வெள்ளி, 24 மே, 2024

திசை

 திசை

__________________________________________________

கல்லாடன்.



இந்த நாடு

எந்த திசையியில் நிற்கிறது?

இது ஏன் எப்போதும்

சூரியனுக்கு புற முதுகு 

காட்டிக்கொண்டிருக்கிறது?

விடியல் என்றால்

ஊறலும் அரிப்புமாய்

இருக்கிறதா?

இந்தியா என்றால் சும்மாவா?

எங்களுக்குத்தான் கடவுள் கொம்புகள்

மிக மிக நீளமாய் முளைத்திருக்கின்றன.

அறிவு வெளிச்சங்கள் 

தேவையில்லை.

இருட்டைத்தின்று 

இருட்டில் கொழுத்து

இரூட்டின் அறிவின்மையில்

புழுத்த புழுக்களாய்

நெளிந்து கொண்டிருப்போம்.

வியர்வைக்கடலில் மூழ்கிக்கிடக்கும்

முக்கால் வாசி மக்களின்

முதுகுத்திட்டுகளில்

கோவில்கள் கட்டி வைத்திருப்போம்.

கடவுள் என்று எதுவும் கிடையாது

என்று

நாங்கள் தெரிந்து வைத்த போதும்

எங்கள் விரல் சொடுக்குகளில்

இந்த மொண்ணை மக்களை

மேலும் மேலும் மண்ணாங்கட்டிகளாய்

மிதித்து சவட்டி 

ஆண்டு கொண்டிருப்போம்

பகவான் என்று ஒரு பாவ்லா காட்டி.

அதோ பாருங்கள்

கணினிப்பொறிகள்.

கோடி கோடியாய் 

இந்த மக்கள் 

அதை எட்டிப்பார்த்துக்கொண்டு

காத்திருக்கிறார்கள்.

எங்களுக்குத்தான் தெரியும்

அதில் விடியல்களின்

கல்லறைகள் 

ப்ரோக்ராம் செய்யப்பட்டிருக்கின்றன‌

என்று.

மண் வயிறு கிழிந்து

எரிமலைகளின் 

இமைகளும் திறக்கும்

என்பது

அந்த பொறிகளுக்கும்

புலப்படாத ஒரு

பூலியன் அல்ஜிப்ராவில்

இருக்கிறது என்பது

அவர்களுக்குத் தெரியுமா?


_________________________________________________________



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக