செவ்வாய், 28 பிப்ரவரி, 2023

(ஒரு இந்திய ஆயுள்காப்பீட்டுக் கழக ஊழியனின் நினைவு ஏந்தல்)

 


2 பேர் மற்றும் உரை இன் படமாக இருக்கக்கூடும்


தோழர்  சரோஜ் சௌத்திரி.

__________________________________________‍‍

செங்கீரன்.



(ஒரு இந்திய ஆயுள்காப்பீட்டுக் கழக ஊழியனின் நினைவு ஏந்தல்)


வெள்ளைக்காலர்களின்

வெளிறிய அறிவு வனத்தில்

சிவப்புச் சிந்தனையின்

கதிர்வீச்சுக்கு

கால் கோள் ஊன்றிய‌

கல்பாக்கமே! உன்

சொல் பாக்கம் கண்டவர்கள்

வரலாற்றுத்

தலையணைப்புத்தகங்களையெல்லாம்

தள்ளி ஏறிந்து விட்டு

எழுச்சி கொண்டார்கள்.

அது வரை

அது ஒரு முரட்டு புத்தகம் என்று

மார்க்சின் நூலை விட்டு

ஒதுங்கி நின்றவர்கள்

மனித வரலாற்றுக்குள் துடித்த‌

ஈரமான வேர்வை ரோஜாவின்

எரிமலை மகரந்தங்களையும்

தம் மீது தூவிக்கொண்டார்கள்.

உன் பேருரைகள் சொற்பிரளயங்கள்

அத்தன்மையது.

ஆயுள் காப்பீடு எனும்

வெறும் மரண ஃபண்டு ஆபீஸ்கள்

இந்தியாவின் பொருளாதார வேர்களைக்

காக்கும் உயிரோட்டமான இயக்கம்

தாங்கும் கழகம் எனக் கண்டனர்.

உழைப்பின் நெருப்பு

கரத்துக்கு மட்டும் அல்ல‌

கருத்திற்கு வேர்வை பாய்ச்சும்

எனும் அறிவார்ந்த‌

பாட்டாளி இயக்கம்

பாரத மக்களின் நாடித்துடிப்புகளாய்

பாய்ந்தது

உன் சீரிய தொண்டினால் தான்.

பொருளாதார வல்லுநர்கள்

பொருளின் விலை என்றால்

மாயச்சந்தையின் வீங்கும் வற்றும்

மதிப்பு என்று

பலூன்கள் விட்டுக்கொண்டிருந்தார்கள்.

மார்ச்சின் சிந்தனையே அது

பாட்டாளிகளின் வேர்வை மூச்சு என்றது.

ஓ!அறிவு சிற்பியே!

உன் சிந்தனைச்செதுக்கல்களில்

இந்த பாரதப்பழம்பெரும் பாறாங்கல்

மானிட ஆற்றலின் மலர் முகத்தை...

அந்த பாட்டாளியின்

கழுத்து நரம்பு கை நரம்பு புடைப்புகளில்

ஊறும் பாரத வளர்ச்சியின் ஒளியை..

தரிசித்து நின்றோம்.

கல்கத்தாவில் அன்று அந்த‌

எழுச்சி மிகு

"இலாக்கோ விஜில்"

உன் சுவடு பற்றிக்கொடுத்த‌

ஒரு சிந்தனைப்போராட்ட வடிவம்.

மறக்க முடிய நாட்கள்

உன் சிவந்த வானத்தின் 

வீர விளிம்பு அது.

உன் பெயரே

எங்களுக்கு

இன்னும் இன்னும் ஒரு

புதிய யுகம்!

வெல்க

அச்செஞ்சுடரொளி!

________________________________________________



தமிழ்ப்புயல்





அந்த ஒலிவாங்கி

என்ன பேறு பெற்றதோ?

கலைஞர் கடல் தமிழ்

அதில் அலைவிரிப்பதை

தமிழர்களின் சூரியன்

அங்கு கரு தரிப்பதை

எவரும்

மறுக்க இயலுமோ?

தடுக்க இயலுமோ?

ஸ்டாலின் எனும்

இரும்புத்தமிழன்

மக்கள் மனங்களில்

எப்போதும்

கரும்புத்தமிழன்!

பஃறுளியாறுகளும்

பல்மலை அடுக்கங்களும்

எப்போதும் எதிரொலிக்கட்டும்

உன் தமிழை!

__________________________________________‍

கவிஞர் சொற்கீரன்


 

1 நபர் இன் படமாக இருக்கக்கூடும்


ஓம்

 ஓம்

_________________________________________


ஓம் என்பது தூய தமிழ் ஒலிப்பு.

அகரம் உகரம் மகரம் சேர்ந்ததாய்

சமஸ்கிருதம் உருட்டுவதெல்லாம்

தமிழ் ஒலிப்புகளின் 

பகடைக்காய்களைத்தான்.

ஈழத்தமிழர்கள் நாம் ஆம் என்பதை

ஓம் என்பார்கள்.

இது ஒத்திசைவு (ஒத்துப்போகுதல்)

ஆகும்.

இதன் ஆங்கிலமே 

சிம்மெட்ரி ...சூப்பர் சிம்மெட்ரி எல்லாம்.

பிரபஞ்சம் எனும் 

விண்ணியல் தமிழ் வேர்பிடித்த‌

மண்ணியலே அன்றி

வேறொன்றில்லை.


_______________________________________ருத்ரா

the boulder

 


the boulder fell on my face

i mean that morn with sunbeams.

why not it is a sweet and mellow dawn?

'cause the vulturous wings and flights

with  its scarlet claws pierce 

into all the norms and forms.

the life bleeds on the streets

their gods pick the flesh and all

the core and mantle of hope.

the draconian gestures sway dooms.

the scriptures like deadly black sea

compress all a sigh 

all a peep of a promise and primroses..

Thwart it ! or you will be squeezed 

and all your silken threads and wings.

you are not those humble and meek

larvae to be strewn viscera of lumpy fluid

in which the fear and forlorn 

is always glorified to a "franchise".

_______________________________________

ruthraa



படபடக்கிறது.

 படபடக்கிறது.

___________________________________________

ருத்ரா



பழைய நாட்களை சுமந்து திரிபவன்

எனும் பிணம் தூக்கியா நீ?

வரும் நாட்களை வருடும் பீலிகளாய்

அதன் அழகை உச்சிமோந்து

பார்ப்பவனா நீ?

எப்படியானாலும் அது

வாழ்க்கை தான்.

அதன் முதுகு உனக்கு அரிக்கிறது.

அதன் முகமோ முழுநிலவாகவே

எப்போதும் உனக்கு

பால் வார்க்கிறது வெளிச்சத்தில்.

வாழ்க்கைப் புத்தகம்

புத்தக திருவிழாக்களில்

அகப்படுவது இல்லை.

மகிழ்ச்சியும் துயரமுமே

அச்சுக்கூடங்கள்.

அந்த புத்தகத்தை 

புரட்டிக்கொண்டிருக்கத்தான்

உன்னால் முடியும்.

எழுத்துக்கூட்டி வாசித்துப்பார்.

உயிர் எழுத்துக்கு மெய் எழுத்து 

ஒட்ட வருவதில்லை.

உயிர் மெய் எழுத்துக்கூட்டங்களும்

கூட‌

வெறும் உணர்ச்சிகளின் 

கூட்டாஞ்சோறு மட்டுமே.

பசியும் சோறும் 

பந்திவிரிக்கும் நாட்களில்

உன் புத்தகம் காற்றில்

படபடக்கிறது

வெற்றுப்பக்கங்களாய்!


__________________________________________




திங்கள், 27 பிப்ரவரி, 2023

பேட்டி

 

Facebook


ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் இன் குளோஸ்-அப் ஆக இருக்கக்கூடும்


பேட்டி 

-------------------------------------------------------------------------------------


காலம் எனும் பொறாமைப் பேயே.

உன்னால் என்ன செய்ய முடியும்?

இந்த தோலைச் சுருக்குவாய்.

உன் வரிகளை உழுதுகொள்.

அதில் 

என் வரிகளை

உயிரெழுத்துக்களாக்குவேன்.

என் கண்களின் தீக்கங்குகளைப்பார் 

இன்னும் இன்னும் 

ஆயிரம் சூரியன்களுக்கு 

கடன் தருவேன்

ஒளியை ....நெருப்பை..

பிணமாய் முடிந்து 

சாம்பற்பூக்களை சிதறடித்து 

நீ 

பழி தீர்த்துக்கொள் கவலையில்லை.

என்னைசசுற்றி 

அன்பின் மக்கள்.

அவர்களைச்சுற்றி 

ஆவேசமான கனவுகள்.தாகங்கள்.

என் புன்முறுவல் வளைவுக்கு 

இந்த உலகத்தில் 

எந்த "ஜியாமெட்ரியும்" கிடையாது.

அகராதிகளில் அச்சிடப்படாத 

சொல் 

மனித நேயமே அது.

என் மூச்சை உதிர்த்து 

உன் மூச்சை வேண்டுமானால் 

காப்பாற்றிக்கொள்.

பிறப்பும் இறப்பும் 

ஒரே வாசல் ஆனது எனக்கு.

காலமே 

உன்னோடு இன்னும் பேசிக்கொண்டிருக்க 

நேரம் இல்லை எனக்கு.

உன் பின்னே பார்.

கோடி பிரம்மன்கள் காத்திருக்கிறார்கள் 

என் பேட்டிக்கு.


---------------------------------------------------------------------------------------------

ருத்ரா 










ஞாயிறு, 26 பிப்ரவரி, 2023

விசைப்பலகையில்

 உராங் உட்டானோ

சிம்பன்சியோ

தெரியவில்லை.

விசைப்பலகையில் 

விரல்களை மேய விட்டு

எச்சில் பண்ணி கடித்துப்பார்த்து

குதறிக் குதறி உதறியபின் 

தட்டியது இது....


போதும்டா..அங்கே

நீங்கள் விரல் த‌ட்டியது.

இனி மேலும் தட்டினால்

ராம லட்சுமணர்களை 

சுமந்து சுமந்து

தரைக்குள்ளேயே போய்விடுவீர்கள்!!!!!


____________________________________________

ருத்ரா

"சாடிசம்"

 


திராவிடமும் ஆரியமும் தமிழ் வேரிலிருந்து வந்ததாகத்தான் சான்றுகள் சொல்கின்றன.ஆரியத்தமிழன் இன்னும் கண்முளைக்காத காட்டுமிராண்டியாக இருக்கிறான்.திராவிடத்தமிழன் திரைகளின் கடல்கள் கடந்து உலகம் புரிந்தவனாக இருக்கிறான்.மனிதம் உணர்ந்த மகத்தானவனாக இருக்கிறான்.இந்தக்கருத்து இன்னும் நிலை  நிறுத்தப்படவேண்டியிருக்கிறது. ஏனெனில் "ஆர்"என்ற சொல்லும் "திரை"(இதிலிருந்தே த்ர வந்திருக்கிறது) என்ற சொல்லும் தூய தமிழ்ச்சொற்களே.இது பகையாளி‍‍ பங்காளிக்காய்ச்சலா? என்பதும் ஆழ்ந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியது.சமத்தன்மை உடன்பிறப்பு உணர்வு மனிதம் எனும் மலர்வு என்னும் பண்புகள் முளைக்காதவன் கொட்டடிகளில் வைத்து தீவிர பயிற்சி அளிக்கப்பட வேண்டியவர்கள்.ஒரு தாய் வயிற்றுப்பிறந்தவர்களே சிலர் நூல் மாட்டிக்கொண்டு மற்ற உடன்பிறப்புகளை விலங்குக்களுக்குள் மாட்டி வைத்துக்கொன்டு ரசிப்பது எனும் "சாடிசம்" கண்டிப்பாய் களையப்படவேண்டும்.

---------------------------------------------------------------------ruthraa

கேமரோன்களும் ராஜமவுலிகளும்.

கேமரோன்களும் ராஜமவுலிகளும்.

______________________________________________

ருத்ரா 



திரையுலக சிற்பிகள்

சங்கமிக்கும் உலகம் தழுவிய 

இந்த தருணங்களே கூட‌

ஹாலிவுட் அல்லது பாலிவுட்

படம் போல் 

பேசப்படும் 

புகழ் பெற்ற நிகழ்வுகள் 

ஆகி விட்டன.

ஆர் ஆர் ஆர் படம்

ஆஸ்கார்களைக்கூட‌

பூ என்று

ஊதித் தள்ளிவிடும் போல் 

அல்லவா இருக்கிறது.

இந்தியர்களின் பெருமிதம்

வானை முட்டித்தள்ளிவிடுவது போல்

இருப்பது

பெரும் மகிழ்ச்சியே.

ஒரு சமுதாய உரசலின் சிறுபொறி

மூணு மணிநேரப்படமாக 

இருந்த போதிலும்

அது 

உலக வரலாற்றை

மனிதத்தின்  ஆழ்மனது ரணங்களோடு

மண்ணுக்குள் பின்னிய‌

நரம்பு முடிச்சுகளில்

காட்சிப்படுத்தப்படுமானால்

அது

உலக உள்ளத்துடிப்புகளை

அசைத்துப்பார்க்கிறது

என்று நாம்

உணர்கின்றோம்.

அலைவிரிப்புகளாய்

ஆவேசம் கொள்கின்றோம்.

அது ஏன்

இன்று முரண்பட்டு போனது?

கிராஃபிக்ஸ் பொம்மைப்படங்களாய்

மெய்போல் தோன்றும்

பொய்யின் ரத்தசதை மடிப்புகளாய்

இல்லாவிட்டால்

ஹிக்ஸ்போஸான்களைக்கூட‌

விநாயகர் கை பொரிஉருண்டைகளாய்

அல்லது

ஏதோ கிரேக்க ரோமானிய‌

சிறகு முளைத்த டைனோசார்களாய்

டிஜிடல் கணிதங்களின்

குடலை உருவி மாலைபோட்டு

மலைக்க வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஊதிபத்தி புகைபோல்

எழும் சமுதாய ஓர்மைகளை

மேலை நாட்டினர் கோடு காட்டினாலும்

இந்திய மேதாவிகளுக்கு

அனுமார் வாலும் பன்றி "அவதார்"களும் போதும்

லேசர் கொப்புளித்தல்களில்

கணிப்பொறியின் காக்கா வலிப்புகளில்

பிரமாண்டம் காட்டி நம்

மூளையை எல்லாம் மழுங்கடிக்க.

அன்று

சத்யஜித் ரே தந்த 

கருப்பு வெள்ளையின் கனமான‌

உண்மைகளுக்கு முன்

இந்த "சோளப்பொரிகள்"

என்ன கலை ருசியை காட்டிவிடும்?

தொழில் நுட்பம் வாய்ந்த‌

கோரைப்பற்கள் மூளைச்செதில்களை

கிழித்துத்தின்னுவதில்

சாதிகளும் மதங்களும் மற்றும்

மனிதம் கசாப்பு செய்யப்படுவதே

தெரியாமல்

கசாப்பு செய்யப்படும் உத்திகளும்

மிக மிக அருகில் உள்ள‌

நம் நூற்றாண்டை 

"சாட் பாட்"டுகளின்

க்யுபிட் கொட்டாங்கச்சியில்

கலக்கித்தரும் இந்த‌

காக்டெயிலை 

சுவையுங்கள் சுவையுங்கள்

சுவைத்துக்கொண்டே இருங்கள்.

வேர்வை வர்க்கம் பிழிந்து போட்ட‌

சக்கைகள் தான்

உங்கள் சரித்திரத்துப்பக்கங்கள்


_____________________________________________________________





"ஹேமில்டோனியம்"


"ஹேமில்டோனியம்"

_____________________________________________________


அலைஇயங்கியம் தான் குவாண்டம் இயங்கியம். இயற்பியல்.ஒரு குறித்த புள்ளிநிலையில் இல்லாமல் மேலும் கீழும் அசையும் அலைப்பாட்டை அளவுபடுத்துவதே "அளபடையம்"எனும் குவாண்ட இயற்பியல்.மேல் கீழ் நகர்வு இங்கு "அலை" என்ற போதும். இரு நிலைப்பாடுகளுக்கும் இடையே உள்ள மட்டப்பாடும் (ஈகுலிப்ரியம்) ஒரு மைய புள்ளிநிலையை உள்ளடக்கி இருக்கிறது.இந்த மட்டப்பாடு மேல் கீழ் நகர்ச்சி மட்டப்பாட்டு மற்றம் (ஃபேஸ்ஷிஃப்ட்) எனப்படுகிறது.குவாண்ட இயங்கியம் இந்த மட்டப்பாடு நகர்ச்சியை அளவீடு செய்யும் மரபு இயற்பியலே (க்ளாசிகல் மெகானிக்ஸ்) "ஹேமில்டோனியம்" எனப்படும். 

பெர்முடேஷன் காம்பினேஷன்



பெர்முடேஷன் காம்பினேஷன் 

எப்படிப் போட்டாலும்

நம்முள் தைத்து வைத்திருக்கும்

பரமபதக்கட்டத்தின்

சாதிப்பாம்புகள்

நம்மைச்சுற்றி 

நெளிந்து கொண்டிருக்கின்றனவே.

ஏன் ஏணிகள் என்னாயிற்று?

அவையெல்லாம் 

சொர்க்கவாசல் ஊஞ்சல்களுக்காக 

பிரமன் தொப்புள்கொடியில்

அவர்களுக்காகவே திரித்த‌

நூலேணிகள் அல்லவா!

அப்புறம்...

அரசியலமைப்பாவது

சாசனமாவது?

இவர்களின் கட் அவுட் ஜனநாயகம்

மடியில் ஒளித்து வைத்திருந்த‌

சர்வாதிகாரத்தை

மகா உத்சவத்துடன் 

மேளம் தட்டிக்கொண்டிருக்கிறது.

அதோ கண்ணாடித்தம்ளரில் தண்ணீர்.

என்று தணியும் அந்த 

சுதந்திர தாகம்?

பாரதி கேட்டது தான்.

செவிப்பறைகள் சல்லடைகள் ஆகின

அந்த சில்லரைச்சத்தக்காடுகளில்.


________________________________________________

ருத்ரா




 

சனி, 25 பிப்ரவரி, 2023

அகழ்நானூறு 24

 

அகழ்நானூறு 24

________________________________________

சொற்கீரன்



பாலைச்சுரம் அன்ன திரைச்சுரமும் ஆங்கோர்

நிரம்பா நீளிடை கடற்சுரம் கண்ணும் கண்போழ்ந்த‌

கடும்பல் திறத்தோன் முளிஅலை கல்லென‌

தண்பறை நாரை இனநிரை மேவ‌

வாள்மூக்கின் வன்சுறா உழப்ப ஆழல் மூழ்வும்

அலைவுறா நீச்சும் அவ்வெள்ளின் வெளியிடை

வீறு கொள வீங்கு நீர் புடைத்தாய் என்னே!

நின் குறுமகள் பாவை வண்டற் பாவை

அனையளாய் விரிமணல் எக்கர் வான்பூச்சூடி

குளகு குடையளாய் தழையாடை யுடுத்து

இன்பூ பூத்த செருந்திச் சுடரனாய் பரிமணல் 

பருங்கண் தடம் தடம் நீ இவண் ஊர்வாய் என‌

அவள் விழி இமை அடுக்கத்து உள் பூத்து

நின்றாள் நோதக நீ செய்தல் கடுங்கோறல்

கொல் அறம் தவிர்க நினை நச்சினாட்கினியனே.


_______________________________________________________

நச்சரித்துக்கொண்டே இருக்கிறீகள்.

 


கையில் ஒரு கைக்குட்டை.

நம் முகத்தை மூக்கை

கைகளை கண்களை

துடைத்துக்கொள்ள.

உங்கள்

உள்ளத்தின் மூலை முடுக்குகளை

உற்றுப்பார்த்திருக்கிறீர்களா?

அதைத்துடைக்க 

புதிய சிந்தனைக்களை

கைக்குட்டையாய் வைத்திருங்கள்.

பழமையை போற்றும் ஒரு வெறியில்

மனிதம் எனும் புனிதம்

புழுதியில் புதைந்திருப்பது பற்றி

என்றைக்கேனும் உங்களை

உறுத்தியிருக்கிறதா?

பிறப்பு எனும் ஒரே வார்ப்பை

பலப்பல குழிகளில் வீழ்த்தி

பல்லாங்குழி ஆடிக்கொண்டே இருப்பதா

சனாதனம்?

சாதிப்படுகுழிகளில்  தள்ளிவிட்டா 

மக்களின் சொர்க்கவாசல்களை 

திறக்கிறீர்கள்?

உங்கள் கனபாட்டங்களில்

காயம் பட்டு நசுங்கிக்கிடப்பது

பிரம்மம் தான் என்பதை

உற்றுக்கவனித்திருக்கிறீர்களா?

ஸ்லோகங்கங்கள்

நகக்கீறல்கள் மற்றும்

கோரைப்பற்களின் சுருதிகள்

ஆனது ஏன்?

மொத்த மக்களும் தீட்டு.

நாங்கள் வெகு சிலர் மட்டுமே

கடவுளின் மடியில் என்று

நச்சு பாஷ்யங்களில்

ஏன் இப்படி 

நச்சரித்துக்கொண்டே இருக்கிறீகள்?

ஆத்திகம்.....

சீழ் வடிகிறது பாருங்கள்.

நாத்திகமே அதற்கு மருத்துவம்.


___________________________________________________

ருத்ரா






புதன், 22 பிப்ரவரி, 2023

தாண்டவம்

 

தாண்டவம் 

--------------------------------------------------------------------------

"புலிக்குன்றன்"



குவாண்டம் இயற்பியல்

தமிழில்

"அளபடை"இயற்பியல்.

அளப்பதும் 

ஒரு அளவுபாட்டுக்குள் அடைப்பதும்

என்பது

ஒரு இயலாத மாயை என்று

இந்திய மெய் இயலாளர்கள்

கூறியிருக்கிறார்கள்.

சிவம் அல்லது சிவனின்

அடி முடி காணவே இயலாதது

என்ற கருத்துக்குள்

ஒரு அறிவியல் பொறி உண்டு.

குவாண்டம் மெகானிக்ஸ் என்பதும்

"ஸ்க்ரோடிங்கர் பூனை" என்பதும்

நம் நாட்டு

குறிப்பாக திராவிட சிந்தனையின் 

"சிவானிக்ஸ்" தான்.

வேதங்களை பேசியவர்கள்

அவர்களுக்கு முன்பே இந்த மண்ணில்

வேர்பிடித்திருந்த‌

சிவக்கோட்பாட்டை சிசுன தத்துவம் என்று

எள்ளி நகையாடியவர்கள்.

இன்று காசியில்

தூப தீபங்களை உயர்த்திப்பிடிப்பது எல்லாம்

பிறள் காட்சி அலங்கோலங்கள் தான்.

ஆட்சியைப்பிடிக்கும் ஆவேசம் மட்டுமே

அங்கு தாண்டவம் ஆடுகிறது.


(தொடரும்)

குமரிமுத்து

 

 குமரிமுத்து

-------------------------------------------------------------


கட கட என்ற சிரிப்பொலிக்கு

 பெயர் தான் குமரிமுத்து

என்று 

ஏமாந்து போனவர்கள் எத்தனையோ பேர்.

 தமிழ்த்தொன்மையின் 

குமரிக்கண்டத்தை 

அந்த குரலில் 

ஒரு நாள் கண்டு 

வியப்புக்கு மேல் வியப்பு அடைந்தேன்.

 கோடம்பாக்கத்துக்குள் இப்படி 

ஒரு தமிழ்க் கோட்டையா?

 தமிழர்களை அகழ்வாராய்ச்சி செய்தால் 

இப்படி எத்தனையோ 

சிந்து சமவெளி சித்திரங்கள் கிடைக்கும் 

என்பதற்கு 

இவர் ஒருவரே சான்று. 

வாழ்க 

தமிழ்ச்சான்றோன் குமரி முத்து!

____________________________________ 

ருத்ரா.

செவ்வாய், 21 பிப்ரவரி, 2023

அது எதுவோ?

 

அது என்ன 14 ஆம் தேதி?
காதல் அன்பின் ஈரம் காய‌
பல மில்லியன் ஆண்டுகள் வேண்டுமே.
அதனால்
இன்றும் என்றும் இப்போதும்
இதயங்கள் பரிமாறிக்கொள்ளட்டும்
சிஸ்டாலிக் டைஸ்டாலிக்
முத்தங்களை!
இந்த வேலண்டைனின்
ஃப்ராக்டல் ஜியாமெட்ரியே
இந்த பிரபஞ்சங்கள்.
வைரஸ் வரை துடிப்புகள் காட்டும்
இது என்னவோ
அதுவே அது.
அதற்குள் கிடப்பது
நோபல் பரிசுகளின் கிட்டங்கிகள்
மட்டும் அல்ல.
அறிவுகளின் இறுதி
கல்லறைகள் அடங்கிய
கிட்டங்கியும் அதுவே.
மீண்டும் சொல்வோம்
அது எதுவோ
அதுவே இது.
_________________________________________
ருத்ரா



திங்கள், 20 பிப்ரவரி, 2023

தாத்தாவும் தாயும்



தாத்தாவும் தாயும்

________________________________________


தாய்மொழி நாள் இன்று

அகமகிழ்ந்து கொள்வோம்.

கொஞ்ச நாள் முன்பு

தமிழ்த்தாத்தா என்று

கொண்டாடினோம்.

அப்படியானால் இன்றைய‌

தமிழ்த்தாய்க்கு 

அவர் அப்பாவா?

உடனே ஆம்

சமஸ்கிருதம் தான் அம்மா

என்று

ஸ்லோகங்கள் குவித்து விடுவார்களே

தமிழர்களே!

உணர்ச்சிக்கு சொக்கப்பனை

கொளுத்துங்கள் கவலையில்லை.

அதில் 

அறிவு சாம்பல் ஆகிவிடலாமா?

சுவடிகளில் 

தமிழை ஒலிப்பித்த‌

அந்த செம்மல் வாழ்க.

உலகம் முழுதும் 

வேர் பிடித்து

வேர்த்தூவிகளாய்

உயிர்த்துக்கொண்டிருக்கும்

நந்தம் செந்தமிழ்

வாழ்க வாழ்க 

நீடு வாழ்க!

_______________________________________

ருத்ரா


மூளையின் மூளை

மூளையின் மூளை

___________________________________________

ருத்ரா



யாரோ ஒருவர்

அந்த செயற்கை மூளைப்பெட்டியை

வைத்துக்கொண்டு

விளையாட விரும்பினார்.

தான் வந்திருந்த விமானம்

ஏன் இத்தனை தாமதம்

என்று

"ஏ ஐ பாட்"ல்

வினா எழுப்பச்சொன்னார்.

அதுவும்

நீள நீளமாய் ஷேக்ஸ்பியர் ஆங்கிலத்தில்

கார சாரமாய் வினா தொடுத்தது.

சென்ற வேகத்திலேயே

விடையும் வந்தது

அதையும் விட நறுக் நறுக் என்று

ஊசி குத்திய ஆங்கிலத்தில்.

அனுப்பியது

விமானக்கம்பெனியின் 

செயற்கை மூளைப்பெட்டி.

கணிப்பொறிகள்

வாளேந்த துவங்கிவிட்டன.

என்றைக்கு 

உலகம் ஒரு

மெகா மெகா

ஹிரோஷிமா நாகசாகியாய்

கரிப்பிடித்து

காணாமல் போய்விடுமோ?

ஓட்டு கணிப்பொறி 

பட்டன் தட்டுவது போல்

அணுகுண்டின் பட்டனும் 

தட்டப்படலாம் ஒரு நாள்.

ஜனநாயகத்தைக்காட்டி

மடியில் 

ஒளித்து வைக்கப்பட்டிருக்கும்

சர்வாதிகாரம் 

சந்திக்கு வந்து விடலாம்.

யாருக்குத் தெரியும்?

மனிதா

உன் மூளைக்கும் மூளை இருக்கிறதா

என்று

உடனே சோதனை செய்து கொள்!


____________________________________________________


சிமிழ்க்கூடம்.

 

2 பேர் இன் படமாக இருக்கக்கூடும்


"மாதவத்து"ஓவியத்துள்
மாணிக்க ஒளி பாயும்
காதலின் கதிர்வீச்சு
கல் பாக்கங்கள் கூட‌
தூளாக்கி துளைத்துவிடும்.
அவள் கண்கள் அணு
அலைக்கூடம்.
அவன் அணைப்போ
அன்பின் விண்வெளியை
அடைத்து நிற்கும் இதயச்
சிமிழ்க்கூடம்.
_________________________________________
ருத்ரா

அகழ்நானூறு 23

 


அகழ்நானூறு 23

__________________________________________

சொற்கீரன்.



கணக்கலை இகுக்கும் கறி இவர் சிலம்பின்

கழை வில்லாக கால் ஊழ் ஆங்கு கூர் அம்பாக‌

சிறைப்புள் இனநிரை வரியினை பிளக்கும்.

செம்புற்றம் உடைத்து இன‌ஈயல் தின்று

சுரம் செறி இருட்டின் உருகாட்டி வெரூய்

குரூஉ மயிரியாக்கை கூனல் எண்கின்

அஞ்சுவரு ஆற்றின் ஆனாது வரும் 

கடாத்த பெருமகன் எமியன் எனினும்

இமயம் இடறினும் பொடிபட படர்வான்

பசலை நின் மணிநிறம் அவ்வொளி காட்டும்.

அலந்தலை ஞெமையத்து வலைக்கண் நிழலின்

இருநிலப் படுகையின் பரல் முரல் ஒலியில்

செந்நாய் ஏறு கூர்வாய் பிளப்ப எதிர்ப்படு

செலவும் தளர்வின்றி ஏகும் சிமைய வெற்பன்.

மண்டுஅமர் அழுவத்து புண்தேர் விளக்கத்து

குருதி ஒளியும் கருதினான் இல்லை.

இடைவழிச் செருவின் நிணம் சிதற நடந்து

அத்தம் ஆங்கோர் விண்தோய் விளங்கல்

எல்லிக்கொண்ட கங்குலும் கடந்தோன் அம்ம.

நனி நீண்ட பாலையும் நின் வளையொலி பட்டு

அவனுக்கோர் பட்டின் போர்த்த‌ சாலையாகும்மே.


_____________________________________________________‍



ஒரு பென்சில் முனை.

 


Facebook 



என்ன ஓவியம் இது?

ஒரு பென்சில் முனையில்

சொட்டியது "பிரம்மம்".

படைப்பை சொல்லும் 

பிரம்மம் என்ற சொல் கூட‌

இங்கே அழுக்காகிப் போன போது

அதன் அழகே உயிராகி உருகிய‌

மாயம் இது.

கண்களில் இதழ்கள்.

இதழ்களில் கண்கள்.

உணர்ச்சியின் தளும்பல்

கடல்களாகி கரைகள் உடைத்து

அந்த பென்சில் கூர்மையில்

மௌனத்தின் ரத்தம்

பேசுவது எதனை?


_________________________________________

ருத்ரா





மூளை வியாபாரம். (A I)

 


மூளை வியாபாரம்.

______________________________________‍‍

ருத்ரா



மூளை வாங்கலையோ மூளை!

கூவி கூவி

வியாபாரம் சூடு பிடிக்கிறது.

கூகிளும் 

மைக்ரோ ஸாஃப்டும்

உலக சந்தையை

கலக்கோ கலக்கு என்று

கலக்கிக்கொண்டிருக்கிறது.

உள்ளுக்குள்ளே

ஆச்சரியங்களுக்கும் மேல்

ஆச்சரியங்களாய்

உலகத்து பல்கலைக்கழகங்களையெல்லாம்

கூழாக்கி கையில் தந்தால்

ஜில்லென்று ஒரு

ஜிகர் தண்டா தான்!

கேள்விகள் அடுக்கினால்

அடுக்கும் முன்பே

அங்கே அத்தனையும்

நியூரான்களும் சினாப்டிக் ஜங்ஷன்களுமாய்

சூடான வடைகளாய் விடைகள்!

மனிதனை எப்போதுமே

அரித்து தின்னு கொண்டிருந்த‌

கடவுள் பற்றி கேட்டால் 

அது அடுக்க ஆரம்பித்தது கேள்விகளை.

எந்த நாட்டுக்கு?

கேட்டது..  சொன்னான்.

எந்த பிரிவு?

கேட்டது..சொன்னான்.


(தொடரும்)


ஞாயிறு, 19 பிப்ரவரி, 2023

எங்கிருக்கிறேன்?

 

எங்கிருக்கிறேன்?
___________________________________‍___
ருத்ரா




மனிதா!
என்னை
எங்கிருக்கிறேன்
என்று காட்டு
என்று
தடவி தடவி கேட்டான்
இறைவன்.
மனிதனை அறிந்து கொண்ட‌ போது
புரிந்து கொண்டான் இறைவன்
தான் இவ்வளவு
முட்டாளா என்று!


_____________________________________________

மயிலுக்கு ஒரு அஞ்சலி

 


மயிலுக்கு ஒரு அஞ்சலி

___________________________________________

ருத்ரா




மயில்சாமி எனும்

மயில் பறந்தே போய்விட்டது

என்று தாமு அவர்கள்

கண்ணீர் அஞ்சலி உகுத்திருந்தார்.

உண்மையிலும் உண்மை.

அது அகவியது அத்தனையும் 

தமிழின் ஒலி.

அதன் சினிமாப்பீலிகள் 

இன்றும் மக்களின் 

எண்ணங்களையும் வண்ணங்களையும்

சிலிர்ப்புடன் காட்டி

சிரிப்பு காட்டி நெகிழ வைக்கின்றன.

அந்த முட்டாள் எமனுக்கு

இந்த நாட்டின் அதிக வயது 

புள்ளிவிவரம் ஏன் தெரியாமல் போனது?

அம்பதேழு வயது என்பது

திரையுலக பிருந்தாவனத்தின்

மிக மிக இளைய வயது அல்லவா.

ஒழிக ஒழிக 

அந்த மோசக்கார எமன்.

மயில்சாமி அவர்கள்

நடத்திய நிகழ்ச்சி ஒன்று

இன்னும் 

ஒரு எட்டாத உயரத்தில் இருக்கிறது.

பத்து அடி

இருபது அடி

இருநூறு அடி

என்று

பல உயரங்களிலிருந்து 

விழுவதை

"பல குரல்" முறையில்

ஒலித்து அரங்கையே அதிரவைத்தார்.

அவரே

ஒரு எட்டாத உயரத்துக்கு சென்று

பல குரல்களின்

சோக மழையை இப்படி

பொழிந்து விடுவார் என்று

யாரும் எதிர்பார்க்க வில்லை.


பல குரல் மன்னனாக வந்து

நடிப்பின் மகுடம் சூட்டியவன்

சமுதாய ஓர்மை பெற்ற 

ஒரு மாமனிதனாய் 

மின்னல் வெளிச்சம் காட்டி

மறைந்து போனது

நம்மை மிகவும்

திக்கு முக்காட வைத்திருக்கிறது.

அந்த மயிலின் அகவல்கள்

என்றும் நம் நெஞ்சில்

எதிரொலித்துக்கொண்டிருக்கும்.


_________________________________________________







பெருஞ்சோற்று ஆற்றுப்படை

 பெருஞ்சோற்று ஆற்றுப்படை

---------------------------------------------------------------------------

 சொற்கீரன் 



கல் பொருது  இறங்கும் 

மல்லல் பேர்யாறும்  

மனம் பொங்கும் தருணம் உண்டு.

மக்களின் உருகெழு சிந்தனை ஒன்று 

மண்ணில் விண்ணில் எழூஉம் திங்கள் 

கனல் தூவும் காட்சிகளும் உண்டு.

வெண் கொற்றக்குடையின் கீழ் 

பண் கொற்ற குடையாண்ட 

பல் சான்ற புலவர்களும் உண்டு உண்டு.

பனங்குடை சோற்றுக்கும் நறவுக்கும் ஆங்கே 

பலப்பவாய் ஆற்றுப்படை  யாப்பும் உண்டு.


(தொடரும்)




இன்றே..இன்றே!

 


கடவுள் தேடி

கற்சிலை நோக்கி

ஓடுகின்றோம்.

அவர் குரல் என்று

பின்னணிக்கூச்சல் போடுபவர்கள்

அவர் சொன்ன தத்துவம்

எங்கோ

புதைத்து விட்டார்.

மனிதனை மனிதன் 

சுரண்டித்தின்பது

மகா மகா பாவம் இல்லையா?

இதை கழுவ‌

ஆயிரம் கங்கைகள் போதாது.

கோடி சுலோகங்களும்

வீணே வீணே.

இதுவே கடவுளின் குரல்.

கேள்மின் கேள்மின்

அவர் குரல் இன்று.

மனிதம் என்ற 

அறிவின் ஒளியே

இருட்டுக்கடல் நீந்தும்.

மற்றவை எல்லாம் 

மடிந்தே போகும்.

தெரிவீர்!தெளிவீர்!

இன்றே..இன்றே!


____________________________________________

ருத்ரா

புதன், 15 பிப்ரவரி, 2023

அகழ்நானூறு 22

 


அகழ்நானூறு 22

___________________________________________________

சொற்கீரன்


வங்கூழ் ஆட்டத் திரைஆடு பொய்யின்

கொய்சுவற் கலிமா அன்ன கால்போழ்

வங்கம் மீமிசை செங்கடற் குருகின் 

அகன்சிறை ஆர்த்த அசைநிழல் போலும்

மண்ணிழை மழைக்கண் மணிச்சிறை ஓச்சி

விழியிடை இழையிடை விரிகவின் நோக்க‌

நின் திசைபாய இறையள் வளைகுலுங்கும்.

நீள்கடல் வரியில் கல்லாடன் எழுதும்

கல்லா சொல்லும் கழறாஅ மொழியும்

அவளின் நெஞ்சத்து துடிதனை முரலும்.

பாழ்மணல் விரிந்தன்ன கட்ற்பாலை ஆங்கு

பொய்யில் தைத்து மெய்யெனக்காட்டும்

பொறிகிளர் மஞ்சின் முகம் முகம் காட்டி

நினை திரை அகலம் நீள ஓட்டி

அடைகரை தோறும் நாகர்தமிழர்

நாவாய் பல்திணை பல் ஒலி கூட்டித்

தந்ததை ஒற்றி நுண்திறம் ஓர்ந்து

செவ்விய தமிழின் செஞ்சுவடு பிலிற்ற

செழும்பொருள் கொண்மார் 

நான் மறைக்கு முன்னும் நாவலன் ஆகி

நாவலந்தீவின் நற்றமிழ் வழங்கி

மன்னார் மருங்கின் மன்னுதன் காட்டி

எல்லா மொழியும் நுவலத் தந்து

எல் என்றொரு முதன் முதற் கிளவி

உயிர ஈந்தவன் உயிர்த்தமிழோனே.

அற்றை அண்ணல் நின் வாணுதல் வருட‌

வந்திடும் ஆறும் நீள்தல் அன்று.

கள்ளிஅம் காட்ட கடமடுத்தாண்டு

உழிஞ்சிலும் வரிசை வல்லிய வரூஉம்

சுரன் போன்றொரு தோற்றம் செத்து

சுழிநீர் நனந்தலை அலைகள் படர்க்கும்.

அயர்ந்தாய் வேர்த்தாய் ஒள்ளிழையோயே.

நித்திலம் பூத்ததை கைத்தலம் கொள்வாய்.

படுமணி இரட்டும் பளிங்கொலி ஓர்வாய்.


____________________________________________________


பொழிப்புரை

______________________________சொற்கீரன்


வங்கூழ் எனும் பலமான காற்று ஆட்டத்திலும் அலைகளின் ஆட்டத்திலும் பிடறி அசையும் பொய்க்காற் குதிரையைப்போல செல்லும் தலவனது கப்பல் காற்றைக்கிழித்து செல்கிறது.அதன் மேல் அந்திச்சிவப்பின் செங்கடற் பறவையின் அகன்ற சிறகு ஆரவாரமாய் அசைந்து நிழல்காட்டுவது போல் நீரால் தூய்மை செய்யப்பட்ட அணிகலன்கள் அணிந்த தலைவி குளிர்ந்த கண்களின் அழகிய இமைகளை சிமிட்டி அந்த விழிகளின் ஊடு விரியும் அழகில் நோக்க பார்வையால் உன் திசைநோக்கி பாய்கிறாள். 

அழகிய முன்கையின் வளைகள் குலுங்கும்.இவையெல்லாம் தலைவனுக்கு அவன் விரும்பும் அந்த ஒப்பற்ற புலவன் கல்லாடன் அந்த கடல் சுவடியில் எழுதிய செய்யுள் போன்றுஇருக்கிறது.இது வரை கல்லாத சொற்களும் ஒலிக்காத மொழியும் அவள் நெஞ்சத்திலிருந்துதுடிப்பது போல் அது ஒலிக்கும்.அவள் அருகில் இல்லை அதனால் அந்த கடல் அழகற்று வறட்சியாய் ஒரு கடற்பாலையாய் தோன்றுகிறது.ஒளியின் சிதறல் மேகங்களில் ஏதோ ஒரு புள்ளிக்கோலம் போடுகிறது.அசைந்துகொண்டே  இருக்கும் மேகங்கள் மெய்யாய் நிற்பது போல் பொய்யாய் நகர்வது கூட ஒரு பூத்தையல் வேலை காட்டுகிறது.வீரம் செறிந்த தலைவனே இந்த மகிழ்ச்சியில் உன்னை அவள் கப்பலைச்செலுத்தும் உந்துதலை தருகிறாள்.நீயோ அலைகளோடு அலைகளாய் கடலின் நீள அகலங்களை வென்று கப்பலை ஓட்டுகிறாய். திரைகளையே செல்வம் ஆக்கும் திரைவியத் திராவிடத் தமிழனே நீ இறங்கும் கடற்கரையெல்லாம் "நாகர் நகரம்"ஆகிறது.நாகம் நாவம் இரண்டுமே கப்பலைத்தான் குறிக்கும்.கால்கள் இல்லாமல் கடலில் மிதப்பது ஊர்வது எல்லாம் "நாகப்பாம்பை" நினைவுறுத்துகிறது.நாகம் எனும் உவமை கப்பலுக்கு ஆகுபெயர் ஆனது.கடற்கரை நகரங்கள் "நாகர்"அடைமொழியைப் பெற்றதும் அதுவே  ஆகும் .தமிழர்களின் நாகரிகம் "நகர்"எனும் வினை ஆகுபெயரைக்குறித்த நகர்களால் தான் அவ்வாறு குறிக்கப்படுகிறது. தமிழர்கள் கடல்கடந்து சென்று பல்வேறு மக்களின் ஒலிப்புகளையும் திரட்டிக்கொணர்ந்தனர்.தம் ஒலிப்புகளையும் வழங்கி அந்தந்த மொழியையும் செம்மை ஆக்கினர்.அத்தகைய மொழி அறிவின் நுண்திறம் நம் தமிழை செம்மொழியாய் உயர்த்தியது.தமிழின் சுவடுகள் பிற மொழி வளங்களும் சுரந்தன.ஒவ்வொரு ஒலிப்பும் செழுமையான உட்பொருள் கொள்ளும்படி ஆர்த்து ஒலித்தன.(கொள்ம் ஆர்=கொண்மார்). இலக்கண இலக்கிய நலங்கள் எல்லாம் கொண்ட (கொள்மார்) நம் தமிழ் உலகம் முழுதும் வழங்கி வரும் ஒரு உயர் நிலை பெற்றிருந்தது.மனிதர்கள் "நாவல்லவர்களாக" இருந்த பழந்தமிழ் நாடே {"நாவலந்தீவு" ஆகி யிருக்கலாம்.வேதங்கள் தோன்ற காரணமாயிருந்த அவெஸ்தா மொழிப்பாடற் கதை கூட தமிழர்கள் மூலமே அவர்களுக்கு கிடைத்திருக்கலாம்.








செவ்வாய், 14 பிப்ரவரி, 2023

பிறப்பு வழியாக

 


பிரம்மம் பிறப்பு வழியாகத்தான் 

எட்டிப்பார்க்கிறது.

மார்பின் குறுக்கே வந்த ஒரு நூல்

அங்கே வழிமறித்துக்கொண்டு நிற்கிறது.

அப்படியிருந்தும்

கோடி கோடி மனிதர்களாய்

பிரம்மம் பிதுங்கி நிற்கிறது.

அந்த பிரளயத்தை

இந்த வர்ணக்கோடுகளால்

இனி தடை அணை போடவே இயலாது.

மலட்டு மந்திரங்கள்

இந்த பிரம்மத்தின் பிரம்மாண்டத்தை

கருச்சிதைவு செய்துவிட‌

கூச்சல் இட்டுக்கொண்டே இருக்கின்றன.

க்ஷத்திரிய வாளும் ஈட்டியும்

துப்பாக்கியும்

அஷ்டபந்தன கும்பாபிஷேகம் செய்து

இந்த அநீதிக்குத்தான்

வால் பிடித்துக்கொண்டிருக்கின்றன.

பெரும்பான்மை மக்கள்

சிறுபான்மையினரின் 

சூழ்ச்சி மூளைக்குள்

சுருண்டு கிடப்பதே 

சமூக அநீதி என்பது.

இதை அடித்து நொறுக்க வேண்டியதே

தமிழா

உன் நீதி.

உன் எழுச்சி.


_______________________________________________________________

ஒலி கேட்டுக்கொண்டே இருக்கிறது.





இன்று கடிகாரமுட்கள் 

ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ளும் 

இரவின் நடுவில்

இந்தப்பாடலில் என்னை

இழைத்துக்கொண்டேன்.

என்ன இசை?

தேன் மின்னல் 

வளைந்து நெளிந்து

கிளைகள் பல பிரிந்து

என் மோனத்து வானில்

நுள்ளி நுள்ளித்தந்த‌

இசையில் 

நான் "நானை" நார் உரித்து

என்னவென்று சொல்ல இயலா

பிழம்பு ஆகினேன்.

மிக அருமையான பாடல்.

இன்னும் அந்த‌

மெல்லிய் நுங்கின் ஊசி கொண்டு

தைக்கிறது.

நினைவுப்படுகைகளில்

அருவியின் இனிய‌

ஒலி கேட்டுக்கொண்டே இருக்கிறது.

___________________________________________________

ருத்ரா


time...00.15 AM

date.....15.02.2023



Indru Namathullame

ஒரு நாள் போதுமா?



ஒருநாள் போதூமா?

இன்று ஒருநாள் போதுமா?

யுகங்கள் பல காத்திருந்து

இந்த ஒற்றை ரோஜாவைக் காட்டி

"அக்னாலட்ஜ்மெண்ட்" பெற்றிட‌

இன்று ஒரு நாள் போதுமா?

அந்த இளைஞனின் கச்சேரி

நீண்டு கொண்டே இருக்கிறது.

அவள் எங்கே?

என்ன ரோஜாவை நீட்டிக்கொண்டிருக்கிறீர்களே

உற்றுப்பாருங்கள்.

அதுவே தான் நான்.

இவள் குரல் அவனுக்குக் கேட்டதா?

பாவம்...

அவன் இன்னும் "மோகனம்"...என்ற ஆலாபனையில்

..................

______________________________________________‍ருத்ரா

14.02.2023


அகழ்நானூறு 21

அகழ்நானூறு 21

_______________________________________________

சொற்கீரன்



நிரைபறை குரீஇ சில்வீடு நிரப்ப‌

புள்ளி நீழல் பொறி ஆர்த்த மரத்து

அகலிடம் மறைத்த விண்பூச்சு ஒளியில்

ஒளிந்து களைந்த நான்வகை மொய்ம்பும்

நெகிழத்தந்த காதலின் களியில் 

அவன் அவளாய் அவள் அவனாய்

விண்குயில் மண்ணும் மண்குவி விண்ணும்

மயங்கிய காட்சியில் விழிபுதைந்து வித்திய‌

வான்பயிர் விளைந்தது போன்ம்

கண்படை யாழ பண்ணி நேர்ந்தனர்.

மறை பொருட் காமம் விரிக்க ஒல்லா

மகிழ்வுப்பெருங்கடல் அலைஎறி அயர்தல்

இயலா சூர்நகை மூழ்கும் நாணம்

கல்லென வீக்களின் பாயல் இயலுமோ?

பேஎய் கண்ட இப் பெருமறைக் கனவு.


_______________________________________________________‍

சங்ககாலத்து காதலர் தினம் பற்றிய ஒரு செய்யுட்கவிதையை இந்த அகழ்நானூறு 21 ல்  எழுதியிருக்கிறேன்.

_____________________________________

சொற்கீரன்


திங்கள், 13 பிப்ரவரி, 2023

வாழ்த்துக்கள்.

 வாழ்த்துக்கள்.

("உதிரிகள்" சிற்றிதழுக்கு)




கடற்கரையில் ஒதுங்கிய‌

கிளிஞ்சல்கள்  கவிதைகள் தான்.

கவலையில்லை.

கடலின் சுமையை 

கொஞ்சமேனும் தாங்கிய 

அதன் மகிழ்ச்சி 

கோடி கோடி பெறும்.

‍‍‍‍‍__________________________________________

ருத்ரா


(வடி)வேலுச்சாமி.





கடவுள் இருக்கிறாரா?

இருந்தால் மகிழ்ச்சி.

என்று சிந்தனை உதிர்த்தவர்

உலக நாயகன்.

புலி வருது புலி வருது..

என்று

சொற்களும் நம்மை 

துரத்தி வருகிறதா?

வரும் 

ஆனா வராது 

என்று

வடிவேலுவாக‌

திருச்சி வேலுச்சாமி அவர்கள்

சொல்லவில்லை.

அவர் சொல்லில் 

உறுதி கொப்புளிக்கிறது.

புலி வருது புலி வருது...

என்பது

அச்சம் அல்ல.

நமக்கு ஏதோ 

ஒரு பாதுகாப்புக் கேடயம் ஒன்று

உறுமிக்கொண்டு வருகிறது

என்று நம்பிக்கை 

மெலிதாக படர்கிறது.

ஆனாலும் 

உலக மற்றும் உள்ளூர்

இல்லியூமினாட்டிகள்

தமிழன் சுவடு இருப்பதையே

அழிக்க‌

அதுவும் தமிழனைக்கொண்டே

அழிக்க‌

எங்கோ ஒரு

அஸ்வமேத யாகம் நடப்பதன்

பகைப்புகையின் 

கருகல் நாற்றமும்

அதில் தெரிகிறது.

தமிழா!

தமிழ் என்றால் 

மகிழ்!

ஆனாலும் மனதுள்

முகிழ்

உன் முனை முறியா

புறநானூற்றுக்கூர்மையுடன்.

என்றும்

எப்போதும்

வாழ்க வாழ்கவே

தமிழ் நீடு வாழ்கவே


______________________________________________________

ருத்ரா.



ஐங்குறும்பாக்கள் 2

 ஐங்குறும்பாக்கள் 2

________________________________________________

சொற்கீரன்.



இந்தியாவின் 

நீளமும் அகலமும் இன்னும்

நேருவே தான்.


ராகுல் யாத்திரை

____________________________________________1


கடவுள் 

தடவிப்பார்த்தார்.

எனக்குமா பூணூல்?


பூகம்பம்

____________________________________________2


ஊதியது

நீயாயிருக்கலாம்.

உள் மூச்சு எங்களுடையது.


அதானி பலூன்

___________________________________________3


"பசுவே பசுவே 

பால் கொண்டா..."

பாட்டும் கூட உதைத்தது.


பசுவின் வேலண்டைன்

___________________________________________4


இன்னுமா இந்த‌

"டாய் ஸ்டோரி"

உனக்கு ராமாயணம்?


இ வி எம்.

___________________________________________5



ஞாயிறு, 12 பிப்ரவரி, 2023

அகழ்நானூறு 20

 அகழ்நானூறு 20

________________________________________

சொற்கீரன்.




அமர்த்த மழைக்கண் விழிநீள் அம்பின்

அஞ்சிறைத் துடிப்பின் மணிமிடை ஈர்ந்த‌

நெஞ்சத்து விடரகம் மாய்ந்தோன் தழீஇய‌

நின் எரிதழல் அன்ன குவளை ஆங்கு

மீண்டும் கூர்த்து தண்மழை வீழ்க்கும்.

பானாள் இரவு இகந்து செறீஇ மைக்குறி

நடுக்குறு கள்வர் குடர்வாங்கு கொடுவாள்

தப்புன வந்தும் அவனை எதிரிய 

வன்கண் அழிய அளியள் ஆனாய்.

அம்நெளி நெறியிழை ஐம்பால் தீங்குரல்

கறங்கு வெள்ளருவி காட்சியின் மலியும்.

திங்கள் நீடியும் இருளே உனைத் தின்மோ

என இமைத்து இமைத்து ஓச்சிய கங்குல்

ஆறு போழ்ந்து வருதல் வேண்டா எனவும்

வேண்டி வேண்டி ப‌யிர்த்தாள் மற்று

ஆயிழை அவணே நனி நலிய மெலிந்தாள்.


_________________________________________________________


சனி, 11 பிப்ரவரி, 2023

அகழ்நானூறு 19

 அகழ்நானூறு 19

______________________________________

சொற்கீரன்.




எருத்தத்து இரீஇ வன் தொடை மணிவில்

ஏந்து அலைஞர் வெறிகொள் வன்சுரம்

கடவு எறி செலவின் நுழைபடுத்தாங்கு

பொருள்சேர் உலகம் புகுவதுள்ளி

நற்றிழை நலிய இறை ஊர்பு அறுவளை 

வளையின் நெகிழ நோதல் நன்றோ?

குளவிப்புதற் கண் அரவுஎறி அஞ்சி

பூவின் வள்ளிணர் விடுப்ப விழையா

அந்தொகை அவிர்க்குரல் அகவல் வரித்து

விரித்த பூவுள் நின் முகன் நோக்கும்.

கறிமுறி இவரிய கழைமுனை ஓடி

கடுவன் வேர்க்கும் மந்தி நகை ஊட‌

அஃதே ஒக்க அவனும் ஆங்கோர்

அழுவத்துக் கொல்முனை நத்தம் ஏகும்.

பொறிக்கண் பாம்பு பரலொடு சுருள‌

பாய்விரித்து துயில்மடிந்த வெங்கானம்

என்று மீளும் என்றோர் தீயின் மழையென‌

கனவின் மூழ்கும் முளவுமா முள்மாரி

பீய்ச்சும் அற்றை ஓர் அவள் துயிலிறந்த‌

கொடுவதை பானாட்கங்குல்.

இருள்சேர் இருவினையின் நீள் ஆற்று நின்

பொல்லா வேட்டம் போதும் போதும்.

கொலைதொழில் வம்பலர் குருதி நசையும்

வீளை அம்பின்  அதிர் விண்ணொலியில்

நெஞ்சு பிளந்தாள் இவள் நெஞ்சம் அறி.


__________________________________________________





 

ஐங்குறும்பாக்கள்

 ஐங்குறும்பாக்கள்

________________________________‍

சொற்கீரன்.



ரெண்டு எல போட்டாச்சு.

யாருக்கு

யார் பரிமாறுவது?


இடைத்தேர்தல்.

_____________________________________ 1


கடலில் இருந்தால் என்ன?

காகிதத்தில் இருந்தால் என்ன?

எழுத்துக்களின் கலங்கரை விளக்கம் இது


பேனா.

_______________________________________ 2


நான் வில்லைத்தான் முறித்தேன்.

இங்கே சொல்லையே

முறித்துக்கொண்டிருக்கிறார்களே.


ராமனும் ஜனநாயகமும்.

______________________________________3


கிர்பானும் டர்பனும் தானும்

இவர்களின் 

இரண்டு நுரையீரல்கள்.


பஞ்சாப்

_______________________________________4


பசுப்பெண்ணே! 

உன் மானம் 

பிழைத்தது.


பெப்ருவரி 14

________________________________________5




வெள்ளி, 10 பிப்ரவரி, 2023

செங்கீரனாக‌...


1 நபர் மற்றும் தாடி இன் படமாக இருக்கக்கூடும்

தோழர் நாராயணன்.

_______________________________________________


நான் 

செங்கீரனாக‌

கவிதைகள் 

எழுதிக்கொண்டடிருந்த நேரம்.

தோழர்! கவிதை அருமை!

என்று புன்முறுவல் உதிர்ப்பார்.

ஞானபீடங்கள் எல்லாம்

தோற்றுவிடும்.

சுதந்திரத்தின் "வெள்ளி விழா"வைப்பற்றி

"தோரணங்கள் ஆடுகின்றன"

என்று நான் எழுதிய கவிதை

"செம்மலர்" இதழில்

தலையங்கமாக பிரசுரம் ஆயிற்று.

இன்றும்

அந்த தோரணங்களில் 

அவர் சிரித்துக்கொண்டிருப்பதாக‌

நான் உணர்கிறேன்.


____________________________________________________

செங்கீரனாக‌...


அகழ்நானூறு 18

அகழ்நானூறு 18

_____________________________________________

சொற்கீரன்



கண்பொரி கவலைய வெஞ்சுர நீளிடை

நில்லா செலவின் நீடுபயில் ஆறு

கடந்து உழலும் கதழ்பரி செல்வ!

கூர் உளி குயின்ற பலகை நெடுங்கல்

வரி ஊர்பு நவின்ற வன்படு செருவின்

குருதி கொடிய நெளிகால் ஓடி

காட்சிகள் காட்டும் முரசுகள் முரலும்.

இறந்தவை இறந்தபோல் நடந்தவை நடந்தபோல்

நளி இரு துன்வெளி அழல் ஊழ்க்காற்றின்

இடைபோழ்ந்து இயலிய காட்டும் ஆங்கண்.

மள்ளற் களியர் மணிநிறக் காட்டில்

மரைகொல் அம்பின் வெறிஅயர் கூட்டும்.

ஆறுபடுவோர் உயிரும் பறிக்கும்

ஆறலை  வில்லியர் வெரூஉத் திரிதர‌

புறப்பொருள் தேடி அஞ்சல் தவிர்த்தாய்.

அகப்பொருள் ஆர்த்த நின் ஆயிழை ஒருபால்

நெறி இழை சூடி நெய்க்குரல் நீவி

நின் மீள்வழி நோக்கும். நல்லாள் தழீஇய‌

நெடுவிழி இமைப்பில் சிமைய வில் வாங்கி

வீழ்ந்து பட்டன்ன சிறைப்புள் போலும்

நனந்தலை யாத்து அஞ்சினை தவறி

யாது உற்றனை அடு துயர் இவணே.


_______________________________________________________


வியாழன், 9 பிப்ரவரி, 2023

ஐந்து குறும்பாக்கள்

 

ஐந்து குறும்பாக்கள்

_________________________________

ருத்ரா




காற்றில் கயிறு திரித்து

ஊஞ்சல் ஆடும் 

பணத்தோட்டம்.


பங்கு மூலதனம்.

___________________________________ 1



தினம் தினம் வந்து

மொட்டையடித்துவிட்டுப்போகலாம்.

முடி வளர வளர.


பெட்ரோல் விலை

______________________________________ 2



மணல் குவித்து 

உட்காரவேண்டாம்.

மடியில் வைத்தே சினிமா!


ஓ டி டி 

______________________________________3


சமூகத்தையும் காணோம்.

நீதியையும் காணோம்.

இரண்டுமே அநாதை இல்லங்களில்.


சமூக நீதி

_______________________________________4


எங்கு பார்த்தாலும் 

சன்னல்கள்.

வீடு எங்கே?


புத்தக விழாக்கள்.

_________________________________________5

புதன், 8 பிப்ரவரி, 2023

அயலி

 அயலி

___________________________________________

ருத்ரா


வயசா?

வயசுக்கு வருதலா?

எது முந்தி வருகிறது?

எது உந்தி தள்ளுகிறது?

மின்னலடிக்கும் 

பெண்மை

தனக்குள்

கருவில்லாமலேயே 

ஒரு பயம் எனும் கருவை

சுமக்கிறது.

பிறக்காமலேயே 

பிறக்கப்போகும் அந்த‌

சமுதாய அரக்கனின்

கொடுமைகள் 

எத்தனை? எத்தனை?

ராமாயி வயசுக்கு வந்துவிட்டாள்

என்று

அன்று ஒரு படம்.

மாமூலான அந்தக்கதைக்கருவுக்கு

கிராமத்து ராட்சசமும் மூர்க்கமும்

ஒரு நெஞ்சத்துக்கிள்ளலுக்கு

தீ வளர்க்கத்தான் செய்தது.

இன்று

சானிடரி நாப்கின் கூட‌

ஒரு கதாநாயகி அந்தஸ்தையும் மீறி

வளர்ந்து கிளர்ந்து இருக்கிறது.

கதையின் சமுதாயக்கனத்தை

அதன் வலிமிகுந்த பாரத்தை

எத்தனை தேசியவிருதுகளாலும்

இலேசாக்கி  விடமுடியாது

என்று இன்று

திரைப்படைப்பாளிகள்

காமிரா உளிகொண்டு

செதுக்கி 

சரித்திரம் படைத்திருக்கிறார்கள்.

பெண் 

பெண்களிடமிருந்து

பெண்மையிடமிருந்து

உண்மையை உரத்து சொல்லமுடியாத‌

ஏதோ ஒரு பிரபஞ்சத்துள்

மாட்டிக்கொண்ட‌

"ஏலியன்"தான்

அயலியா?

இந்த ஒரு எரிமலைப்புழுவை

லாவகமாக‌

தூண்டிலில் மாட்டி

திரைக்கடலில் வீசி

திரவியம் தேடிக்

கண்டு பிடித்திருக்கிறார்

இயக்குநர் 

திரு முத்துக்குமார் அவர்கள்.

தொலைக்காட்சித்தொடர்கள்

தொல்லைக்காட்சி இடர்களாக‌

மாறி விட்ட நிலையில்

இப்படியொரு

அருமைக்காவியம் எப்படி உருவானது

என்பதே பெரும் வியப்பு.

பெண்களை புண்படுத்தும்

ஒரு புண்ணிய பூமியாய்

பெண்ணை ஒரு பூமாதேவியாய்

புதைத்துக்கொண்டே

புராணங்களை

பாராயணம் செய்யும் 

ஒரு சேடிஸ தேசத்தில்

பெண்மை எனும் பெருவெளிச்சமே

மனிதம் சுடரச்செய்யும்

ஒரு பேராற்றல் என்பதை

சொல்ல வந்திருக்கும் இந்த படம்

விருதுகளால் அலங்கரிக்கப்படும் என்பதைவிட‌

இந்தப்படத்தால்

அந்த விருதுகள் தான்

உயரங்கள் எட்டும் என்பதே

மிக மிக உயரமான உண்மை.


__________________________________________________________

புதிய "பாகவதம்"கேளீர்

 புதிய "பாகவதம்"கேளீர்

_________________________________

ருத்ரா


"இறைவன் முன் 

எல்லோரும் சமம்.

உயர் சாதி என்பது

இல்லவே இல்லை.

சாதிகள் எனும்

பொய்மை

சாஸ்திரம் கூறிய‌

பண்டிதர்களால்

உருவாக்கப்பட்டது.

எல்லா மனிதர்களுக்குள்ளும்

கடவுள் இருக்கிறார்...."

ஆகா!

புல்லரிக்கிறது.

புளகாங்கிதம் அடைகின்றோம்.

அதோ

ஒரு கோபுரம் உயர்ந்து தெரிகிற‌து.

அது

நுரைக்கோபுரமா?

தரைக்கோபுரமா?

காலண்டர் தாள்கள்

உதிர்ந்து முடியட்டும்.

2024ல் தெரியும்.


__________________________________________________



செவ்வாய், 7 பிப்ரவரி, 2023

அகழ்நானூறு 17


கருவூர் நன்மார்பகனார் எழுதிய அகநானூற்றுப்பாடல் 277ன் (பாலைத்திணை) ஓவ்வொரு சொல்லிலும் மட்டும் அல்ல‌ அந்த சொற்றொடர்களின் இடைவெளியிலும் கூட தமிழ் யாப்பின் அளப்பரிய அழகும் ஆழமும் என்னை மூழ்கடித்துக் கிறங்கடிக்கிறது. அதன் விளைவே எனது இந்த அகழ்நானூறு 17.



அகழ்நானூறு 17

________________________________________

சொற்கீரன்


வெண்குடைத் திங்கள் பசலை பூத்து

பகலழித் தோற்றம் நோன்ற தகைமையில்

வட்டில் சோறு பாலொடு வழிய‌

விரல் அளைக்கோடுகள் வரிய வரிய‌

சிதர்சிதர்ந்து பசி இறந்து கண்கள் என்னும்

மைஆர் வெஞ்சுரம் அத்தம் நீள் அழுவத்து

கசிநீர் விசும்பில் கனவின் எரிந்தாள்.

கடையல குரலம் கழையூடு கஞல‌

அடர்வெங்கானம் நடைபயில் உழுவை

பைந்நிணம் கிழிக்க பாய்தந்தன்ன‌

பிரிதுயர் பிய்த்த உயிர்நைந்தாள் என்னே.

யா மரத்துச் சாமரத்தன்ன அணிநிரல் பூக்களின்

படுநிழல் ஆங்கு வேழம் கிடந்த உருசெத்து

வெரூஉம் அழல் அகைந்த அடல் ஆற்றின் கவலை

கடாத்து நீத்தவன் முள்வழி படர்ந்து

உள் உள் உருகுவள் அளியள் தானே.


_________________________________________________________-






எம் கே டி.....

 எம் கே டி

____________________________________________________-

ருத்ரா



எம் கே டி

இந்த மூன்றெழுத்தில் 

மூண்ட 

இசையின் இனிய தீக்கொழுந்துகள்

அன்று

ஏதோ ஒரு விரல் பட்ட‌

அழுத்தத்தில்

என்னை அந்த‌

கணிப்பொறி விசைப்பல‌கையின்

இசைப்புயலுக்குள்

மூழ்கடித்து விட்டது.

எத்தனை எத்தனை பாடல்கள்!

வரிசையாக 

அந்த இசை நயாகரா

கொட்டித்தீர்த்தது 

என் செவிகளுக்குள்.

கடைசிச்சொட்டாக‌

"அசோக் குமார்"ல்

அவரது

அந்த தாலாட்டுப்பாட்டில்

பொட்டென்று தெறித்தது

கண்ணீர்த்துளியின் 

அமிலத்துப் பிரளயமாய்.

சோகம் கூட‌

இனிமையை இப்படிப்பிழிந்து

பிரபஞ்ச ரசம் 

பெய்யுமா என்ன?

எம் கே டி என்னும்

வரலாறு 

காட்டாறுகளுக்கெல்லாம் 

காட்டாறு.

தெளிந்த ஓடைகளுக்குள் எல்லாம்

தெளிந்ததாய் 

பளிச்சிடும் பளிங்கின் தடங்கள்.


___________________________________________________







(வேவ் மெகானிக்ஸ்)

 அலையின் இயற்பியல்

___________________________________‍________ருத்ரா இ பரமசிவன்

(வேவ் மெகானிக்ஸ்)



ஒரு இயற்பியல் விஞ்ஞானி அவ்வாறு கருதப்பட ஒரு அவசியமான கோட்பாடு பற்றி அவர் என்னவென்று உலகினருக்கு தெளிவு படுத்த வேண்டும்.அது தான் குவாண்டம் இயற்பியல் அதாவது அளபடை இயல் ஆகும்.இந்த இயல் பற்றி எனக்கு இன்னமும் தெளிவு பிறக்கவில்லை என்று அவர் சொன்னால் கூட போதும். அதுவே அவர் குவாண்டம் பற்றி தொட்டுவிட்டார் அல்லது அறிந்து கொண்டுவிட்டார் என்று எல்லோராலும் போற்றப்படுவார்கள். உறுதிப்பாடின்மை  (அன்செர்டென்டி) தான் அந்த கோட்பாட்டின் அடித்தளம். இருக்குமா?இருக்காதா? நடக்குமா? நடக்காதா? என்ற உறுதியற்ற தன்மையே இங்கு இயக்கும் தன்மையாக இருக்கிறது. நிகழ்வின் தகைமையை இப்படி குறிப்பிடுவதே "ப்ராபபலிடி"ஆகும்.எனவே அளபடை இயல் என்பது அந்த "நிகழ்தன்மையை" ஒரு இயற்பியல் கணிதப்பாட்டுக்குள் கொண்டுவருவதே ஆகும்.எளிய் முறையில் சொன்னால் "ஆற்றல்" என்பது மேலும் கீழும் அசைவுறுவதாக இருக்கும் ஒரு அலைவடிவம் ஆகும்.


திங்கள், 6 பிப்ரவரி, 2023

துருக்கி சிரியா .....


துருக்கி சிரியா .......

_____________________________________


இந்த பூமி கொஞ்சம்

தும்மல் போட்டுவிட்டது..

அதற்கா

இத்தனை ஆயிரம் மக்கள்

பலியாகுவது?

இத்தனைக் கட்டிடங்கள்

குப்பைத்தொட்டிக்குள் கிடப்பது?

பூகம்பம்

பிரளயம்

சுநாமி

இதெல்லாம் இயற்கை நிகழ்வுகள்!

இல்லை இல்லை

இயற்கை சீற்றங்கள்!

இல்லை பூமியின் உள் அழுத்தங்கள்.

போலாரிடி..ரொடேஷன் அனாமலிஸ்..

இது சொல்கிறது

கடவுள் இல்லை.

இருந்திருந்தால்

அந்த கருணை வடிவம் தடுத்திருக்குமே.

கடவுள் இருக்கிறார்

அதனல்

தண்டனை வழங்கியிருக்கிறார்.

எதற்கு?

கடவுள் இல்லை என்று சொன்னதற்கு.

சரி 

இப்படியும் சிந்திக்கலாமே

கடவுள் இல்லை 

என்பது 

நமக்கு ஒரு எசசரிக்கையை

பாடம் நடத்தியிருக்கிறது.

விண்பிண்டத்தை

பல்லாயிரம் ஒளியாண்டுகளுக்கு அப்பாலும் 

சென்று துருவிக்கொண்டிருக்கிறாயே

நீ இருக்கும்

பூமியின் உள் நிலையை

உனக்கு உணர்த்தும்

ஏ ஐ எங்கே போனது?

அந்த சாட் ஜிபிடி

தகவல் களஞ்சியம் என்ன ஆனது?

அண்டத்து அண்டை மனிதன் 

ஏலியன் பற்றி

எத்தனை ஆராய்ச்சிகள்?

பூமிக்குள் இருக்கும்

பேரழிவுகளின் இந்த‌

பெருச்சாளிப்பொந்துகளைப்பற்றி

எப்போது 

முன் தகவல்கள் பெறப்போகிறாய்?

அந்த விஞ்ஞானமும் அஞ்ஞானமும்

எப்படியோ போகட்டும்.

விஞ்ஞானத்தின் அடுத்த பக்கம் அஞ்ஞானம்.

அஞ்ஞானத்தின் அடுத்த பக்கம் விஞ்ஞானம்.

போதும்  மனிதா!

இப்போது அந்த குப்பையில் கிடப்பது.

மனிதம்.

சமுதாய மனிதம்.

நம் உடனடி உதவிக்கரங்கள்

உள்ளன்போடு 

அங்கே விரையட்டும்.

எல்லாவற்றாலும் அந்த துயரச்சுவடுகளை

துடைத்திட வேண்டும்.

உள்ளே நொறுங்கிக்கிடப்பது

கடவுளும் தான்.

மனித அன்பின் ஊற்று 

சுரக்கட்டும்.

வாரீர் வாரீர்

மனிதம் காப்போம்.

____________________________________________________‍____

ருத்ரா

அகழ்நானூறு 16

அகழ்நானூறு 16

___________________________________________________________

சொற்கீரன்.



கடறு கடாஅத்த முள்ளிய ஆறும்

விடரகம் சிலம்பும் ஆளியின் முரலும்

விளரி நரம்பின் விண்தொடு பாலையும்

எவன் இங்கு தடுக்குன ஆகும்?

அந்தொடை யாழின் அணிநிரைக் கலித்த‌

அவள் இவணம் அவிழ்தரு நறு நகை 

ஐது ஆறு கனைகுரல் கதுப்பொடு அண்ணி

வெள் நள்ளருவி அன்ன ஆங்கு வீழ்த்தும்

வேங்கை நடுங்கிணர் ஒள்வீ செறிக்கும்

வாங்கமை இன் துளை வண்டின் இன்னிசை

அளபெடை யெடுத்து அகவல் நிரவும்.

இறைகொடு மூடும் மின்முகம் ஒளிர்ப்ப‌

அவள் நெட்டுயிர் பயிர்த்த கொடுவெண்

மூச்சில் இழைந்தான் மூள்சுரம் படர்ந்தான்.

காடுறை நெடுவழி ஒட்டாது உறையுனன்

ஒருபதி வாழ்தலும் ஆற்றுபதில்லன்

அவள் பூணாகம் முன்றில் நிழலாடு முத்தின்

வால் நகை வீங்கும் வானம் நோக்கி

கதழ்பரிய விரைஇ கால்பொருது ஓட‌

அவன் காதற்பெருமா கை பட்ட புயலென‌

கனவினும் முந்துறும் காட்சி தன் பின்னீர.


_________________________________________________________‍



அகநானூறு பாடல் 279ஐ இருங்கோயன் ஒல்லையாயன் செங்கண்ணனார் எனும் புலவர் பாடியுள்ளார்.மணிமிடை பவளம் எனும் பகுதியில் உள்ள பாடல் இது.ஒல்லை ஆயன் என்பது ஒல்லையூர்க் குறுமன்னன் என்பதையும் குறிக்கலாம்.

பொருள்வயின் பிரிந்த காதலன் செல்லும் வழியில் காதலியை கற்பனையில் கண்டு களித்து அந்த உந்துதலில் நீண்ட நெடிய காட்டுவழியை கடந்து செல்கிறான்.இது பாலைத்திணைக்குரியது.புலவர் கையாண்ட சொல் நுணுக்கம் மிக மிகச்செறிவானது அழகானது.அதன் சொற்றொடர்களில் சில அகழ்ந்தெடுத்து நான் பாடிய சங்கந்டைச் செய்யுட் கவிதையே இந்த அகழ்நானூறு 16.

_________________________________________________________________

சொற்கீரன்.





ஞாயிறு, 5 பிப்ரவரி, 2023

படிக்கட்டுகளில் ஒரு பல்கலைக்கழகம்.

 படிக்கட்டுகளில் ஒரு பல்கலைக்கழகம்.

________________________________________________


அந்த கோவில் படிக்கட்டுகளில்

வெளியே வந்து

தெய்வங்கள் 

பேசிக்கொண்டிருப்பது போல் தான்

எனக்குப்படுகிறது.

தெய்வங்கள் கொரானாவைக்கூட‌

"அவதார்"ஆக்கி

மனித உயிர்களை சுண்டலாக 

தின்றுகொண்டிருக்கும்

கால கட்டம் அல்லவா அது.

தெய்வங்களை வெளியே இழுத்துவந்து

உட்கார்த்தி வம்பு பேசினால்

அவைகளுக்கும் புரிந்து போகலாம்.

இந்த பயல்கள் எமப்பயல்கள்.

மனிதனை "ஏ ஐ"ல் பொம்மை செய்து

விளையாடுபவர்கள்.

அப்படித்தான் 

என்றோ எப்படியோ

நம்மைப்படைத்து இந்த 

கோவில் சிறைக்குள் பூட்டி வைத்து

அப்புறம் கொஞ்சம் திறந்து விட்டு

சப்பரம் செய்து 

கொட்டு முழக்கோடு

ஊர்கோலம் செய்து கொள்கிறார்கள்.

அது வெறும் அலங்கோலம்

என்று தெரிந்து கொண்டு தான்

பம்மாத்து செய்கிறார்கள்.

எமப்பயல்கள் இவர்கள்!

_______________________________________________

ருத்ரா

(this is a feedback to fb of sri sekar krishnasamy dt 06.02.2023)

தமிழா! தமிழா!!

 தமிழா! தமிழா!!


____________________________________


சொற்கீரன் 




என்ன அழைப்பு இது?


யாருடைய குரல் இது?


உன் குரல் 


உனக்குத் தெரியவில்லை.


உன் இனம்


உனக்கு உணர்வு இல்லை.


அயல் இனத்தானின்


வாளும் கத்தியும்


உன் இனத்தானின் 


நெஞ்சில் செருகுவதற்கும்


உன் கைகள் தான்


உதவிக்கு வருகின்றன‌


என்னும் 


ஓர்மையும் உனக்கு இல்லை.


ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக‌


நீ


இறந்து போன படுக்கையில் தான்


இருந்து கொண்டு


அட்டைக்கத்தியை


சுழற்றிக்கொண்டிருக்கிறாய்.


உன் முன்னோன்


வில் கொடி ஏற்றினான்


என்று


ஒலி பரப்பிக்கொண்டு


இந்த இமயத்தை 


நீ கொச்சைப்படுத்திக்கொண்டு


இருக்கிறாய்.


சினிமாவின் ஜிகினாவுக்குள் 


எந்த சூரியனை 


நீ கருதரிக்கப்போகிறாய்?


ஊள்ளூர் பரங்கிமலைச்சிங்கம்


என்று


அரித்தாரத்து அவதாரத்தை யெல்லாம்


பொதி சுமந்து கொண்டிருக்கிறாய்.


உன்னைத் திசை மாற்றும் 


தில்லாலங்கடிகளுக்குள் 


சட்டென்று ஒட்டிக்கொள்ளும் 


ஈசல் பூசசிகளாய் 


இறைந்து கிடக்கிறாய்.


அது வெறும் மையை 


கொப்புளித்த பேனாவா?


யாதும் ஊரே யாவரும் கேளிர் 


என்று 


கலங்கரை வெளிச்சமாய் 


நின்று கொண்டிருக்கும் 


கணியன் பூங்குன்றன் 


விதைத்த தமிழ்ச் சுவட்டை  அல்லவா 


நிமிர்த்திவைத்துக்கொண்டிருக்கிறது.


ஒரு ஆரிய சூழ்சசி அதை 


அடித்து நொறுக்க 


அலப்பறை செய்கிறது.


தமிழ்ப்பகையின் 


பொய் மீசைகள் 


முருக்கேற்றிக்கொண்டு 


மூர்க்கம் வளர்க்கின்றன.


கவனம் கொள் தமிழா!


தமிழ் மண்ணே தான் 


இந்தியா என்ன இந்தியா


உலகமெல்லாம் 


தூவிக்கிடக்கிறது


என்ற 


உண்மை என்றைக்கு


உன்னுள் ஒளி பாய்ச்சப்போகிறது?


உன் ஓலைச்சுவடியை 


முகர்ந்து பார்.


அதில் தெரியும் 


உன் உலகத்தின் வாசனை.


உன் உலகத்தின் 


உள்துடிப்பும் உள் உண‌ர்வும்.


தமிழா!தமிழா!!


மீண்டும் உற்றுக்கேள்.


எங்கோ "பெரு"விலிருந்தும்


அமெரிக்கச் சிவப்பு இந்தியக்குரலிலிருந்தும்


ஆப்பிரிக்க ஆஸ்திரேலிய‌


பழங்குடிகளின் 


வேர்வை மணத்திலிருந்தும்


பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு


வசன ஒலிகளிலிருந்தும்


பாரசீக அவெஸ்தா 


வரலாற்றுப்பாட்டுகளிலிருந்தும்


எகிப்து சுமேரிய‌


மற்றும்


எல்லா எழுத்துப்பூச்சிகளின்


ஊர்தல் வரிச்சுவடுகளிலிருந்தும்


உய்த்து உணர்.


தமிழா! தமிழா!!


தமிழ்க்குரல் கேட்கிறதா?




___________________________________________________












சனி, 4 பிப்ரவரி, 2023

ஒரு அஞ்சலி

 


இசைச்சுரங்கத்துக்கு

(வாணிஜெயராம்)

ஒரு அஞ்சலி

_____________________________________________‍

ருத்ரா




ஏழுசுரங்களுக்குள் 

எத்தனை ராகம்?

ராகங்களின் சுரங்கமே

வ்ழி கிடைக்காத 

ஒரு காலச்சுரங்கத்துள்

நுழைந்து விட்டீர்களே.

உங்களைப் பின் தொடர்ந்த‌

அந்த ஒலி அலைகள்

இனி 

பட்டினியில் வீழ்ந்திடுமே!

"மேகமே மேகமே.."

என்று நீங்கள் கூப்பிட்ட‌

உங்கள் அழைப்பில்

கண்ணுக்குத்தெரியாத 

ஒரு தாஜ்மகால்

கவிதையாகி நின்ற அந்த‌

கண்ணீர்த்தளும்பலில்

ஒரு பளிங்கின் சொற்கூடமாய்

சிரித்துக்கொண்டிருக்கிறீர்கள்.

எங்கிருந்தோ யாரோ 

சுழற்றி எறிவது போல் வீசிய‌

அந்த இசைத்தூண்டிலில் சிக்கிய 

மீனாய்

உங்களைத்தேடி துடித்துக்கொண்டிருக்கிறது

இந்த தமிழ் நாடு.

ஒரு மரணம் கவிழ்ந்து கிடந்து

கேவிக்கொண்டிருக்கிறது

ஒரு உயரிய 

வீணையை

வீணாக உடைத்து விட்டோமே என்று.

எங்கள் ஆழ்ந்த இரங்கல்களில்

உங்கள் பாடல்கள்

காலமாகாமல்

இன்னும் ஒலிக்கின்றன.


_________________________________________________________

புதன், 1 பிப்ரவரி, 2023

ஏன்?

 


என்ன செய்யப்போகிறாய்?

இது ஒரு சினிமாப்பாடல் வரி.

காதலியை நோக்கி 

தலையை சிலிப்பிக்கொண்டு

பல்லைக்கடித்துக்கொண்டு 

கேட்கும் கேள்வி இது.

ஓ! என்னருமை இளைய யுகமே?

உன் கேள்விகள் எல்லாம்

இந்த முட்டுச்சந்துக்குள் தான்

முடங்கிக்கிடக்கிறதா?

அந்த விளிம்புமுனையில் போய் நின்று

நொறுங்குவதற்குள்

உன்னை முகத்தில் அடித்துவிட்டு

ஓடும் 

அந்த நொடிகளை புறந்தள்ளிவிட்டு

கொஞ்சம் சிந்தனை செய்.

உன்னைச்சுற்றி சுழன்று அடிக்கிறது

நெருப்பின் பெரும்புயல்.

இந்த சமுதாயம் முழுவதுமே

சாம்பல் மேடுகளாய்

எஞ்சி நிற்கப்போகும்

ஒரு நாகரிகப்பேரழிவு

உன் முதுகுப்பக்கம் 

நின்று கொண்டிருக்கிறது.

ஆம்.

என்ன செய்யப்போகிறாய்?

அதே கேள்வி தான்.

நீ மீண்டு கொள்ளவேண்டும்.

இந்த மண்ணை 

இந்த கனவை

இந்த மக்களின்

பேரழிவை

நீ தடுத்தாட்கொள்ளும்

தருணம் இது.

ஏன்?

என்ன ஆச்சு?

இந்த கேள்விக்கும் கூட‌

உன் சுநாமிக்குள் தான்

எல்லாம் இருக்கிறது.

விழித்தெழு!

சிலிர்த்தெழு!

சினந்தெழு!

சீறியெழு!


_________________________________________________________

அகழ்நானூறு 15

 அகழ்நானூறு 15

___________________________________________

சொற்கீரன்




"வாட்சுறா வழங்கும் வளைமேய் பெருந்துறை"

_____________________________________________________


வாட்சுறா வழங்கும் வளைமேய் பெருந்துறை

கண்பதித்து வழிபூத்த விழிமீன் துள்ளுநிரை

எல்மேவு அகல்வானின் கவுள்வெள்ளி வேய்விரீஇ

முகை அவிழ்க்கும் மெல்லிமிழ் நின் நகை 

கண்டல் அல்லது யாது உற்றனள்.

கூன்முள் முள்கு குவித்தலைப் பெருமீன்

குய்தர பொங்கும் நுரைகடல் சேர்ப்ப!

திரை திரை பாய்ந்து துறை துறை ஊர்ந்து

ஞாலத்து உப்பக்கம் நெடுங்கரை சேர்ந்து

கனைபடு பல் ஒலி பல் தேஅத்தும் ஊடி

மறைபடு மொழிகள் பல ஈண்டு கொணர்ந்து

செறிதமிழ் அடர்த்தி செந்தமிழ் ஈன்று

செம்மை நன்மொழி ஆக்கிய திரைஞர்

திரை இடத்துப் பட்டினம் தந்தனர் தமிழர்.

அன்னவன் நின்னவன் ஆருயிர்த்தமிழன்.

முன்னீர்ப்பரவை முளிஅலை வென்று

திரைவியம் தேட நீலப்படுகை நெடும் ஊழ்

கடாஅ யானை அன்ன எழுந்து அதிரச் சிதைஇ

ஆழ்கடல் ஆளும் தகைமை ஆயிரம் இறந்து

உலகு வியப்ப விண்ணும் அளந்த‌

பெரியோன் என்ன உன்னை ஒருசிறை

பெயர்த்துப் பெயரத் தந்தோன் வரூஉம்.

எறி எல் நாளும் பூக்கும் அவிழ்க்கும் 

அணிநிரல் வென்றிக் கொடி கொண்டு

ஆயிழை உன்னைத் தழீஇயத் தந்திடும்

நெடும்பணைத்தோளொடு விரையும்  மன்னே.

___________________________________________________________