திங்கள், 20 மே, 2024

மூட்டம்

 மூட்டம்

_______________________________________________

கல்லாடன்.


கடவுள்...

இந்த சொல் நம் அரிசி பருப்பு

ஆட்டுக்குட்டி 

அடுப்பு மூட்டி ஆக்கி கறிச்சோறு

இல்லை

கல்லும் மண்ணுமாய் 

வெறுஞ்சோறு

அல்லது எதுவுமே இல்லாமல்

உள்ளே பறண்டிக்கொண்டிருருக்கும்

வெறும் வயிறு

என்று எல்லாம் பிசைந்த தாய்

தினம் தினம் நம் உதடுகளில்

ஒலிக்கிறது.

இதை ச்சொல்லி 

எங்கேனும் ஒரு கிராமக்கோயிலில்

தேரோட்டம் 

கும்பாபிஷேகம் என்றால்

அந்த ஈசல்கள் மொய்த்துக்கிடந்து

ஊர்ந்து உர்ந்து செல்லும்

உயிர்ப்பான காட்சிகளைக்க‌ண்டு

கொஞ்சமும் கூச்ச நாச்சம் இன்றி

அந்தக்கடவுள்

சினிமா பார்த்துக்கொண்டிருக்கிறது.

கூடவே உட்கார்ந்திருக்கும்

தன் தர்ம பத்தினிக்கு

உற்சாகமூட்ட‌

குத்தாட்டமும்

வெத்தாட்டமும் கூட‌

தூள் பறக்கிறது.

கடவுள் என்ற மூட்டம்

இங்கே எல்லாவற்றையும் 

மூளி ஆக்கிக்கொண்டிருக்கிறது.

வானமெல்லாம்

அங்கும் இங்கும் சிறகு துடிக்து

பறக்கும் பறவைகளுக்கு மட்டுமே

இது எல்லாம் ஒரே

சிரிப்பாணியாய் இருக்கிறது.


__________________________________________________________




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக