"காஷ்மோராவில்"
அதே பருத்தி வீரனின்
தீப்பொறிக்கண்கள்!
காதலின் "நெருப்புடா"
என்று "கபாலிக்கும்"கண்கள்!
டன் கணக்கில் இரும்பு ஆயுதங்கள்
கோணா மாணா வென்று பயங்கரப்படுத்தும்
கோடரி போன்ற‌
நண்டு நட்டுவாக்கிளி வடிவ வாட்களில்
அவர் வலம் வருவதும்
ஆயிரம் ஆயிரம் வாலாக்களை
தியேட்டரில் வெடிக்க வைக்கும்.
ஏற்கனவே ஆயிரத்தில் ஒருவனில்
லட்சத்தில் ஒருவன் என்று
நிரூபித்து விட்டார்.
இந்த கிராஃபிக் சமாச்சாரங்கள்
அம்புலிமாமா கதைகளை ஞாபகப்படுத்திய போதும்
நாம் எல்லாம்
ஹாலிவுட் காரனையும்
அவல் போல மென்று கொண்டு தான்
பார்க்கப்போகிறோம்.
"பாகுபலி பிரம்மாண்டம்"
மறுபடியும் "வெர்ச்சுவல் ரியாலிட்டியை"
நம் மூக்கு முன்னே உரசிக்கொண்டு
மசாலா நெடியை அடித்த போதும்
கார்த்தியின் புதுமை மின்னலடிப்புகள்
நம்மை ஏமாற்றாது
என்ற நம்பிக்கை
தீபாவளி ராக்கெட்டாய்
நமக்குள் விர்ரென்று ஏறுகிறது.
அப்புறம்
நயனதாரா எனும் நாட்டிய தாரா
ஒரு அற்புதம் தான்.
குடை விரிப்பது போல்
உடை விரிக்கும்
அவர் கம்பீர நர்த்தனம்
நிச்சயம் நம்மை
நார் உரித்து விடும்!
இன்னும் ஒரு வானத்து நம்பிக்கையாய்
விவேக் அவர்கள் முகம் காட்டுவதும்
ஒரு தந்தையாய் அகம் காட்டுவதும்
நமக்கு ஒரு அருமை வரவு.
தண்ணியில கண்டம்னு
அவர் செய்த நகைச்சுவை ரவுசுகளை
தங்கத்தால் பாலிஷ் போட்ட காட்சிகளாய்த்தான்
ரசித்து ரசித்து ஏங்கிக்கொண்டிருக்கிறோம்.
கண்ணீர் என்றால் கலைஞனுக்கும்
உப்புத்தான் கரித்திருக்கும்.
ஆனால் இவருக்கு
அதில் தன் உயிரே கரித்தது.
அவர் நடிப்பின் ஆழத்துள்
எல்லா ஆழங்களும் ஆழ்ந்துபோய்விடும்.
அவர் நம் முன் தோன்றுவது
அவரது அரிய ஆளுமையையே காட்டுகிறது.
இன்முகம் காட்டி இன்புறுத்துவோம்.
தீய ஆவிகள் தான் தலைப்பின் அர்த்தம்
ஆனால் இதை அழகிய "ஃபென்டாசி"க்
காவியம் ஆக்கி
அருஞ்சுவை காப்பி ஆக்கி
ஆவி பறக்க கோப்பையை நீட்டுகிறார்கள்.
பருகிக்களிக்கலாம்.
=======================================================
4 கருத்துகள்:

 1. நன்றி திரு.நாகேந்திர பாரதி அவர்களே.

  அன்புடன் ருத்ரா இ.பரமசிவன்

  பதிலளிநீக்கு
 2. ji
  for sometime let us not discuss a tamil film
  the film remo had wounded many a heart in tamilnadu
  here is a useless guy siva tortures a lady doctor to marry him though the marriage got fixed to another person...and above all siva cries in public..idiot he is

  பதிலளிநீக்கு
 3. Yes indeed! the scripts are nowadays are based on social perversions but in the garb of mere entertaining sans logics.That is trendy Film industry is also "globalized" just to see profits in view of economic problems.Art of art sake is nothing but a truism.
  Thank you for your comments that enabled us to air some views.

  பதிலளிநீக்கு