சூரிய முட்டைகள்
=======================================================
ருத்ரா இ . பரமசிவன்
பச்சைப்புல் வெளிஇடுக்குகளில் யில்
நடந்து கொண்டிருந்தேன்.
மேலே
கவிந்த அடர்த்தியான இலைகளில்
குடை
பிடித்துக்கொண்டிருந்தது
ஒரு மரம்.
இலை இடுக்குகளின் கந்தல்கள் வழியே
ஒழுகியிருந்தது சூரியன்.
சூரிய முட்டைகளாய்
ஒளிப்பிழம்பின் திட்டுகள்
அங்கே
என்னைத் திடுக்கிட வைத்தன.
நம் கால் பட்டு
அவை கசங்கிப்போவதோ?
விடியல் தேடும் கண்களுக்குள்
ஆயிரம் கனவுகள்.
இந்த முட்டைகளை
தாயின் மடியாய்
இந்தப் பச்சைப்புல் விரிப்பே
அடைகாக்கட்டும்.
நம் நீண்ட இருட்டின் குகைக்காட்டில்
ஒரு சிறகு முளைக்கட்டும்.
நான் அந்த நிழலை தவிர்த்து
வெயிலுக்குள் நடந்தேன்.
====================================================================
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக