வெள்ளி, 17 மே, 2024

குவாண்டம் எனும் கானல் நீர்க் குதிரை


குவாண்டம் எனும் கானல் நீர்க் குதிரை

-----------------------------------------------------------------------------------

இ பரமசிவன்






அளபடையம் என்பதே இங்கு குவாண்டம் ஆகும்.கிரார்டி _ ரிமினி _வெபர் ஆகிய மூவர் கோட்பாடு ஜி ஆர் டபிள்யூ கோட்பாடு என்று இங்கே குறிப்பிடப்படுகிறது.என்ன அந்த மூவர் கோட்பாடு? 1986 ல் இது இவர்களால் நிறுவப்பட்டது.விஞ்ஞானிகளின் பிடிக்குள் வராமல் அடம் செய்யும் குவாண்டம் எனும் அளபடையம் பற்றி நாம் நுண்மையான கணித சமன்பாடுகள் மூலம் அடையாளப்படுத்தும் ஒரு நிலைப்பாட்டில் நின்று கொண்டிருக்கிறோம். இந்த "பொன் மானை" வேட்டையாடுவது என்பது  குவாண்டத்தை அளவிடுவதே.  அதை அளவிடும்போதே அது காணாமல் போய்விடும் தன்மை தான் இங்கு சிக்கல் தருகிறது.மெஷர்மென்டே ஒரு ஸ்பொன்டேனியஸ் கொலேப்ஸ் ஆகி விடும் இதை எப்படி அணுகுவது என்பதே குவாண்டம் விஞ்ஞானிகளின் நோக்கம் ஆகும். இந்த குவாண்ட அல்லது அளபடைய இயங்கியம் (டைனாமிக்ஸ்) திடீரென்று அப்படி வீழ்ச்சி(கொலேப்ஸ்) அடைவது அல்லது காணாமல் போய்விடுவது என்பது நடைபெறுவது காலம் மற்றும் வெளி ஆகிய இரு பரிமாணங்களிலும் தான்.காலப்பகுதியில்(டைம்) ஒரு சராசரி அளவீட்டிலும் (ஆவ்ரேஜ் ரேட்) "வெளிப்"(ஸ்பேஸ்) பகுதியில் போர்ன் விதிப்படியும் இது நிகழ்கிறது.அது என்ன "போர்ன்"விதி?

கால அளவையில் ஒரு திட்டவட்டமான அளவு (டிடர்மினிஸ்டிக்) கணிக்கலாம்.ஆனால் வெளி எனும் புலம் குறிக்கும்  இடப்பகுதியில் நிகழ்வது  நிகழ்தகைமைக்கூறுகளின் செறிவுநிலைக்கு  (ப்ராபலிட்டி டென்சிடி)ஏற்ற விகிதாச்சாரம் ஆகும்.(ப்ரோபோர்ஷனாலிடி) இதைப்பற்றிய ஒரு கணித சமன்பாட்டை "போர்ன் விதி" குறிப்பிடுகிறது. 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக