சனி, 18 மே, 2024

சில்லறைகள்

 சில்லறைகள்

_____________________________________________

கல்லாடன்.


பதினாலுகளும் 

இருபதுகளும்...

வயதுகளில் 

இவை

மின்னல் முச்சந்திகள்.


அறிவு குமிழியிடும்போது

கூடவே

ராட்சச‌த்தனமாய் பூக்களும்

பட்டாம்பூச்சிகளும்

ஒரு உள்ளுலகத்தைப்

பின்னித்தரும்.

அது மின்னி மறைவதற்குள்

சூரியன்களும் சந்திரன்களும்

மற்றும் வைரமாய்த் தோன்றும்

நட்சத்திரங்களும்

வெறும் 

பிய்ந்த கூடையின் 

குப்பைக்கூளங்கள் தான்.


ரத்த நிலா

அதற்கப்புறம் தான்

சிவப்புச்சொட்டுகளில் 

அவனுக்கு 

ருசி காட்டுகிறது.

புளி மிளகாய் அரிசி 

இத்யாதி வியாதிக்கிடங்குகளிலும்

குழந்தை குட்டிகளோடு

மனிதன் 

சிந்தனை நாக்கை

சொட்ட விட்டு

மாயக்குதிரையின் பிடரியை

இலேசாய் தொடுகிறான்.

அது

இந்த சிதை அடுக்குகள் வரை

சிலிர்த்துக்கொண்டு

விறைத்துக்கொண்டு

ஓடுகிறது....

சிற்றின்பத்திலிருந்து வடிகட்டிய‌

பேரின்பத்தையோ...

கடவுள்ககளை

சைத்தான்களின் சல்லடையில்

வடிகட்டிய‌

முட்டாள் தனங்களையோ...

சில்லரைகளாக சிதறவிட்டு

காட்டிக்கொண்டே இருக்கிறது

வாழ்க்கையை!

எதுகை மோனையாக 

கல்லறைகள் என்று அதை

கலவரப்படுத்திக்கொண்டிருப்பது

அதை விட 

கடைந்தெடுத்த‌

முட்டாள் தனங்கள் ஆகும்.

தொட்டுக் காட்டவே

வாழ்க்கை!

இது வாய்ப்பா? பிழைப்பா?




‍‍‍‍‍‍‍________________________________________________






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக