கிறுக்கிப்போட்ட காகிதக்கசக்கல்கள்
________________________________________ருத்ரா
10.09.2022
________________________________
கேட்டா கேளுங்கலே
இல்லாட்டா போய்ச்சாவுங்கலெ
அந்த பெரிய பழுப்பேறி
கந்தலாய் இருந்த
வெள்ளைப்பிளாஸ்டிக் பையை
தோளில் போட்டுக்கொண்டு
அந்த குப்பை பொறுக்குநர்
கம்பில் கிடைத்த காகித கூளங்களை
எடுத்து எடுத்து
பையில் போட்டுக்கொண்டே சென்றார்.
மெலிந்த குச்சி உடம்பு.
வற்றிய முகம்.
வதங்கிய உடல்.
பிசிறுத்தலைமுடி சிலுப்பல்கள்.
ஏதோ ஜோர்டான் ஆற்றங்கரையில் நிற்கும்
யோவான் போல
சொல்லிக்கொண்டே
குப்பை செகரித்துக்கொண்டே இருந்தார்.
ஆமாலெ..கேட்டா கேளுங்க
கேக்காட்டா போங்கலே...
புலி வருது புலி வருதுன்னு
நாங்களும் சொல்லிப்பாத்துட்டோம்.
புலியா..
பாத்துக்கலாம்..அதோடயே
குத்தாட்டம் போட்டா போச்சுன்னு
எளக்காரம் பேசுறதெல்லாம் இருக்கட்டும்.
மீட்பர் வராரு மீட்பர் வராருன்னு தான்
சொன்னேன்.
அவரையும் கட்டையிலே குத்தி
ஆணியடிச்சு
சாவடிச்சீங்க.
அவர் பொறந்த நாள
கலர் கலரா பல்பெல்லாம் மாட்டி
கொண்டாடுறீங்களே..
ஒரு அப்பத்தை பிய்த்து
எல்லோருக்கும் கொடுத்தாரேமே..
அந்த சித்தாந்தம்
இன்னுமா உறைக்கவில்லை?
அந்தோ! பரிதாபம்!
கம்யூனிசம் கூட
மிராகிள்ல வந்தாதான் உண்டு.
~
இந்த ஒலகத்து மண்டையிலேயே
முட்கிரீடம் மாட்டி
பிளந்து துண்டு துண்டாக்கி
பிசினஸ் பண்ற
கார்ப்பரேட்டுகளும்
அவங்களோ பிட் காயின்ஸ்ம் தான்
ஒங்க இடுப்புல கயித்தகட்டி
ஆட்டி வச்சுகிட்டே இருக்கப்போவுது...
இல்லாட்டா கூட
மதங்களுக்கும் சாதிகளுக்கும் தான்
இங்க பஞ்சமில்லையே.
ராமா கிருஷ்ணான்னு
ராட்டினம் சுத்ர வேலய வச்சு
மக்கள எல்லாம்
கார்ப்பரேஷன் குப்பையாக்கி
காலியாக்க்கிடுவானுக..
எல்லா பிரபஞ்சமும் கரிப்பிடிச்சு
எரிஞ்சு
இருட்டுப்பிண்டமும்
இருட்டு விசையும் தான் மிச்சமாம்.
அந்த கரிப்பிடிச்சவன் வேசத்துலெ
கடவுளே கீழே எறங்கி
ஒரு கோயில்ல போய்
கடவுள பாக்கப்போனாராம்.
யார்ரா நீ
நீ தீண்டப்படாதவன்னு
நூல் போட்ட
ஒரு வெள்ளைக்காரன்
கத்தினான்.
இவன் தீட்டுப்பட்டவன்
இவன எரிங்கடான்னு சொன்னான்.
இப்டி இருக்கும்போது
என்னத்தப்பண்ணி கிழிக்கப்போறீங்க..
மொதல்ல
மனுஷ்ஷன்னா யாருன்னு
பாருங்கலே.
எலெ...அவன் மூளைக்குள்ள மனசுக்குள்ள
பெரிய தீ எரியுதுலே
அதுக்குள்ளேருந்து கோடி கோடி...கோடி
பிரபஞ்சங்கள கொணாந்துரலாம்லெ
எலெ..
இதுல தேர்தல்னு ஒரு தந்திரம்
பண்றாங்களே
இங்கே..
அது சூட்சுமம் தெரியுமா?
கணிப்பொறியோ காகிதமோ
எப்டி நீங்க
ஓட்டுப்போட்டாலும்
அவ்ய்ங்கதாப்பு வந்து குந்தப்போறாங்க.
மூட்டை மூட்டையா கோடிகள் வச்சு
யாவாரம் நடந்துட்டுருக்கு.
தோத்தாலும் பரவாயில்ல
ஜெயிச்சவங்களே அப்படியே
அள்ளிக்கொணாந்து வச்சுக்கல்லாம்.
இதெ என்னைக்கு புரியப்போறீங்க..
போங்கலெ
வேலய பாத்துக்கிட்டு.
என்ன வேலயா..?
அதாம்லெ ..போய்ச்சாவுங்கலெ
ஒங்கள சாவடிக்கிற பயத்துலேயே
வச்சு
சாவடிச்சுட்டே இருப்பானுக...
..........................
குப்பை சேர்ந்து மூட்டை பெரிதாகியது.
அந்த பொறுக்குநர்...
கிரீச்...
எதிரே வரும் ராட்சச லாரியின் கீழே..
நசுங்கிய
கரப்பான் பூச்சியாய்..
முள்ளு நிறைந்த கால்களும்
நீள அன்டெனா மீசையும்
அசைந்து கொண்டே இருந்தன.
கடைசித்துடிப்புகள் அவை.
_____________________________________________________
ருத்ரா
கூட்டிட்டு போங்கப்பா..
_____________________________________
ருத்ரா
..............................
................
.......................
.....................
.................................
இது வரை நான் எழுதியிருப்பதை
படித்தீர்களா?
முடியாது.
அதற்கு உங்கள் மூளை
பிதுங்கி பிதுங்கிப்போய்
வேறு வேறு அண்டங்கள்
தாண்டவேண்டும்.
அங்கே என் எழுத்துக்கள்
தூவிக்கிடக்கின்றன.
ஃப்ளூடு ஸ்பேஸ்.
ஸ்டெடி ஸ்டேட் காஸ்மாலஜி.
ப்ரேன் பல்க் காஸ்மாலஜி
மெட்ரிக் இன்வேரியன்ஸ் ஸ்பேஸ்.
குவாண்டம் ஃபோம்.
குவாண்டம் என்டாங்கில்மென்டில்
இந்த காஸ்மாவையும்
அந்த காஸ்மாவையும்
முடிச்சுப்போட்டு
வோர்ம் ஹோல்
வார்பிங் ஃபேக்டர்..
அய்யா..போதும் போதும்.
ஒன்று நீங்கள் அந்த வார்டுல
அட்மிட் ஆகிக்கொள்ளுங்கள்.
இல்லை
நாங்கள் அங்கே போய்
படுத்துக்கொள்கிறோம்.
எங்கே வேண்டுமானாலும் போங்கள்.
உங்கள் கடவுள்
ரத்த சதையில் பிசைந்து தந்ததை
நாங்கள்
குயுபிட்களில்
வெர்ச்சுவல் யுனிவெர்ஸ் ஆக
படைப்போம்...
டேட்டாக்களைக்கொண்டு
நந்தவனங்களையும்
வைகுண்டங்களையும்
எங்கள் "மெஷின் லேர்னிங்கில்"
படைப்போம்....
மெடாகீ யில் அந்த மெடாவெர்ஸில் தான்
உங்கள்
பக்கங்களைப்புரட்ட வேண்டும்.
நடுவுல கொஞ்சம் பக்கத்தைக்காணோம்
என்றெல்லாம்
அடி முடி தேடி சிவத்தை நோக்கி
ஓட முடியாது.
அந்த சிவனையே காணோம்
என்று காளை வாகனங்கள்
வெருண்டு ஓடும்
கயிலாயங்கள்..அதோ அதோ...
அய்யோ அய்யோ அய்யோ
"ஸாரை பத்திரமாக
கூட்டிட்டு போங்கப்பா..."
____________________________________________________
இந்த கம்பியூட்டர் படிப்பாளிகள்
சும்மா விடா மாட்டார்கள்
போலிருக்கிறது.
ஏதாவது ஒரு நிழலை
காட்டுங்கள்
அதில் சொட்டியிருக்கின்ற
ரத்தவாடையை ஸ்கேன் செய்து
குவாண்டம் கம்பியூட்டிங் மூலம்
அந்த உயிரை க்ளோன் செய்து காட்டிடுவோம்
என்கிறார்கள்.
கல்யாண்ஜி அவர்களே
உங்களின் அந்த "கற்பனைப்பப்பியை"
பொன் சங்கிலியோடு
பிடித்துக்கொண்டு போய்விட ஆசை.
____________________________________
ருத்ரா
E Paramasivan Paramasivan
2 நி ·
உங்கள் நண்பர்கள் உடன் பகிர்ந்தது
Vannadasan Sivasankaran S
30 நி ·
இன்னொரு நாள் என்னை உற்றுப் பார்க்கிறது.
சன்னல் கதவை வெயில் தட்டுகிறது.
ஒன்றும் சிரமமில்லை.
மாத்திரைகள் வடிவமாகிவிட்ட படுக்கையிலிருந்து
வேப்ப இலைகளின் ஆனந்தக் கூத்தை
விருப்பக் காற்றின் மெல்லிய இசையை
துளை நீங்கும் மண் புழுவை
தொடர்மலையிடை வீழும் அருவியை
ஒன்றினுள் ஒன்று செருகிய செம்பருத்தி இதழ்களை
பேரன்பின் நரைமயிரால் முறுக்கிய தாத்தா மீசையை
அம்மா முன் எரிந்த விறகு அடுப்புத் தீயை
என் மகள் உபயோகித்த ஆங்கில அகராதியை
என்னுடைய அந்த ‘மூன்றாம் முள். கவிதையை
உன்னுடைய பற்றிக்கொள்ளும் ரசவாதக் கையை
எதை வேண்டுமானாலும் இப்போது
கற்பனைசெய்து கொள்வேன் ,
வாதையின் கூடாரத்தில் இருந்து மீண்டும் சொல்கிறேன்
எந்தச் சிரமமும் இல்லை.
%
மீள்.
1 கருத்து
E Paramasivan Paramasivan
இந்த கம்பியூட்டர் படிப்பாளிகள்
சும்மா விடா மாட்டார்கள்
போலிருக்கிறது.
ஏதாவது ஒரு நிழலை
காட்டுங்கள்
அதில் சொட்டியிருக்கின்ற
ரத்தவாடையை ஸ்கேன் செய்து
குவாண்டம் கம்பியூட்டிங் மூலம்
அந்த உயிரை க்ளோன் செய்து காட்டிடுவோம்
என்கிறார்கள்.
கல்யாண்ஜி அவர்களே
உங்களின் அந்த "கற்பனைப்பப்பியை"
பொன் சங்கிலியோடு
பிடித்துக்கொண்டு போய்விட ஆசை.
____________________________________
ருத்ரா
அது என்ன
கவிஞன் என்றால்
மட்டும்
வெறும் மண் சட்டியில்
சமைக்கமுடிவதில்லை.
அவன் எழுத்துக்கள்
வெந்து விட்டனவா இல்லையா
என்று பார்ப்பதற்கு கூட
எங்கோ கட்டித்தொங்க விடப்பட்ட
தூக்கணாங்குருவிகளின்
வைரப்பிசிறுகளால் நெய்த
கூடுகள் நோக்கி
பறக்க வேண்டியிருக்கிறது.
வானம் முழுதும் அந்த சோற்று மணம்
சூரியனின்
நாக்கிலும் நீர் ஊற வைக்கிறது.
________________________________________________
ருத்ரா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக