வெள்ளி, 31 மே, 2024

நாளை என்கிற இன்று!

 நாளை என்கிற இன்று!

_______________________________________________

கல்லாடன்.



ஒவ்வொரு தடவையும்

இந்த கணிப்பொறியை

சுத்தம் செய்யவேண்டும் என்று

தேர்தல் நடத்துகிறார்கள்.

சுத்தமாக பளிச்சென்று

ஜனநாயம் துடைத்து வைக்கப்பட்டு

மஞ்சள் குங்குமம் வைத்துக்கொண்டு

சர்வாதிகாரம்

ஆயுத பூசை நடத்தி வைக்கிறது.

ஜனநாயக சிந்தனை பரவல் ஆகி

பெரும்பான்மையையும் மீறிய‌

ஒரு மாபெரும் பெரும்பான்மை

பொது நாயகம் ஆகும்போது

அங்கே ஓட்டுத்தினவுகள்  காணாமல் போகும்.

ஆனால் ஜனநாயக சிந்தனை இங்கு

சிறுபான்மையிலும் சிறுபான்மையாக‌

இருப்பதால்

இந்த கணிப்பொறிகளுக்குள்

இருக்கும்

"தந்திர பூமிகளே"

ஆட்சி செய்கின்றன.

"என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே

இருட்டினில் நீதி..."

சினிமாப்பாட்டுகளின் 

சிலந்திக்கூடுகளில்

நம் சிந்தனைகளும் 

அந்த கிழக்கு முனையில்

என்ன தான் துளிர்க்கும்..?

என்று கண்டுவிட‌

முனைகிறது.

தியானம் என்பது நம்

கபாலங்களைப் பூட்டி

சாவிக்கொத்துகளை சுழற்றுவது அல்ல.

அந்த அஞ்சறைப்பெட்டிக்குள்

அச்சத்தின் அனக்கொண்டா குட்டிகள்

சுருண்டுகிடப்பதை

அவிழ்த்தெறிய வேண்டும்.

நாளை நமதே.

அந்த "நாளை" நம் கைப்பிடிக்குள்

சிறை பிடிக்கப்படும்

ஒளி பொருந்திய‌

"இன்று" ஆகவே

என்றும் இருக்கும்.

மக்கள் வாழ்க.

மக்கள் ஆட்சி வாழ்க.


______________________________________________________

புதன், 29 மே, 2024

மான் தோலை விட்டு....

 தியானம்

__________________________________________

கல்லாடன்.


கண்ணை மூடிக்கொண்டாய்.

மூக்குத்துளைகளை

விரற்பிடிக்குள்

பிடித்து பிடித்து

வீணை மீட்டினாய்.

ஏதோ குண்டலினி அண்டலினி என்று

ஸ்லோகங்களை அடுக்கிக்கொண்டு

சிதைகளை அடுக்கிக்கொள்ளாமல்

ஒரு உள் தகனத்துக்கு

தயார் ஆகினாய்.

எங்கோ

பில்லியன் ஒளியாண்டுகள் தூரம்

தாண்டி நிற்கும்

அந்த பரஞ்சோதியைக்கூட‌

கொக்கிப்போட்டு

இழுத்துக்கொள்ளலாம் என்றெல்லாம்

சொற்பொழிவுகளை தயார் செய்து

எழுத்திக்கொடுத்த‌

அந்த பி ஹெச் டி காரர்களின்

காகிதங்களும் கையில் ரெடி தான்.

இதுவும் ஆத்மீகத்தின் 

ஒரு குவாண்டம் என்டாங்கில்மென்ட் தான்

என்று பரபரப்போடு கூறுவாய்.

வாயில் ஈ நுழைவது தெரியாமல்

கேட்பவர்கள் உறைந்து போவார்கள்.

சொற்களின் குடலையெல்லாம்

உருவியெடுத்து

பொய்மை மசாலாக்கள் சேர்த்து

அவதார ஆவேசங்களோடு

சுடச் சுடச்   சொற்பெருக்கு ஆற்றுவாய்.

நீ பிதற்றும்

சொல்லாடல்களை

ஒத்திகை பார்க்கும்

உள் அரங்கக்கூடாரத்தில் மூடிக்கொண்டு

முனகிக்கொண்டிருக்கிறாய்

சத்தங்கள் எல்லாம் வெந்து அவிந்து போன‌

நிலையில்...

நீ என்ன சொல்ல வருகிறாய்?

நீ இன்னும் என்னை உன் ஓர்மைக்குள்

பிடித்துக்கொள்ளவே இல்லையே.

நான் இல்லை இல்லை என்று

எத்தனையோ முறைகள்

மவுனமாய் உனக்குச்சொல்லியும்

அந்த இல்லாத உண்மையை 

நீ இன்னும் 

தேடவே இல்லையே.

மீண்டும் மீண்டும்

பொய்மை வலை பின்னி

இந்த வெறுமையை பிடித்து விட்டேன்

என்று

பாஷ்யங்களின் எக்காளம் ஊதுவதற்கு

கன்னம் புடைத்து

கண்ணீர் பெருக்கிக்கொண்டிருந்தது போதும்.

முதலையிடம் கடன் வாங்கிய கண்ணீரை

முதலையிடமே கொடுத்து விட்டு

எழுந்து போ...

ஒரு கேளா ஒலி எனும் ஒரு அல்ட்ரா சானிக்ஸ்ல்

கடவுள் 

விரட்டியது உணர்ந்து

மான் தோலை விட்டு 

அவர் எழுந்துகொள்கிறார்.


________________________________________________________________




ஹிக்ஸ் ஃபீல்டு

 ஹிக்ஸ் ஃபீல்டு என்ற ஒரு புதிய பூதப்புலம் இந்த நிறையற்ற "போஸான்" புலத்துள் எப்படி நுழைந்தது.

அது நிறை  என்றால் அண்ட வெளிக்கணிதங்களே தவிடு பொடி தான்.அது நிறையில்லை என்றால் அங்கே ஏற்கனவே நிறையற்ற நிலையில் இருக்கும் போஸானின் நிலை என்ன?

இந்த புதிரை அவிழ்க்கத்தான் ஒரு மேல் உயர் அதிர்விழையக்கோட்பாட்டை (சூப்பர் ஸ்ட்ரிங்) கண்டு பிடித்தார்கள் விஞ்ஞானிகள்.இருப்பினும் ஹிக்ஸின் போஸான் கடவுள் பாதி சைத்தான் பாதி சேர்த்துச்செய்த‌ கலவையாய் இருக்குமோ?

புத்தகம் எனும் வெளிச்சம்

 "டாஸ் கேபிடல்"

__________________________________________‍______

செங்கீரன்.



இது வாசலா? வீடா?

நுழையும் போது

நம்மீது பன்னீர் தெளித்து

வரவேற்கிறது.

கொட்டாவி விடும் நம் 

அகலாமான வாய்முன் 

சடக்கென்று சொடக்கு போடுகிறது.

அப்புறம்

நுழைமுகம் என்று 

முன் தகவல்களை

பட்டுக்கம்பளமாய் விரிக்கிறது.

பிறகு 

உள்ளடக்கம் 

வரிசை படுத்தப்படுகிறது.

அதன் உள்விவரம் தெரிகிறது.

அதன் இதயம் நுரைஈரல்

கல்லீரல் குடல் எல்லாம்

மூளையாய் படர்ந்து இழைந்து

கிடக்கிறது.

நாளங்கள்

கள களக்கின்றன.

சூடான ஆறுகளாக.

நம் இருட்டையெல்லாம்

துடைத்து 

ஒளிபிழம்பை

ஒற்றித்தருகிறது.

மனிதா!

நீ முழுமையடையும் 

தொழிற்பட்டறை இது தான்.

உன் வளைந்து நெளிந்த‌

வக்கிரங்கள் கோணல்கள் 

எல்லாம் 

டிங்கரிங் செய்யப்படுகின்றன.

அவ்வப்போது 

இதன் சன்னல்கள் வழியாக‌

இந்த உலகை எட்டிப்பார்க்கிறாய்.

அப்போது தான்

புரிகிறது

நீ இத்தனை நாளாய்

அந்த கருவறையின் கவுச்சி நாறும்

நீர்ப்படலம் சுற்றிக்கிடந்தாய்

என்று.

உன் கூர் நகங்களும்

கோரைப்பற்களும்

ஒரு ரத்தப்பசியெடுத்து

அலைகின்றன என்று.

உன் போன்ற 

ஏன்

உன்னை ஈன்றவர்களையும்

மற்றும் 

மற்ற மனிதர்களையும் கூட‌

அடித்துத்தின்னும்

வெறி வடிவங்களாய்

இருந்திருக்கிறாய் என்று.

இங்கே நுழைந்து 

நீ இந்த உலகத்தின்

நாடி நரம்புகளில் இழைந்த பின் தான்

நீ

சுடர் விடுகிறாய்.

அது வரை கண்ணுக்குத்தெரியாத‌

அச்சமும் ஐயமும்

கடவுளாக‌

உன்னைப் பிய்த்து பிய்த்து

அங்கே இங்கே என்று எறிந்திருக்கிறது.

எல்லோர் முகமும்

உன் முகமும் சேர்த்து தான்..

அந்த மகிழ்ச்சி மலர்களை

விரிக்கும் போது

நீ 

உணர்கிறாய்

உன்னையே ஒரு 

புதுக்கடவுளாய்.

இந்த அண்டவெளியெல்லாம்

அளைந்து பார்க்கிறாய்.

அறிவு எனும்

ஒரு ஆச்சரியமும் வியப்பும்

பெருமையும் உண்மையுமாய்

நீ 

உணர்கிறாய்.

மனிதர்கள் சம உரிமையில்

விடு பட்டு 

உலகம் முழுவதுமே

அவன் வீடு

என்று மனிதன்  உணர்கிறான்.

இதுவே விஞ்ஞானிகளின் 

கிராண்ட் யுனிஃபிகேஷன்.

ஓ மனிதா!

இப்போது நுழைந்திருக்கிறாயே

இது தான் ஒரு நல்ல புத்தகம் ஆகிறது.

இருட்டு மூடிய நூலாம்படைகளில்

வெளிச்சம் தேடி நூற்று நூல் ஆக்கியிருக்கிறார்.

அந்த மா மேதை எனும் 

கார்ல் மார்க்ஸ் 

லண்டனின் அந்த மாபெரும் நூலகத்தை

கடைந்து திரட்டி

இந்த பாற்கடலைத் தந்திருக்கிறார்.

உன் அமுதமும் உன் நஞ்சும்

உன்னைச்சுற்றிய முரண்பாடுகளின் அலைகள்

என்று உனக்கு உணர்த்துகிறது.

உன் வியர்வைக்கடலே

எல்லாவற்றையும் ஆள வல்லது

என்று முரசு கொட்டுகிறார்.

கற்பனை விரிப்புகள் எனும்

கருத்து முதல் வாதம் 

வெறும் பஞ்சு மேகங்களே.

உன் ஓர்மையில் நிரடுகின்ற‌

இந்த பொருண்மை உலகமே

உன்னை நிமிர்த்திவைக்கும்

பொருள் முதல் வாதம்.

இந்த அலைகளை எதிர்த்த எதிர் நீச்சலே

உன் வாழ்க்கை.

இதன் வாசனை உன்னைத்தழுவிய பின்

பிரிவு வாதம் பிளவு வாதம்

என்னும் பேய்களெல்லாம்

தொலைந்தே போகின்றன.


_______________________________________________








செவ்வாய், 28 மே, 2024

அகழ்நானூறு 76

 அகழ்நானூறு 76




அகழ்நானூறு 76

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍___________________________________________

கல்லாடன். (இ பரமசிவன்)


கடவுள் ஆலத்து புள்ளிப் பொறி படுத்த‌

நீழல் நெடுமுன்றில் பல் புள் ஓப்பும்

பைந் தொடி இறை தோறும் 

நோதல் புண் பசலை நோக்காது

நோக்கும் காளை அதிர் தடத்தை

எழுதரு மதியம் கடற்கண்டாங்கு

ஆர்கலி அலைத்தாள் அலைத்தாள் மன்னே.

பொருள்வயின் நண்ணி அத்தம் ஏகி

ஓமைத்தாழ் சினை வெஞ்சுரம் இறந்து

முள்ளிய பரல 

திங்கள், 27 மே, 2024

நடுகல்

 


கல்லாடன்




புறநானூறுக்கு 

பிழை திருத்தமா

வல்லூறுகள்?

அறத்தமிழ் இங்கே

பஞ்சு மிட்டாய் 

சுற்றும்போது

மறத்தமிழின்

ரத்தம் சொட்டும் 

வாள்களில்

ஈக்கள் மொய்க்கின்றன.

மனித ஈசல்கள்

வீரத்தோடு பலியாகி 

நடுகல் பீலி சூட்டுக்கு

புல்லரித்துக்கொள்கின்றன.

கணினி வழியாய்

மனிதன் மூளைச்செதில்களில்

புதிய அண்டவெளியையே 

ஆக்கினாலும்

அதிலும் கார்ப்பரேட் வெறி

மனித உறுப்புகளை

பேக் செய்து சந்தை

 மண்டலங்களில்

க்ரிப்டோ கரன்சியின்

திராட்சைக் கொடிகளை

நாக்கு நீள நீள நீர் சுரந்து நட்டு

பண்ணையம் செய்கின்றன.

மொழியாவது இனமாவது..

மனிதம் 

கூளக்கடை பஜாரில்

கூறு கட்டி விற்கப்படுகின்றன.

கோவில் கட்டிய

பெருமைக்குள்ளும்

தமிழ் ஒரு முப்புரிநூலில்

தூக்கிலிடப்பட்டு

பலப்பல நூற்றாண்டுகளின்

பிணங்களாய்

மரண விழுதுகளாய்

ஆடிக்கொண்டிருக்கின்றன.

நுண்ணிய தமிழ்க்காதல்

ஒரு "அணிலாடு முன்றில்"

செப்பு விளையாட்டில்

இறும்பூது எய்திக்கிடந்ததை

ஓலை வரிகளே

ஒலித்துக்காட்டிக்

கொண்டிருக்கின்றன.

ஆரியப்படை கடந்தவன்

இன்னும்

ஆரிய வர்ணத்தூரிகையின்

அடிமைத்தளையில் தான்

வெண்கொற்றக்குடை

ஏந்துகின்றான்.

ஆண்ட சாதி எனும்

பிறாண்டல்கள்

தமிழ் முகத்தை 

ரத்தச்சேறு

ஆக்கிக்கொண்டிருக்கின்றன.

ஈரோடு தமிழன்பன் அவர்களே.

உங்கள் வல்லூறுகள்

வானத்தின் சல்லடை

அடையாளங்கள்.

அதன் கண்கள் தோறும்

ஒழுகும் சிவப்பு வெப்பத்தின்

வெள்ளை வெயில்

விதவைக்காகிதமாய்

காத்திருக்கின்றன.

ஒட்டுப்பொட்டாய் இருந்தாலும்

சரி.

முதல் எழுத்தின் சொட்டு விழுந்திடட்டும்.

கிழக்குகள் அதிர்ந்திடட்டும்.

புதிய புல் தலை காட்டும்.


________________________________________________________


கவிப்பேரரசு அவர்களே.

 கவிப்பேரரசு அவர்களே

________________________________

கல்லாடன்.


கவிப்பேரரசு அவர்களே!

மரபுச்செய்யுள் எனும்

மணி மண்டபத்தில்

கவிதைகள் 

சிறைவைக்கப்பட்டிருந்த‌

காலம் ஒன்று உண்டு.

எதுகை மோனை என்பது

வெறும் பூட்டு சாவிகள் இல்லை.

தமிழின் வைரச்சொற்களுக்கு

பட்டை தீட்டுவதும் 

அவையே தான்.

கரு தரித்து உரு தரித்து

வந்த தமிழ்ச்சொல்

தான் வழிந்த தடம் யாவும்

தேனாறுகளாய்

பாய்மம் பெறும்

பான்மையோடு பால் வார்த்த‌

சொல் நிலவுகள் உலவும்

பொன் முற்றங்களே

புதுக்கவிதைகள் ஆயின.

சுட்டெரிக்கும் அறச்சீற்றம் கூட‌

அந்த முற்றங்களில்

முகம் காட்டி

மானுடம் பூசிய‌

புதுத்தமிழ் வானங்கள்

அங்கே குமிழியிட்டன.

புதுக்கவிதைகள்

செய்யுட்களில் 

நுரைக்கோட்டை கட்டிக்கிடந்து

புலப்படாத நூற்றாண்டுகளில்

பனை ஓலைக்கீறல்களில் கூட‌

புதுக்கவிதை 

சிற்பம் செதுக்கியது.

குறுந்தொகையில் 

அப்படி ஒரு சொற்சிதறல்

"கல் பொரு சிறு நுரை"....

காதலின் இன்பம் 

பிரிவின் துன்பத்துள் தான்

சுடர்ந்து சுடர்ந்து 

இன்று வரை 

வெளிச்சம் காட்டிக்கொண்டே

இருக்கிறது.

இந்த சொல்லாடலே 

அந்தப்புலவனுக்கு பெயர் சூட்டியது

"கல் பொரு சிறு நுரையார்" என்று.

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களே!

உங்கள் ஒரு சொல் 

இன்னொரு சொல்லை காதலிக்கும்.

வைரங்கள் வைரங்களை

கட்டியணைக்கும்

கதகதப்பில் கூட‌

காதலின் "கல் பாக்கங்கள்"

கூடு கட்டிக்கொண்டிருக்கும்

இனிய ஆவேசங்களில் உங்கள்

ஆற்றல்களின் மனப்பீலிகள்

கற்பனை அலை விரிக்கும்.

போகட்டும் 

மிகவும் குறுகிப்பொன‌

இந்த உலகத்தைத்தூக்கி

குப்பையில் போடுங்கள்.

அந்த நோபல் பரிசுகளின்

தூசு துரும்புகளால்

மாசு பட்டுப்போக வேண்டாம்

உங்கள் 

கணியன் பூங்குன்ற 

பனை நுங்கு மென்மைத்

தமிழ் இனிமைப் பாட்டுகள்.



______________________________________________

ஞாயிறு, 26 மே, 2024

"பரமாத்மா"

 மீண்டும் "முதல்வர்" நரேந்திரமோடி தான்

என்று

பாட்னா கூட்டத்தில் 

நிதிஷ்குமார் அவர்கள் 

வாய் தவறி சொல்லிவிட்டாரேமே!

இந்த நாக்குப்புரளல் கூட‌

"பரமாத்மா" சோல்லியதாக‌

ஏன் இருக்கக்கூடாது?

_______________________________________27.05.2024

கல்லாடன்



___________________________________________________________________________________

https://www.msn.com/en-in/news/India/may-narendra-modi-become-nitish-kumar-s-slip-of-tongue-at-patna-rally/ar-BB1n4MCb?ocid=msedgntp&pc=ASTS&cvid=57e63204f29248e08f9985a376d24f5e&ei=31


_____________________________________________________________________________________


  •  
  • Nitish Kumar's gaffe at Patna rally: 'May Modi become Chief …

  • People also ask
    Prime Minister Narendra Modi with Bihar Chief Minister and Janta Dal United President Nitish Kumar. File Photo Bihar Chief Minister Nitish Kumar mistakenly expressed his wish for the Prime Minister to become the Chief Minister again during an election rally in Patna.
    Bihar Chief Minister Nitish Kumar mistakenly expressed his wish for the Prime Minister to become the Chief Minister again during an election rally in Patna. Humaari ichha hai ki hum deshbhar me 400 se bhi zyaada seat jeeta, aur adarniya Narendra Modi ji fir mukhya mantri bane.
    PTI NAC ACD (This report has been published as part of the auto-generated syndicate wire feed. Apart from the headline, no editing has been done in the copy by ABP Live.) Patna, May 26 (PTI) JD (U) president Nitish Kumar on Sunday wished another term as "chief minister" for Narendra Modi, who had ruled Gujarat prior to becoming the prime minister.
  • Nitish Kumar Gaffe: 'May Narendra Modi Become Chief Minister

  • May Modi Become 'Mukhya Mantri' Again: Nitish Faux Pas in Bihar …

  • Nitish Kumar Tongue Slip: हम चाहते हैं एक बार फिर नरेंद्र मोदी ...


  • https://www.msn.com/en-in/news/India/may-narendra-modi-become-nitish-kumar-s-slip-of-tongue-at-patna-rally/ar-BB1n4MCb?ocid=msedgntp&pc=ASTS&cvid=57e63204f29248e08f9985a376d24f5e&ei=31