வியாழன், 30 ஏப்ரல், 2020

கொரோனா ராஜ்யம்.

கொரோனா ராஜ்யம்.
=====================================ருத்ரா

நீங்க என்னை வச்சு செய்றீங்களா?
நான் உங்களை வச்சு செய்றேனா?
கேள்வி ஓடிகிட்டே இருக்கு
அதற்கான பதில்
மூச்சு வாங்க வாங்க‌
ரொம்ப ரொம்ப பின்னால
வந்து கிட்டிருக்கு.
என்னத் திருடன் திருடன்னு
விரட்டிகிட்டே வந்து
ஒரு சந்துக்குள்ள வச்சு
அந்த திருடங்ககிட்ட‌
செமத்தியா ஒரு தொகையை
கொடுத்துட்டாங்க.
அது இருந்தா
பட்டினி பஞ்சம்னு வாடிகிட்டு
இருக்கிற மக்களுக்கு கொடுக்கலாம்ல.
ஓம் வேலையைப்பாத்துகிட்டு
போடாண்றாங்க‌
என்னயப்பாத்து.
ஆயிரத்தெட்டு முக்காடு போட்டுகிட்டு
மூக்கப்பொத்தி
மொகத்தப்பொத்தி
எல்லாரும் ஜோரா ஒரு வாட்டி
கையத்தட்டுங்கன்னு சொல்லிகிட்டு
வெளக்கேத்துங்க‌
மூதேவி போய் லெட்சுமி வருவான்னு
புராணம்பேசிகிட்டு
ஓட்டை சோதனக்கருவிகள வாங்கி
கோட்ட விட்டுட்டு
வயிறு முக்கியமா?
உயிரு முக்கியமா?ன்னு
கேட்டுக்கிட்டே
கொத்து கொத்தா
உயிரோடு வயிறுகளையும்
பலி கொடுக்கும்
சாணக்கிய சாஸ்திரங்களை
வச்சு வச்சு செய்யும்
நீங்க கொரோனாவா?
நான் கொரோனாவா?
.......
இந்த கேள்விக்கு பதில் சொல்லலேனா
உன் தல சுக்கு நூறா வெடிச்சிடும்னு
வழக்கமான கேள்விய
வேதாளம் கேக்க‌
விக்கிரமனும் அந்த‌
அட்டக்கத்தி எனும்
ஓட்டுகளை நீட்ட...
கதை தொடர்கிறது.
குரல் முழக்கும்
பறவைகளின்
கூடு அடங்கி
வீடு அடங்கி
ஊர் அடங்கி
நாடு அடங்கி
முடங்கிக்கொண்டது.
ராமராஜ்யத்துக்கு
ஆயிரம் அடிக்கு மேல்
சிலை யெழுப்பி
சம்ப்ரோக்ஷணம் செய்தாலும்
கொரோனா ராஜ்யம்
நம் மூக்கு அருகே
கை கொட்டி சிரிக்கின்றது.

======================================


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக