புதன், 26 அக்டோபர், 2016

சில "பல்ஸ்களே" பாக்கி. சில "பல்ஸ்களே" பாக்கி.
=======================================ருத்ரா
மயிலிறகில்
மனம் தொட்டு
ஒரு கவிதை
உனக்கு இதோ.
கடல் நுரையில்
சொல்லெடுத்து
ஒரு கவிதை இதோ.

பட்டாம்பூச்சி சிறகில்
பட்டா போட்ட கனவுகளோடு
இதோ கவிதை.

தமிழுக்கும் அமுது என்று பேர்
என்று இனித்த உதடுகள்
வருடிய சொற்களில்
கவிதை இனிப்பாய் இதோ..

"போதும் டா மொக்கை.
ஐ லவ் யூ சொல்லுடா
சீக்கிரம்.
டாப் அப் போட
சில பல்ஸ்களே பாக்கி..."
================================================
(கை பேசிக்கவிதைகள்)கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக